articles

img

கணக்கோடு ‘கை’ கோர்க்கலாம்

சூப்பர். நீங்க நிறைய பேரு லெட்டர் போட்டுரிக்கீங்க. நன்றி. பலரும் பலவிதமான பேட்டன் உருவாக்கி இருக்கீங்க. மிக்க நன்றி. பார்க்கவே சந்தோசமாக இருக்கு. கணக்கை தன் கையோடு கோர்த்துக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறத பார்க்கிறப்போ பெருமையா இருக்கு. நாம தொடர்ந்து கை கோர்த்து செல்வோம்.  நீங்க கேட்டிருந்தீங்க அந்த எலும்புல எத்தன கோடு இருந்துச்சு. அதுப்பத்தி ஆய்வு செஞ்சாங்களான்னு வேறு கேட்டிருந்தீங்க. நல்ல கேள்வி. உண்மையிலேயே ஒரு அற்புதமான ஆய்வு நடந்திருக்கு. இந்த எலும்புகள கண்டிபிடிச்சவரு ஜீன் டி ஹய்ன்சலின். இவர் ஒரு புவியியலாளர். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். இந்த எலும்புகள இருபதுக்கும் மேற்பட்ட கதிரியக்க சோதனைக்கு உட்படுத்தியிருக்காங்க. அதுலதான் இதன் (லெபோம்போ) வயது 42 ஆயிரம் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நமக்கு இதிலிருந்த மனிதன் குடியிருப்பாக வாழ தொடங்கியது 42 ஆண்டுகளுக்கு முன்னாடி என்பதை தெரிஞ்சுக்கலாம். இந்த காலத்திலேயே பல குடியிருப்புகள் உருவாகியிருக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம் இந்த பரிசோதனையில இந்த குடியிருப்பு பகுதி எரிமலை வெடிப்பால் அழிந்திருக்கலாம் என்கிறது. சரி நாம கணக்க பாப்போம். இந்த எலும்புல மொத்தம் 29 கோடுகள் இருக்கு. இதன் நீளம் 7.7 செ.மீ. இதன் கோடுகள் சற்று சாய்வாக உள்ளது. நேர்கோடுகளாக இல்லை. ஆகையால் நிலா தன் சுற்று பாதையில் பூமியை ஒரு முறை சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவை குறிக்கிறது. இதன் மூலம் வானியலையும், காலநிலையையும் அறிந்து கொள்ள அவர்களால் முடிந்துள்ளது.  விவசாயிகள் பருவகாலத்தை இதன் வழியாக கண்டுபிடிச்சு விவசாயம் செஞ்சுருக்காங்க. அதே சமயம் வானியல் குறித்த தகவல்களையும் தெரிஞ்சுருக்காங்க.

இந்த எலும்புகளை உருவாக்குனது யாரு? அப்படிதான கேக்குரீங்க. ம்.. இத உருவாக்குனது ஒரு கருப்பின தாய்தான். அவங்கதான் எண்ணை கண்டுபிடிச்சிருக்கனும். அவங்களுக்கு இயற்கையாக வரும் மாதவிடாய் காலத்தை தான் 29 கோடுகளாக போட்டிருக்காங்க. இதன் மூலமாக அடுத்த மாதவிடாய் காலத்தை தெரிஞ்சுக்க முடிஞ்சிருக்கு. அதே சமயத்துல தாம் கருவுற்று இருப்பதையும் இத வச்சே தெருஞ்சிருக்காங்க. இப்ப தெரியுதா யாரு கணக்க கண்டுபிடிச்சதுன்னு. அந்த கருப்பு அம்மாதான் உணவுகள தேவைக்கு அளவாக பிரிச்சு கொடுத்துருக்காங்க. ஆடு, மாடுகள கணக்கு பாத்திருக்காங்க, தங்களுக்கு தெரிஞ்ச வகையில இருந்த இடத்திலேயே குறிச்சு வச்சிருக்காங்க. இப்படிதான் நாம வடிவங்களிலிருந்து எண்ணுக்கு வந்திருக்கோம். இப்ப வடிவங்களும் எண்களும் நமக்கு தேவையை பொருத்து தெரிஞ்சிக்கிட்டோம் தானே. அந்த கருப்பு அம்மாவின் கணக்கோடு கை கோர்ப்போம்… இப்ப ஒரு செவ்வக பேப்பரை எடுத்துக்கங்க அதை ரெண்டா மடிச்சுக்கங்க. மடிக்கப்பட்ட பகுதியில உங்களுக்கு பிடிச்ச படத்த வரையுங்க. வரையப்பட்ட கோட்டு மேலே வெட்டி எடுத்துட்டு பாருங்க. என்ன பாக்குரீங்க என்பத ஒரு போஸ்ட் கார்டுல எழுதி போடுங்க. இது மாதிரி உங்க பள்ளிக்கூடத்துல காகிதத்துல பூ செய்வதற்கு சொல்லிக் கொடுத்திருக்காங்களா. அப்படின்னா அது பற்றிய உங்கள் அனுபவத்தையும் எங்களுக்கு எழுதுங்க.