ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்... மகிழ்ச்சி. ஆனால், அதன்மூலம் நீதி நிலை நாட்டப்பட்டுவிட்டதா? அதைப் புரிந்துகொள்ள ராகு லுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்துச் சற்று அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அவரது தகுதியிழப்பு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951(ம.பி.ச. 1951)இன் பிரிவு 8இன்படி மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கை. தகுதியிழப்பிற்காக அது குறிப்பிடுகிற சட்டப்பிரிவுகளில், களங்கம் விளை விக்கும் பேச்சு என்று ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப் பயன்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம்(இ.த.ச.) பிரிவு 499 எங்குமே இடம் பெறவில்லை. ஆனால், எந்தக் குற்றத்திற்காகவாவது 2 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை பெற்றால் தகுதியிழப்பு ஏற்படும் என்று (ம.பி.ச. 1951)இன் பிரிவு 8(3) குறிப்பிடுகிறது. ஆகவே, 2 ஆண்டு க்கு ஒரு நாள் குறைவாக சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருந்தாலும், தகுதியிழப்பு என்பது ஏற்பட்டிருக் காது. அதை உச்ச நீதிமன்றமும் தன் உத்தரவில் சுட்டிக் காட்டியிருக்கிறது. இப்போது, அந்த 2 ஆண்டுக்கு வருவோம். நற்பெய ருக்குக் களங்கம் விளைவித்தல் என்ற குற்றத்திற்கு இ.த.ச. பிரிவு 499 குறிப்பிடக்கூடிய அதிகபட்சத் தண் டனை 2 ஆண்டுகள் சாதாரண(கடுங்காவல் அல்லாத!) சிறைதான். அதிகபட்சத் தண்டனை என்பது மிகப் பெரும்பாலான நேரங்களில் அதாவது, குற்றம் மிகக் கடுமையானதாக இருந்தால் தவிர அளிக் கப்படுவதில்லை. அதனால், அதிகபட்ச தண்டனை ஒரு வழிகாட்டுதல்தானே தவிர, அந்தத் தண்டனை யை எல்லாக் குற்றங்களுக்கும் அளிப்பதில்லை.
உயர்நீதிமன்றம் ஏன் பேசவில்லை?
அதைத்தான் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் வேறு சொற்களில் சொல்லியிருக்கிறது. அதிகபட்சத் தண்டனை வழங்கியதற்கு என்ன காரணம் என்று விசாரணை(கீழமை) நீதிமன்றம் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று (உத்தரவின் பத்தி எண் 6) உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதற்கடுத்த பத்தியில் (எண் 7) மிக நீண்ட (125 பக்க!) உத்தரவைப் பிறப்பித்த (குஜராத்) உயர்நீதிமன்றம் இதைப் பற்றிப் பேசவே யில்லையே என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியி ருக்கிறது. மாறாக, வழக்கிற்குத் தொடர்பில்லாத வேறு செய்திகளையெல்லாம் அந்த உயர்நீதிமன்ற உத்தரவு குறிப்பிட்டிருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நீதிமன்ற எல்லை - ஜூரிஸ்டிக்ஷன்! வழக்கிற்கான குற்றம் நடந்த இடம் நீதிமன்றத்தின் எல்லைக்குள் இருந்திருக்க வேண்டும். ஆனால் ராகுல் பேசியது, கர்நாடகத்தில். வழக்குத் தொடுக்கப்பட்டது குஜராத்தில். சரி, வழக்குத் தொடுத்தவர், அவருக்கான நீதிமன்ற எல்லை யில் வழக்கைத் தொடுத்திருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், அவர் ஒன்றும் 2019 ஏப்ரல் 13இல் கர்நாடகத்தின் கோலாரில் போய் ராகுலின் பிரச்ச னைக்குரிய பேச்சைக் கேட்கவில்லை.
விடையை எழுதிவிட்டு கணக்கை உருவாக்கியது போல்
இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், விடையை எழுதிவிட்டுக் கணக்கை உரு வாக்கியதுபோல, தகுதியிழப்பு என்ற விடை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்கேற்ற தண்டனையைத் தரும் நீதிபதி இருக்கிற ஒரு நீதி மன்றத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பகுதியில் ஒரு வரைத் தயார் செய்து வழக்குத் தொடுத்து, இத்தனை யும் செய்யப்பட்டிருக்கிறது என்பது புரியும். உச்ச நீதிமன்றம் ஒன்றும் தண்டனையை ரத்து செய்யவில்லை, வெறும் ஸ்டே - அதாவது “இடைக் கால”த் தடைதான் என்று பாஜகவினர் பேசுகிறார்கள். ஆனால், இந்தத் தண்டனையை அளிப்பதற்கான உண்மைகள், சூழல்கள் ஆகியவற்றை விசாரணை நீதி மன்றம் குறிப்பிடவில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் சொற்களே, தண்டனை தவறானது என்பதற்கான அடையாளம். ஒருவேளை, இந்தத் தண்டனையை கீழமை நீதிமன்றங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி னால்கூட, உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்யும் என்ப தற்கான அடையாளமே, அது தன் உத்தரவில் குறிப் பிட்டுள்ள செய்திகள். விசாரணை நீதிமன்றமும், மேல்முறையீட்டு நீதி மன்றமும் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை (அதாவது நீதிக்குப் புறம்பாகச் செயல்பட்டுள்ளன!) என்பதைத்தான் உச்ச நீதிமன்ற உத்தரவு சுட்டிக் காட்டுகிறது. உண்மையில், உச்ச நீதிமன்றம் வரை சென்று நீதியைப் பெற ராகுலால் முடிந்தது. ஆனால், இத்தகைய தீர்ப்புகளால் பாதிக்கப்படும் இந்தியாவின் எளிய குடிமக்கள், நீதி மறுக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள். ஆகவே... ராகுல் பதவி மீட்புடன் இது நிறைவு பெற வில்லை. மாறாக, இந்திய நீதித்துறையின் அடிப்ப டையையே மாற்றியமைக்கிற சீர்திருத்தங்கள் உடன டித் தேவையாக இருக்கின்றன.