articles

img

இது போதுமா? இன்னும் வேண்டுமா? - ஆர்.சிங்காரவேலு

தமிழ்நாட்டு நாளிதழ்களில் பாஜக தனது “சாதனைகள்” பற்றி பக்கம் பக்கமாக விளம்பரங்கள் தருகிறது. அவை அனைத்துமே வெற்றுப் பசப்புகள்தான் என்பதை நாடறியும். பாஜகவை வீழ்த்துவதற்கு உரிய காரணங்களை நாமும் பக்கம் பக்கமாக அடுக்கிக் கொண்டே போகலாம். இதோ சில முக்கிய காரணங்கள்:

1    தேர்தல் பத்திர நன்கொடை, வரலாற்றிலேயே மிகப்பெரும் ஊழல். ஊழல், கிரிமினல் குற்றங்கள், மற்றும் கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தின் மொத்த வடிவம் பாஜக. 
2    கேமராவிற்கு முன்பே நடந்த சண்டிகர் மேயர் மோசடி தேர்தல். ஜனநாயக படுகொலை, ஜனநாயக கேலிக்கூத்து என உச்ச நீதிமன்றமே எள்ளி நகையாடியது.
3    கொரோனா பெரும் தொற்று காலத்தில், இந்திய மக்களை மோசடி செய்த பதஞ்சலி நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உடந்தையாக இருந்தது.
4    2022-க்குள் விவசாய வருமானம் இரட்டிப்பாகும் என்ற பொய் வாக்குறுதி. வழக்கத்தைவிட விவசாய வளர்ச்சி விகிதம் குறைந்தது.
5   வரலாறு காணா வேலையின்மை! ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என பொய் வாக்குறுதி, கூச்சம் இல்லாமல் கூறியது. 
6    25 எதிர்க்கட்சித் தலைவர்களில், 23 பேர் மீதான வழக்குகள், பாஜகவில் இணைந்த பிறகு தள்ளுபடி.  பாஜகவிடம் உள்ள நவீன வாஷிங் மெஷின் ஊழல் பேர்வழிகளையெல்லாம் அரிச்சந்திரன்களாக மாற்றுகிறது.
7    எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளில் 95%  மத்திய புலனாய்வுப்பிரிவு, அமலாக்கப் பிரிவு, வருமான வரி துறைகளால் பதிவு செய்யப்பட்டவை.
8    கொரோனா காலத்தில் நம் நாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர். 2021இல் கொரோனா இரண்டாவது அலையின் போது, நாம் பட்ட கஷ்டங்களை மறக்க முடியுமா?
9    உலகில் எங்குமே இல்லாதவாறு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றது.
10   எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் அரசியல் ஈனச் செயலில்     பாஜக உலக சாதனை!
11    2014-24-ல், 10 ஆண்டுகளில் ‘எம்எல்ஏ பங்குச் சந்தை’ (அதாவது, குதிரை பேரம்) உச்சத்தை எட்டியது.  எதிர்க்கட்சி ஆளும் பல மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டன. இந்த அரசியல் வியாபாரத்திற்கு பாஜகவிற்கு பணம் எப்படி கிடைத்தது?
12 சங்பரிவார வன்முறை கும்பல்கள் - பசுக்குண்டர்கள், மாட்டுக்கறி உண்பவர்கள் மற்றும் மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களைத் தேடித் தேடி கும்பலாக சென்று தாக்கியும் படுகொலை செய்தும் அரங்கேற்றிய பயங்கரங்கள்.
13 வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 150 பேர் கொல்லப்பட்டனர்; 50,000 பேர் வீடு இழந்தனர். பத்து மாதமாக மணிப்பூர் பிரச்சனை தீவிரமாக இருந்தும், நாட்டின் பிரதமர் ஒரு முறை கூட மணிப்பூர் செல்லவில்லை.
14  பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாக பெற்ற நீரவ் மோடி, லலித் மோடி, மெகுல் சோக்ஸி, விஜய் மல்லையா  போன்றோரை வெளிநாடுகளுக்கு தப்பி ஓட அனுமதித்தது - அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வந்து விசாரிக்காதது.
15  இந்தியாவின் லோக்பால் யார் ?2014 முதலாக ஊழலுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தகவல் பெறும் உரிமை சட்டம், லோக்பால் சட்டங்களை நிறைவேற்றியது. லோக்பால் என்பது ஊழல் எதிர்ப்பு மையம். ஆனால் மோடி அரசு அதை கிடப்பில்போட்டது.
