articles

img

நிர்மலா சீதாராமனின் ‘சாதனைகளைப்’ பாரீர்! - டி.கே.ரங்கராஜன் மூத்த தலைவர், சிபிஐ(எம்)

மதுரையில் உள்ள தியாகராஜர் கல்லூரியில் கடந்த நவம்பர் 20 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் கோவில் சொத்துக்களை திருடுகிறார்கள்; அவை எங்கே கொண்டு செல்லப்படுகின்றன என்று தெரிய வில்லை எனப் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைப் போலவே நிர்மலா சீதாராமனும் நாட்டின் பொரு ளாதார வளர்ச்சிக்கு தங்களது அரசு செய்த சாதனை களைப் பற்றி பேசுவதற்கு பதிலாக திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  இந்தியப் பொருளாதாரத்தில் சொல்லிக் கொள்ளும் படியாக கடந்த பத்தாண்டுகளில் எந்தச் சாதனையையும் பாஜக ஆட்சியாளர்கள் நிகழ்த்த வில்லை. அதிலும் நிர்மலா சீதாராமனின் தலைமையி லான நிதி அமைச்சகம் குறிப்பிடத்தக்க எந்த பங்கி னையும் ஆற்றவில்லை. 

‘V’ வடிவமா? ‘K’ வடிவமா?

மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதா ரத்தில் மீட்சி ஏற்பட்டுள்ளதாக ஆட்சியாளர்கள் சொல் கிறார்கள். ஆனால் அது அவர்கள் சொல்வது போல  V வடி வத்தில் அல்ல;  K வடிவத்தில் செல்கிறது என்று பொ ருளாதார அறிஞர்கள் விரிவாக விவரிக்கிறார்கள்.  V வடிவம் என்பது, பொருளாதார மந்த நிலையிலி ருந்து அனைத்து துறைகளும், அனைத்துத் தரப்பின ரும் ஒரே நேரத்தில் ஒரே பாதையில் மீட்சி பெற்று வருகிறார்கள் என்று பொருள் படும். இந்தியாவில் பெருமுதலாளிகள், கார்ப்பரேட்டுகள் ஆகியோரோடு சேர்ந்து ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களும் சிறு, குறு, நடுத்தர தொழில்களும் ஒரே விதமான வளர்ச்சி யை, மீட்சியைப் பெற்று வருவதாக பாஜக ஆட்சி யாளர்கள் கதைக்கிறார்கள். 

K வடிவம் என்பது, ஒரு புறம் செல்வம் குவிந்த வர்கள், பெருமுதலாளிகள், கார்ப்பரேட்டுகள் மேலும் மேலும் செல்வத்தை குவித்துக் கொண்டி ருக்கிறார்கள்; மோடி அரசின் அனைத்துவிதமான சலுகைகளோடும் அவர்கள் ஒட்டுமொத்த இந்திய மக்களின் வியர்வையை ஒட்டச் சுரண்டுகிறார்கள்; மறுபுறம், ஏற்கெனவே வறிய நிலையில் உள்ள, வாழ்வா தாரம் பறிக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்கள், விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் வணி கர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் துயரத்தின் பிடியில் சிக்கி மேலும் மேலும் கீழ்நிலையை நோக்கி செல்கிறார்கள் என்பதுதான். உண்மையில் இந்தியப் பொருளாதாரத்தின் மீட்சி என்று சொல்லப்படுவது மேற்கண்ட K வடிவத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது. செல்வந்தர்களும் மகா கோடீஸ்வரர்களும் கார்ப்பரேட் கம்பெனிகளும் மேலும் மேலும் செல்வங்களையும் மூலதனத்தையும் குவிக்கின்றன. மறுபுறத்தில் தொழிலாளர்கள், விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் - சிறு, குறு வணி கர்கள், நடுத்தர வர்க்க மக்கள் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி பேசுவதற்கு நிர்மலா சீதாராமன் ஏன் தயாராக இல்லை?

சிறு சேமிப்பு வீழ்ச்சி, ஏன்?

K வடிவத்திலான மீட்சியை விளக்க ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. இந்திய நாட்டில் குடும்பங்களின் சிறு சேமிப்பு கடந்த 50 ஆண்டு களில் இல்லாத அளவிற்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 2020-21 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.5 சதவீதமாக இருந்த குடும்ப சிறு சேமிப்பின் பங்கு 2021-22 நிதியாண்டில் 7.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது; இது 2022-23 நிதி யாண்டில் வெறும் 5.1 சதவீதமாக மேலும் சுருங்கி யது. ஏராளமான மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைச்  செலவினங்களுக்கே கடன் வாங்கி சமாளிக்கின்றனர். இதன் மூலமாக பலரும் கந்துவட்டி கொடுமையின் பிடியில் சிக்குவது அதிகரித்து வருகிறது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட விபரங்கள் உறுதி செய்கின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வாழ்வியலுக்கான அனைத்துப் பொருட்களின் விலை உயர்வும், பணவீக்கம் மேலும் மேலும் அதிகரிக்க இட்டுச் செல்கிறது. இதன் தொடர் விளைவாக மேலும் விலைவாசி அதிகரிக்கிறது. இதன் காரணமாக மக்களின் வருமானம் வற்றி, எதை யுமே சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஏராளமா னோர் திவாலாகியுள்ளனர். நடுத்தரக் குடும்பங்க ளின் நிகர சொத்துக்கள் மிக வேகமாக வற்றி வரு கின்றன. தனிநபர் கடன் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. கோவிட் தொற்றுக்குப் பிறகு இந்தியப் பொருளா தாரம் இன்று வரை வளர்ச்சி என்பதை தொட முடிய வில்லை. அடகுக் கடைகளில் தங்கத்தை அடகு வைப்பது என்பது கொரோனாவுக்கு முன்பு 23 சதவீதமாக இருந்தது; தற்போது 30 சதவீதமாக அதி கரித்துள்ளது. மீட்க முடியாத தங்க நகைகளை விற்று பணமாக்கிக் கொள்ளுங்கள் என்று  விளம்ப ரங்கள் அதிகரித்து வருவதை காணலாம்.

