articles

img

கே ஃபோன் கேரளத்தின் புதிய வரலாறு - பினராயி விஜயன் ,கேரள முதலமைச்சர்

‘கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்,’ அல்லது ‘கே ஃபோன்’, கேரளாவில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பிராட்பேண்ட் இணைய வசதி களை வழங்கும் திட்டமாகும். கே ஃபோன் மூலம், மாநி லத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 20  லட்சம் குடும்பங்களுக்கு அதிவேக இணைய வசதி இலவசமாகவும் மற்றவர்களுக்கு மிதமான விலை யிலும் வழங்கப்படுகிறது.

கே ஃபோன் திட்டத்தின் ஒரு பகுதியாக அடிப்படை சேவைகளை வழங்க வகை 1 உரிமத்தையும் அதிகாரப்பூர்வமாக இணைய சேவை களை வழங்குவதற்கான இணைய சேவை வழங்குநர் (ஐஎஸ்பி) வகை பி ஒருங்கிணைந்த உரிமத்தையும் நாம் ஏற்கனவே பெற்றுள்ளோம். தற்போது 17,412 அரசு நிறுவனங்களில் கே ஃபோன் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. 9,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இணைப்பு வழங்க கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளன. 2,105 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கே ஃபோன் இணைப்பு வழங்கப்பட்ட அனைத்து அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் ஏற்கனவே இணைய சேவைகள் உள்ளன. இந்நிலையில்தான் கே ஃபோன்  அதிகாரப்பூர்வ அறிமுக விழா இங்கு நடைபெறுகிறது. கேரளாவில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விரைவில் பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் இணைய சேவை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இந்தியா வில்தான் அதிக இணையத் தடைகள் உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட இணைய முடக்கங்கள் நடந்துள்ளன. இப்படிப்பட்ட நாட்டில்தான், ஒரு மாநில அரசு, அனைவருக்கும் இணையம் கிடைக்கச் செய்வதன் மூலம் சிறப்பான தலையீடு செய்கிறது. அந்த வகையில், கே ஃபோன் திட்டம் அரசாங்கத்தின் மற்றும் நம் நாட்டின் பிரபல மான மாற்றுக் கொள்கைகளுக்கு மற்றொரு உதாரண மாக மாறி வருகிறது.

உண்மையான கேரளா ஸ்டோரி

கோவிட் சகாப்தத்திற்குப் பிந்தைய காலத்தில் ஒரு புதிய பணி கலாச்சாரம் உருவாகி வருகிறது. வீட்டில் இருந்து வேலை செய்வது, வீட்டிற்கு அருகில் வேலை செய்வது போன்ற வேலை முறைகள் அதிகரித்து வரு கின்றன. நமது இளைஞர்கள் பயன்பெற வேண்டுமா னால் நாட்டில் எல்லா இடங்களிலும் சிறந்த இணைய சேவைகள் கிடைக்க வேண்டும். அதற்கான தீர்வு தான் கேஃபோன் திட்டம். வாழ சிறந்த இடமாக கருதப் படும் கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பலர், இங்கு வசிக்கவும், இங்கிருந்து பணிபுரியவும் விரும்பு கின்றனர். அந்த எண்ணம் உள்ளவர்களை ஈர்த்து, கேஃபோன் மூலம் கேரளாவின் நிதித்துறையில் பெரிய இயக்கத்தை ஏற்படுத்தலாம். அதே சமயம், மலைப்பகு திகளுக்கு இணைப்பை உறுதி செய்வதன் மூலம், யாரும் பின் தங்கிவிடாமல், அனைவரும் இந்த உண்மையான கேரளக் கதையின் ஒரு பகுதியாக இருப்பதை உறுதிசெய்கிறோம். மாறிவரும் உலகத்திற்கு ஏற்ப உலகளாவிய இணைய (internet) அணுகல் அவசியம். எனவே, கே ஃபோன் மூலம், கேரளாவை அறிவுப் பொருளாதாரம் மற்றும் புத்தாக்க சமூகமாக மாற்றுவதற்கான உட் கட்டமைப்பை நாம் தயார் செய்து வருகிறோம்.