16  2021 டிசம்பரில் ஹரித்துவாரில் நடைபெற்ற இந்து சன்னியாசிகள் மாநாட்டில் (தரம் சன்சத்), ‘முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்’ என பகிரங்கமாக பேசப்பட்டது. ஆட்சியாளர்களோ மௌனம் சாதித்த கொடுமை!
17 உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றியதில்  ரூ. 7.75 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டை ஒன்றிய அரசின் தலைமை தணிக்கை அதிகாரி (சிஏஜி) கூறினார். பெரிய ஊடகங்கள் இதை இருட்டடிப்பு செய்தன!
18 ரபேல் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து வாங்கியதில் மெகா ஊழல்! இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பொதுத்துறை கம்பெனியை புறக்கணித்து, அதானிக்கு சாதகமாக ஏன் நிலைப்பாடு எடுக்கப்பட்டது?
19 அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டிய அதானி குரூப்பின் பங்குச் சந்தை ஊழல் குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை?
20 கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு பத்திரிகை நிருபர் கூட்டத்தையும் பிரதமர் கூட்டவில்லை! ‘உலக சாதனை’ இது!
21 2002இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின் போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த 11 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தார்கள். தண்டனைக் காலம் முடியும் முன்பே, 2022ல் 75வது சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்டது ஏன்? 
22 மல்யுத்த சம்மேளன தலைவர் - பாஜக எம்.பி., மல்யுத்த வீராங்கனைகளுக்கு இழைத்த பாலியல் பலாத்காரக் கொடுமைகள் குறித்து, பல மாதங்கள் தில்லியில் பெண்கள் போராடிய பிறகும் பாஜக அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
23  2019ல் புல்வாமா தாக்குதலில் 40 இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அப்போதைய ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் மௌனம் சாதிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டார். மிலிட்டரி டிரக்குகளில் சிப்பாய்களை காஷ்மீருக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக, ராணுவ விமானங்களை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது சத்ய பால் மாலிக் கருத்து.
24  16 முதல் 20 லட்சம் இந்தியர் தங்கள் இந்திய குடியுரிமைகளை ரத்து செய்துவிட்டு, வெளிநாட்டு பிரஜைகளாக மாறியது ஏன்? ‘நல்ல காலம் பிறக்குது’ என்பது இதுதானா?
25பிரிட்டிஷ் காலத்தை விட மோசமான அசமத்துவம் தற்போது நிலவுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சதவிகித உயர்தட்டு மக்கள், நாட்டின் 40 சதவீத சொத்துக்களுக்கு அதிபராக மாறி உள்ளனர்.
26  சராசரியாக 30 சதவீதத்திற்கு மேல் குழந்தைகள் உயரத்திற்கு தகுந்த எடையில்லை; வயதிற்கு தகுந்த உயரம் இல்லை; ஆனாலும் சுகாதார பட்ஜெட் நிதி ஒதுக்கீடு கூடவே இல்லை.
27   57%க்கு மேல் இந்தியர்களுக்கு மாதம் 5 கிலோ அரிசி /கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்பது எதைக் காட்டுகிறது? ஐந்தாண்டுகளுக்கு வறுமை ஒழிப்பு திட்டங்கள் எதுவும் இருக்காது; 57% பேர் வறுமையில் வாடுகின்றனர் என்பது தானே?அமிர்த காலம் என்பது இதுதானா?
28   ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), சராசரியாக ஆண்டுக்கு 7.8 சதவீதம் வளர்ந்தது. ஆனால் 2014-24ல் ஜிடிபி ஆண்டு சராசரி வளர்ச்சி 
5.9% மட்டுமே. குறிப்பாக 2019-24 ஐந்து ஆண்டுகளில், சராசரி ஆண்டு ஜிடிபி வளர்ச்சி 4.1 சதவிகிதம் மட்டுமே.
29   மேக் இன் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் என பாஜக கூறுவது வெற்று வார்த்தைகளே! இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்கு 14 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
30   தகவல் பெறும் உரிமைச் சட்டம் நீர்த்துப் போய் வருகிறது. உண்மைத் தகவல்கள் பொதுமக்களிடம் போய் சேரக்கூடாது என்பதில் பாஜக அரசு கவனமாக உள்ளது.
31   2023 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 146 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களோ, விவாதமோ இன்றி மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டன.
32   பாஜக சங் பரிவாரம் வெறுப்பு அரசியலை தீவிரமாக பரப்பி வருகிறது. இதன் எதிரொலியாக ஜெய்ப்பூர்- மும்பை ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போதே, ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், முஸ்லிம்களாக தேடிக் கண்டுபிடித்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம், நாட்டையே உலுக்கியது.