மூடு விழா காணும்  சிறு குறு தொழிற் கூடங்கள்

இந்த காலக்கட்டத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மிகக்கடுமையான தாக்குதலுக்கு உள்ளா கியுள்ளன. ஏராளமான நிறுவனங்கள் மூடுவிழா கண்டுள்ளன. சிறு, குறு,  தொழில் முனைவோர் பலர் திவாலாகிவிட்டனர். வேலைவாய்ப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் வீழ்ச்சியால் வேலையின்மை அதிவேகத்தில் அதி கரித்து வருகிறது. 2020க்கு முன்பு இந்தியத் தொழிலா ளர் படையில் 43சதவீதம் தொழிலாளர்கள் வேலையில் இருந்தனர். 2020க்குப் பின்பு கடந்த மூன்றாண்டுக ளில் 40சதவீதமாக குறைந்துள்ளது. அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆய்வில் 25 வயதுக்கு குறைவான இளைஞர்களில் 42 சதவீத பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். 

ஐ.டி.துறை இளைஞர்களின்  கதி என்ன?

தகவல் தொழில்நுட்பத் துறையிலும் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது வேலை யின்மை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் 10 மென்பொருள் சேவை நிறுவனங்களில் மொத்தம் 20 லட்சத்திற்கும் அதிகமான மென்பொறியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 2023 செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த கடந்த ஆறு மாதங்களில் கணிசமான மென்பொறியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். வீதிக்கு துரத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளிலேயே நேரடியாக சென்று வளாகத் தேர்வு நடத்தி வேலைக்கு ஆள் எடுப்பதை விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் கைவிட்டுள்ளன. 

அப்பட்டமான தோல்வி

இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதிலும் வளர்ப்ப திலும் மோடி அரசும் அதன் கொள்கைகளும் அப்பட்ட மாக தோல்வி அடைந்துள்ளன. இந்தியத் தொழில், வர்த்தகத்துறையை மோடி அரசின் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டுக் களவாணி முதலாளிகள் கைப்பற்றி யுள்ளனர். ஒட்டுமொத்தமான லாபத்தில் 80 சத வீதத்தை வெறும் 20 மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவ னங்கள் கொள்ளையடித்துச் செல்கின்றன. இவர்க ளுக்குத்தான் மோடி அரசு கிட்டத்தட்ட 25 லட்சம் கோடி ரூபாய் கடன்களை ரத்து செய்துள்ளது.  இந்திய கிராமப்புறங்களில் மக்களின் வாழ்வியல் மிக மிக கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி யுள்ளது. அவர்களது வருமானமும் வாங்கும் சக்தி யும் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கியுள்ளதன் விளைவாக கடந்த நான்கு மாத காலமாக அத்தொழிலாளர்களுக்கு கூலி கிடைக்க வில்லை. கிராமப்புற விவசாயிகளின் நலிந்த நிலை குறித்து மாநில அரசுகளே ஆய்வு செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது. அதேபோல மிக முக்கிய தொழில்களான பஞ்சாலைகள், விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட ஜவுளி தொழில்துறை சொல் லொண்ணாத் துயரத்தில் சிக்கியுள்ளது. அத்தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் சுருங்கி வருகிறது. ஜவுளி உள்பட பலதுறைகளில் அமலாக்கப்பட்டுள்ள தாராள வர்த்தக உடன்பாடுகள் இத்தொழில்களை சிதைத்து  வருகின்றன.

நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது, அதில் பிரதான கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் நிர்மலா சீதாராமன், ஆல யங்களை முன் வைத்தும், கடவுளை முன் வைத்தும்  அரசியல் செய்ய முயற்சிக்கிறார். தமிழ்நாட்டில் கோவில் களில் திருட்டுப் போவதாக புதுக்கரடி விடுகிறார்.  மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், அண்ணா மலை உள்பட பாஜகவின் அனைத்து பிரமுகர்களும் நிர்வாகிகளும் பொய்களையும், அவதூறுகளையும் பரப்புவதையே வேலையாகக் கொண்டிருக்கிறார்கள். உண்மைகள் சுடுவதால் அவற்றை மறைக்க முயல் கிறார்கள். இதை மக்களிடம் அம்பலப்படுத்துவோம். இத்த கைய பொய்யர்களை ஆட்சியிலிருந்து அகற்ற வாழ்வா தாரங்களுக்கான போராட்டங்களில் தொழிலாளர் - விவசாயிகளை அணி திரட்டுவோம்.