அதன் மூலம் ஒட்டுமொத்த கேரளாவையும் குளோபல் இன்ஃபர்மேஷன் எனும் ‘உலகளாவிய தகவல்’ நெடும் பாதையில் இணைக்கிறோம். இதன்மூலம் உலகளா விய பரிமாணங்களுடன் கூடிய புதிய கேரள கட்டு மானத்திற்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு துறையில் கார்ப்பரேட் சக்திக ளுக்கு எதிரான பிரபலமான மாற்று மாடலாக கே ஃபோன் திட்டத்தை நாம் பார்க்க வேண்டும். தனியார் துறை கேபிள் நெட்வொர்க்குகள் மற்றும் மொபைல் சேவை வழங்குநர்களின் சுரண்டலில் இருந்து மக் களை விடுவிக்கும் உறுதியுடன் கேஃபோன் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். மற்ற சேவை வழங்குநர்களை விட கேஃபோன் சேவைகள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். கேஃபோன் சேவைகள், நகரம் அல்லது கிராமம் எதுவாக இருந்தாலும், கேரளா முழு வதும் அதிவேகமாகவும் அதே தரத்துடனும் வழங்க லாம்.

கேரளாவின் மாற்று வழிகள்

தனியார் நிறுவனங்கள் இந்தத் துறையில் இருக்கும் போது, மாநில அரசு ஏன் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்துகிறது என்று சிலர் கேட்கிறார்கள். ஏகபோக முதலாளித்துவ பாணியில், பொதுத்துறை யில் எதுவும் இருக்கக்கூடாது, அனைத்தையும் தனியார் துறையில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என்றால்தான் ஆச்சரியம். கேரளாவின் மாற்று வழி அவர்களுக்கு எளிதில் புரியாது. கிஃப்பி எனப்படும் கேரள உட்கட்ட மைப்பு முதலீட்டு நிதியம் ஒரு பகல் கனவு என்று சொல்லி சிறுமைப்படுத்த முயன்றவர்களும் அவர்கள் தான். கிஃப்பி மூலம் கடந்த 7 ஆண்டுகளில் கேரளா வில் ரூ.80,000 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கே ஃபோன் திட்டத்திற்கு கிஃப்பி மூலம் நிதி திரட்டப் படுகிறது. கேரளாவின் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி நடவடிக்கைகளின் பலன்களை மக்களிடம் கொண்டுசெல்ல கிஃப்பியால் முடிந்தது. 

டிஜிட்டல்  ஏற்றத்தாழ்வுக்கு எதிராக...

கே ஃபோன் திட்டமும் முழு நாடும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மின்சாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை ஒருங்கி ணைத்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், கேர ளாவில் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய மிகவும் உதவியாக இருக்கும். இது கேரளாவால் முன்மொழியப்பட்ட மாற்றுத்திட்டமாகும்.  அனைவருக்கும் இணையம் என்ற எண்ணத்தில் கேஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இன்னும் சிலர் கேட்டனர், மக்களுக்கு ஏன் இணையம்? எல்லோ ரிடமும் போன் இல்லையா? முதல் பார்வையில், இது உண்மையா என்று சந்தேகிக்கலாம். நாம் சுற்றி பார்க்கும் பலரிடம் ஸ்மார்ட் போன்கள் இருக்கும். ஆனால் டிஜிட்டல் பாரபட்சத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ள, சில புள்ளிவிவரங்களை நாம் ஆழமாக ஆராய வேண்டும். நம் நாட்டில் 50 சதவிகிதத்துக்கும் குறைவான வர்களே இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். 33 சதவிகித பெண்களுக்கு மட்டுமே இணைய வசதி உள்ளது. கிராமப்புறங்களில் இது 25 சதவிகிதம் மட்டுமே. பழங்குடியின மக்களுக்கு மற்ற பகுதியின ரைவிட 30 சதவிகிதம் குறைவாகவே இணைய வசதி கள் உள்ளன. டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு மிகவும் ஆழமாக உள்ள ஒரு நாட்டில், அதை அகற்ற இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களை சமூகத்தின் ஒரு அங்கமாகப் பார்க்கும் எவருக்கும் இது குறித்து கேள்வி எழாது. 