33   பெகாசஸ் உளவு அமைப்பை பயன்படுத்தியும், இன்ன பிற வழிகளிலும் எதிர்க்கட்சிகளை, தலைவர்களை உளவு பார்ப்பது, போன் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பது, தரவுகளை களவாடுவது போன்ற மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை பாஜக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.
34   ரமேஷ் பிதூரி என்ற பாஜக எம்.பி., நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, முஸ்லிம்களை கொச்சைப்படுத்தி மிகவும் ஆபாசமாக பேசினார். அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
35   பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமே 75 சதவிகித வெறுப்பு     
பேச்சுகள் நிகழ்ந்துள்ளன.
36தேர்தல் பத்திரங்கள் குறித்த முழுமையான ஆய்வை நடத்த விடாமல், ஒன்றிய அரசு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை பயன்படுத்தி தடையாக செயல்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்புகளால், தேர்தல் பத்திர ஊழல்கள் அம்பலமாகின.
37  உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் திடீரென ராஜினாமா செய்து விட்டு, பாஜகவில் இணைந்தார். தொலைக்காட்சி பேட்டியின் போது, நீங்கள் விரும்புவது மகாத்மா காந்தியா அல்லது கோட்சேவா என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினார்.
38  கடந்த 10 ஆண்டுகளில் விவசாயத் தொழிலாளர், முறைசாரா தொழிலாளர் மற்றும் சுய வேலைவாய்ப்பு 
பெற்றோரின் உண்மை ஊதியம் தேக்க நிலையிலே உள்ளது. தினக்கூலி தொழிலாளர், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மத்தியில் பாஜக ஆட்சியில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
39  தேர்தல் ஆணையம், அமலாக்கப் பிரிவு, மத்திய புலனாய்வு முகமை, வருமான வரித்துறை, பொதுத்துறைகள் உட்பட சுயேட்சையான நிறுவனங்கள் அரசின் கட்டளைப்படி இயங்குகின்றன. சுயேட்சையான தன்மை அரிக்கப்படுகிறது.
40   குண்டர் படைகளைப் போல் கம்பெனிகளை மிரட்டி, உருட்டி பணம் பறிக்கும் செயலில் பாஜக ஈடுபடுகிறது. இரவோடு இரவாக கிரிமினல்கள் அப்ரூவர்களாக மாறும் வினோதம்! 
41  கருப்புப் பணத்தை வெள்ளை பணமாக்க தேர்தல் பத்திரங்களை பாஜக அரசு பயன்படுத்தியது. வருமானம்/லாபம் ஈட்டாத கம்பெனிகள், துவங்கி மூன்றாண்டு கூட முடியாத கம்பெனிகள், தேர்தல் பத்திரங்களை கூடுதலாக பாஜகவிற்கு வழங்கியது என்றால் இக் கம்பெனிகளுக்கு யாருடைய பணம் எவ்வாறு வந்தது என்பது மர்மமாகவே உள்ளது. 
42  வரலாறு படைத்த விவசாயிகளின் போராட்டத்தின்  போது, உ.பி.யில் உள்ள லக்கிம்பூர் கேரியில் பாஜக அமைச்சரின் மகன் ஜீப் ஏற்றி 4 விவசாயிகளை கொன்றது குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
43   மோடியின் அமைச்சரவையில் 42 சதவீதம் பேர் மீது கிரிமினல்    குற்றச்சாட்டுகள் உள்ளன.
44   உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மோசடிகள் குறித்து     உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது.
45   14-18 வயதில் உள்ள குழந்தைகளில் 40 சதவீதம் பேர் ,சரிவர எழுதவோ, படிக்கவோ தெரியவில்லை. இரண்டாம் வகுப்பு கணக்குகளை கூட சரியாக போட தெரியவில்லை.
46நமாஸ் செய்யும் முஸ்லிம்களை போலீஸ் கான்ஸ்டபிள் வதைப்பது, கல்லூரி விடுதியில் ரம்ஜான் வழிபாடு நடத்திய மாணவர் தாக்கப்பட்டது போன்ற சம்பவங்கள்.
47    தலித்துகள், பழங்குடி மக்கள், தீவிர வறுமை நிலை பாரபட்சம் சந்தித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் சாதிவெறி தலை விரித்தாடியது.
48நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் அதானி ஊழல்களை அம்பலப் படுத்திய மெஹூவா மொய்த்ரா எம்பியை பாஜக அரசு குறிவைத்து தாக்குகிறது.