பள்ளிக் கல்வித் துறையில் டிஜிட்டல் பிரிவினையை கூட்டு நடவடிக்கை மூலம் முறியடித்துள்ளோம். அப்போதும் பல கேள்விகள் எழுந்தன. குழந்தை களுக்கு இப்படி வசதிகள் தேவையா என்று கேட்டவர்க ளும் உண்டு. நாம் அன்று அதன்படி சென்றிருந்தால், இன்று அனைத்து குழந்தைகளுக்கும் டிஜிட்டல் கல்வியை சாத்தியமாக்கிய இந்தியாவின் ஒரே மாநிலமாக கேரளா ஆகியிருக்காது. அதுமட்டுமின்றி, கோவிட் கட்டத்தில் நாட்டின் பல பகுதிகளில் ஒரு பகுதி குழந்தைகள் கல்வியை கைவிட்டுள்ளனர். அது இங்கு நடக்கவில்லை. எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ஆட்சிப் பண்பாடு இல்லாதவர்களால் இப்படி யொரு நிலையை நினைத்துப் பார்க்க முடியாது.

சாமானியருக்கு மேம்பட்ட வசதிகள் கூடாதா?

விரிவான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அனைவரையும் உள்ளடக்கிய எந்தத் திட்டத்தையும் எதிர்ப்பவர்களும் உண்டு. சாதாரண மனிதர்க்கு ஏன் இணையம், சாமானியனுக்கு ஏன் மேம்பட்ட போக்கு வரத்து வசதி என்ற கேள்விகள் எழுகின்றன. முழு உலகமும் மாறிக்கொண்டிருப்பதை அவர்கள் பார்க்க வில்லையா? குடிசைத் தொழில்கள் தங்கள் பொருட் களை ஆன்லைனில் விற்கும் இக்காலத்திலும் நாகரீக மற்ற எண்ணங்களுடன் நடக்கும் இவர்கள் நாட்டையே பின்னுக்குத் தள்ளுகிறார்கள். இவர்களது பார்வை யில், வளர்ச்சி என்பது ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே. ஆனால் கேரளாவில் வளர்ச்சி என்பது அனைத்து மக்களுக்கானது. இணையம் மக்களின் உரிமை என்று அறிவித்து, இணைய சேவையை அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறது இடது ஜனநாயக முன்னணி அரசு. இந்த முன்னேற்றம் மக்களின் அன்றாட வாழ்க்கை தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் என்பது உறுதி. அந்தக் கண்ணோட்டத் தில்தான் பொதுச் சேவைகள் அனைத்தும் ஆன்லை னில் கிடைக்கின்றன. ஏற்கனவே 900க்கும் மேற்பட்ட சேவைகள் மொபைல் ஆப் அல்லது இணையதளம் மூலம் ஆன்லைனில் மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள் ளன. அதே சமயம், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீட்டு வாசலில் அரசு சேவைகள் கொண்டு சேர்க்கப்படுகின்றன. 

டிஜிட்டல் அறிவியல் பூங்கா

பொது இடங்களில் இலவச வைஃபை, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பிராட்பேண்ட் இணைப்பு, அதிவேக இணையம் மற்றும் ஆன்லைன் சேவை களை பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம், கேரளா அறிவுப் பொருளாதாரம் மற்றும் புதுமை சமூகமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் கேரளாவிற்கு மிகப்பெரிய சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஒட்டு மொத்த ஐடி துறை பெரிய மாற்றங்களைக் கண்டு வரு கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கியத்து வத்தை வெகு காலத்திற்கு முன்பே உணர்ந்து, அதில் காலடி எடுத்து வைத்த முதல் மாநிலம் கேரளா. 33 ஆண்டுகளுக்கு முன்பு 1990இல் திருவனந்த புரத்தில் அன்றைய இ.கே.நாயனார் அரசால் நாட்டின் முதல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்கப் பட்டது. இப்போது நாட்டின் முதல் டிஜிட்டல் பல் கலைக்கழகம் கேரளாவில் நிறுவப்பட்டுள்ளது. இந்தி யாவின் முதல் டிஜிட்டல் அறிவியல் பூங்காவும் கேரளா வில் துவங்குகிறது.

2016 முதல், கேரளாவின் தகவல் தொழில்நுட்பத் துறை இணையற்ற முன்னேற்றத்தை அடைந்துள் ளது. 2016 ஆம் ஆண்டில், கேரளாவில் உள்ள அரசு ஐடி பூங்காக்கள் மூலம் ஏற்றுமதி ரூ.9,753 கோடியாக இருந்தது. 2022இல் இது ரூ.17,536 கோடியாக அதி கரித்தது. அதாவது ஆறு வருடங்களில் கிட்டத்தட்ட இரட்டிப்பானது. 2016 இல், அரசு தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 640, 2022இல் 1,106 ஆக அதிகரித்தது. ஐடி ஊழியர்களின் எண்ணிக்கையிலும் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2016இல் ஐடி பூங்காக்க ளில் 78,068 பேர் பணியாற்றிய நிலையில், இன்று அது 1,35,288 ஆக அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டை ஒப்பிடும்போது, 2022-23இல் ஐடி ஏற்றுமதியில் மட்டும் ரூ.1,274 கோடி வளர்ச்சியை எட்டியுள்ளோம். கேரளா வில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 78 நிறுவனங்கள் 2,68,301 சதுர அடியில் புதிய தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களைத் திறந்துள்ளன. இந்த நிலையில், ஜிஎஸ்டி-யை சரியாக தாக்கல் செய்வதற்கு ஒன்றிய அரசு மற்றும் இந்திய கடன் மதிப்பீட்டு தகவல் சேவை (கிறிஸ்) ஆகியவற்றிடம் கேரளா ஒப்புதல் பெற்றுள்ளது. ஜூன் 2023 வரை கிறிஸில் பிளஸ் கிரேடு கிடைத்திருப்பது மற்றொரு மதிப்புமிக்க சாதனையாகும்.

தொழில்துறை முன்னேற்றம்

தகவல் தொழில்நுட்பத் துறையில் அரசு செயல் படுத்தி வரும் நேர்மறையான தலையீடுகள் பலன் தரு வதையே இந்த சாதனைகள் காட்டுகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதற்கும், நம் நாட்டில் இளம் தலை முறையினருக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் ஆக்கப்பூர்வமான நடவ டிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அறிவுப் பொருளாதாரத் திட்டம், இளம் கண்டுபிடிப்பாளர்கள் திட்டம், கேரியர் டு கேம்பஸ், இன்டஸ்ட்ரி ஆன் கேம்பஸ் போன்றவை அதன் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகும். நமது ஸ்டார்ட்அப் துறையிலும் இதேபோன்ற முன்னேற் றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் மாநி லத்தில் 4,000க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.5,500 கோடி முதலீடு மற்றும் 43,000 வேலை வாய்ப்புகள் அவற்றின் மூலம் உரு வாக்கப்பட்டுள்ளன. பெல்ஜியத்தில் நடைபெற்ற உலக இன்குபேஷன் (காப்பாளர்) உச்சி மாநாட்டில் சிறந்த பொது வணிக இன்குபேட்டராக கேரளா ஸ்டார்ட்அப் மிஷன் தேர்வு செய்யப்பட்டது.

ஓராண்டில் 1.4 லட்சம் நிறுவனங்கள்

கேரளாவின் தொழில் துறையும் பெரிய அளவில் முன்னேறி வருகிறது. தொழில் முனைவோரை ஊக்கு விக்க இடது ஜனநாயக முன்னணி அரசின் தலையீடு  இதற்கு நல்ல உதாரணம். ஓராண்டில் ஒரு லட்சம் நிறுவனங்களைத் தொடங்க இலக்கு வைத்திருந்தா லும், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் நிறுவனங்களைத் தொடங்க முடிந்தது. இதன் மூலம் ரூ.8,500 கோடி முதலீடு மற்றும் சுமார் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழில்முனைவோர் ஆண்டு திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சராசரி யாக, 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும், 1,000 நிறு வனங்களை வளர்க்க, ‘மிஷன் ஆயிரம்’ திட்டம் உதவி வழங்குகிறது. இதனால் நமது தொழில் துறையில் புதிதாக ஒரு லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் உருவா கப் போகிறது. தற்போதுள்ள நிறுவனங்கள் மூடப்படா மல் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதை உறுதி செய்ய சிறப்புத் தலையீடுகளும் செய்யப்படுகின்றன. அந்த வகையில், தொழில்துறையில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் அதே வேளையில், இந்த நிதியாண் டில் ஒரு லட்சம் புதிய நிறுவனங்களை உருவாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