49    பாஜக மூன்றாவது முறை ஆட்சியைக் கைப்பற்றினால், இந்திய அரசியல் சட்டத்தை ரத்து செய்து விட்டு, இந்தியா இந்து ராஷ்ட்ரம் ஆக அறிவிக்கப்படும் என ஆனந்த ஹெக்டே போன்ற பாஜக தலைவர்கள் பகிரங்கமாக அச்சுறுத்தி வருகிறார்கள்.
50உலகிலேயே மிகவும் மோசமான மாசுபடுதல் மிக்க பத்து மாநகரங்கள் நம் நாட்டில் உள்ளன. இவைகளில் ஒன்று கூட செம்மையான நகரமாக, ஸ்மார்ட் சிட்டியாக மாறவில்லை.
51  பனாமா பேப்பர்ஸ், பாரடைஸ் பேப்பர்ஸ், பேரகன் பேப்பர்ஸ் மூலம் அம்பலமான பண மோசடி வழக்குகளின் கதி என்ன? வெளிநாடுகளில் இந்தியர் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் குறித்தவை இந்த வழக்குகள். இவற்றையெல்லாம் விசாரித்து, கருப்புப் பணத்தை மீட்டு ஒருவர் வங்கிக் கணக்கில் கூட ரூபாய் 15 லட்சத்தை அரசு டெபாசிட் செய்யவில்லை.
52   சர்வதேச காரணிகளில் இந்தியாவின் பரிதாப நிலை! மனித வளர்ச்சி குறியீடு 134 / 193, தனிநபர் வருமானம் 131, சர்வதேச பசி காரணி 111 /125, உலக பத்திரிகை சுதந்திர குறியீடு 161 /180, பாலின பாகுபாடு குறியீடு 127 /146 ,சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குறியீடு 180 /180.
53  பிஎம்கேர்ஸ் நிதி வரவு எங்கிருந்து வருகிறது, எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது போன்ற அனைத்து விவரங்களும் சிதம்பர ரகசியமாய் நீடிப்பது ஏன்? பாஜக இந்த நிதியை தனது சுயநலனுக்காக பயன்படுத்துகிறது என்பது தானே உண்மை?
54அரசை விமர்சிக்கும் எழுத்தாளர், போராளிகள், பத்திரிகையாளர்கள் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தி பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததில் என்ன நியாயம் இருக்கிறது?
55    சிந்தனை கழகங்கள், சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அரசு வேட்டையாடுவது, பேச்சுரிமைக்கு வேட்டு வைப்பதல்லவா?
56பீமா கோரேகான் வழக்கில் ஆனந்த டெல்டும்டே (அம்பேத்கரின் பேரன்), சுதா பரத்வாஜ், ஸ்டான் சுவாமி போன்ற 16 பேர் கைதாகி ஆண்டு கணக்கில் சிறையில் இருந்தனர். இவர்களது கணினிகளில் அரசே மோசடியாக பல தரவுகளை ஏற்றியது. யாருக்குத்தான் பாஜக ஆட்சியில் பாதுகாப்பு உள்ளது?
57    இந்திய - சீன எல்லைப் பிரச்சனை பேச்சுவார்த்தை விவரங்கள்     ஏன் வெளியிடப்படவில்லை?
58    திறமையான நிரந்தர போர் வீரர்களை உருவாக்குவதற்கு, 4 ஆண்டு காண்ட்ராக்ட் அடிப்படையில் அக்னி வீரர்கள் தேர்வு திட்டம் வேட்டு வைக்கிறது. தேசப் பாதுகாப்பு குறித்து பேச பாஜகவிற்கு என்ன தகுதி இருக்கிறது?
59    84 வயது போராளி ஸ்டான் சுவாமிக்கு கை நடுக்கம் இருந்ததால் அவர் தண்ணீர் குடிக்க ஸ்ட்ரா தேவைப்பட்டது. அந்த ஸ்ட்ரா கூட சிறையில் அவருக்கு வழங்க நிர்வாகம் மறுத்துவிட்ட அராஜகம்! காவலிலேயே அவர் மரணமுற்றார். கொடூரமான, சர்வாதிகாரமான போலீஸ் ராஜ்யத்தை பாஜக நடத்தி வருகிறது.
60    இந்திய வரலாற்றையே, இந்துத்துவா சித்தாந்தத்திற்கு சாதகமாக பாஜகவினர் திருத்தி  வருகிறார்கள்.  ஆர்எஸ்எஸ் சங்பரிவாரைச் சேர்ந்த எவர் ஒருவரும், நாட்டின் விடுதலைக்காக போராடவில்லை என்ற உண்மையை அவர்களால் மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது.

;