வறுமை ஒழிப்பு

இவையனைத்தும் கேரளாவின் பொருளாதாரத் துறையை உற்சாகமடையச் செய்துள்ளது. 2016இல் கேரளாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் ரூ.5.6 லட்சம் கோடியாக இருந்தது. சமீபத்திய புள்ளி விவரங்களின்படி ரூ.10.17 லட்சம் கோடியை எட்டி யுள்ளது. அதாவது, கடந்த 7 ஆண்டுகளில் 84 சதவிகி தம் அதிகரித்துள்ளது.  கேரளாவின் தனிநபர்  ஆண்டு வருமானம் 2016இல் ரூ.1.48 லட்சமாக இருந்தது. இன்று ரூ.2.28 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 54 சதவிகிதத்திற்கு மேல் அதி கரிப்பாகும். 

வளர்ச்சி நடவடிக்கைகளுடன் நலத்திட்ட செயற் பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகை யில், அனைவரையும் மேம்படுத்தும் நிலையான வளர்ச்சி அணுகுமுறையை கேரள அரசு முன்வைத்து வருகிறது. லைஃப் பவன் திட்டத்தின் மூலம் மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வழங்கப்பட்டுள் ளன. சுமார் மூன்று லட்சம் பேருக்கு நிலம் கிடைத்தது. சுமார் மூன்றரை லட்சம் முன்னுரிமை ரேசன் கார்டு கள் வழங்கப்பட்டுள்ளன. 64,006 குடும்பங்களை வறு மையில் இருந்து மீட்கும் வகையில் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது. 63 லட்சம் பேருக்கு ரூ.1,600 வீதம் நலவாழ்வு ஓய்வூதியம் கிடைக்கிறது. 42 லட்சத்துக் கும் அதிகமான மக்களுக்கு காருண்யா மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.

பொதுத்துறை பாதுகாப்பு

இவ்வாறு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு விரிவான தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், அடுத்த 25 ஆண்டுகளில், நடுத்தர வரு வாய் உள்ள வளர்ந்த நாடுகளின் நிலைக்கு கேரளா உயர்த்தப்படுகிறது. அதற்காக விவசாய நவீனமய மாக்கல், தொழில்துறை மறுசீரமைப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கெல்லாம் கேஃபோன் திட்டம் ஒரு தூண்டுதலாக இருக்கிறது. கேஃபோன் ஒரு பொ துத்துறை நிறுவனமாகும். பொதுத்துறை நிறுவனங்களை அழித்து விற்கும் கொள்கைகள் மற்றும் நடைமுறை களுக்கு இதுவே கேரளாவின் மாற்றாகும். இது பெல் (BHEL) - EML மற்றும் HNL போன்ற நிறுவனங்களை கேரள அரசே எடுத்துக் கொண்டு லாபத்தில் இயங்கச் செய்த மாற்று மாடலின்  தொடர்ச்சியாகும்.  

இந்த நிறுவனங்கள் ஒன்றிய அரசால் விற்பனைக்கு வைக்கப்பட்டன. அவை கேரள மாநில அரசால் தற்போது நவீனமயமாக்கப்பட்டு செயல்படுகின்றன.  தொலைத்தொடர்பு துறையில் பிஎஸ்என்எல்-இன் தற்போதைய நிலையை நாம் அறிவோம். விஎஸ் என்எல் நிறுவனத்திற்கு கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதும் நமக்குத் தெரியும். இப்போது எல்.ஐ.சியை நோக்கிய ஒன்றிய அரசின் அணுகு முறை என்ன என்பதை நாம் பார்க்கிறோம். கே ஃபோன் சாத்தியமாக்குவதன் மூலம், இதுபோன்ற பொதுவான தேசிய சூழ்நிலையில் மாற்று வழிகளைக் கண்டறிவதன் மூலம் கேரளா பொதுத்துறையை அரவணைத்து நிற்கும் என்று உறுதியான அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். கேஃபோன் கேரளாவின் சொந்த இணையம். இந்த நிலையில், இதனை நனவாக்க அயராது உழைத்த அனைவரையும் மனதார வாழ்த்துகிறோம். நவீன காலத்தில் உலக நாடுகளின் வேகத்தில் கேரளா நகரும் என்று உறுதியளித்து, கேரளாவின் சொந்த இணையம். கேஃபோன்- மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மலையாள உரை தமிழில்: சி.முருகேசன்




 



 


 

 

;