articles

img

நடந்தாய் வாழிய தோழர்களே! - எஸ். கண்ணன்

கர்நாடக தேர்தலை திசைதிருப்ப 2000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு; அதை திசை திருப்ப நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கு சாவர்க்கர் பிறந்த தினம் தேர்ந்தெடுப்பு; அதன் மீதான விவாதங்களை ஜனநாயக அமைப்புகள் தீவிரப் படுத்திய நிலையில், குடியரசுத் தலைவருக்கு அழைப் பின்மை; அதன் விவாதம் முற்றுப் பெறுவதற்குள் செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் என்ற அறிவிப்பு; அதற்கு தமிழ்நாட்டின் ஆதீனங்களுக்கு சிறப்பு அழைப்பு மற்றும் தில்லிக்கான பயணம்; குடி யரசுத் தலைவரை விடவும் சாமியார்களுக்கு முன்னு ரிமை- இப்படி தொடர்ந்து அரசியல் மற்றும் சமூகச் சூழலை தனது கை பிடிக்குள் வைத்துக் கொள்ளும் சூழ்ச்சியை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழிகாட்டுதலு டன், அதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பாஜக ஆட்சி செயல்படுத்தி வருகிறது.

அதிகரிக்கும் வேலையின்மையும், விரக்தி உணர்வும்

இந்த விவாதங்களுக்கு மத்தியில் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் மறக்கடிக்கப்படு கின்றன. வேலையின்மை பெருமளவிற்கு அதி கரித்துள்ளது. இந்திய வரலாற்றில் வேலையின்மை விகிதம் 8.2 சதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலமான ஹரியானா வில் 29.4 சதம், அஸ்ஸாம் 9 சதம், கோவா 11 சதம், மகாராஷ்டிரா 6 சதம், திரிபுரா 12 சதம், உ.பி 5 சதம், குஜராத் 3 சதம் என விவரங்கள் தெரிவிக்கின் றன. இது நாட்டின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது. மிகவும் பின் தங்கிய சமூக சூழலைக் கொண்ட மாநிலங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி யில் முன்னேறிய மாநிலங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் பாதிப்பை சந்தித்து இருப்பது, பாஜக ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்துகிறது.  தமிழ்நாடு 3 சதம், கேரளா, ஆந்திரா, தெலுங்கா னா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் தலா 4 சதம் என்ற அளவில் வேலையின்மை உள்ளது. ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் பரவாயில்லை என்றாலும், விரும்பிய அல்லது தகுதிக்கான வேலை என்ற நிலை இல்லை. படித்தது ஒன்று, கிடைத்தது ஒன்று; கிடைத்ததில் வாழ வேண்டியது தான் என்ற மனநிலையில் இளம் தலைமுறை உள்ளதை ஆட்சி யாளர்கள் கவனிக்க வேண்டும். இது சமாதான சக வாழ்வை மேம்படுத்தாது. மாறாக விரக்தியை அதி கப்படுத்தும். இளைஞர்களிடம் விரக்தியை உரு வாக்குவதைத் தான் பாஜகவும், தாராளமயமும் விரும்புகிறது.

மறுபுறம் பல லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அதை முழுமையாக பூர்த்தி செய்யாமல், அவ்வப் போது போட்டி தேர்வுகளை நடத்துவதும் அதில் சில வற்றை பூர்த்தி செய்வதும் நடந்து வருகிறது. அதே நேரம் பெரும்பான்மையான மாநில அரசுகள் தங்கள் காலிப் பணியிடங்களை, அவுட்சோர்சிங், ஒப்பந்தம், பயிற்சி, தினக்கூலி போன்ற பெயர்களில் அரசுத்துறை களிலும், தனியார் துறைகளிலும் நிரப்பி வருகின்றன. இதுவும், இளம் தொழிலாளர்களிடம் வருமான பற்றாக் குறை, போன்ற காரணங்களால், அதிருப்தியையும் விரக்தியையும் அதிகப்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. 

ஆக தாராளவாதம் அரசுகளின் கொள்கையில் செலுத்தும் ஆதிக்கம், பொது சமூகத்தில் விரக்தியையும், வன்மத்தையும் வளர்க்கவே இட்டுச் செல்கிறது.  அது வகுப்புவாத சக்திகளுக்கே பயன் தரும் என்பதை  ஆட்சியாளர்கள் உணர வேண்டும். எனவே சமூக நீதி விரும்பும் அரசுகள், வேலை யின்மை தீர்க்கப்படுவதில், உரிய கவனம் செலுத்து வது அடிப்படை கடமை ஆகும்.

விலைவாசி உயர்வும் உழைப்பு சக்திக்கான விலை இன்மையும்

விலைவாசி உயர்வு கடுமையாகி வருகிறது. பண வீக்கம் விலை உயர்வுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. இந்தியாவில் பணவீக்கம் 5 சதம் அளவில் உள்ளது. உணவுப் பொருள்களின் விலையும், அத்தியாவசியப் பண்டங்களின் விலையும் 10 சதத்திற்கு மேல் உயர்ந்து இருப்பதை சந்தை அனுபவம் வெளிப்படுத்து கிறது. தமிழ்நாட்டில் பணவீக்கத்தின் அளவு கடந்த ஏப்ரலில் 9 சதம் இருந்தது. இந்த ஆண்டு 5 சதமாக  குறைந்துள்ளது என்கின்றனர். எப்படி என்பது விளக்கப்படவில்லை.  மேற்கண்ட விலையேற்றத்திற்கும், பஞ்சப்படி என்ற  பெயரில் அரசு அறிவிக்கும் உயர்வுக்கும் முரண்பாடு  உள்ளது. உயர்வு 3 முதல் 4 சதம் மட்டுமே. உடலு ழைப்பு தொழிலாளர்களுக்கு அதுவும் இல்லை.  மாவட்ட ஆட்சியர் அறிவிக்கும் குறைந்தபட்ச கூலி நாள் ஒன்றுக்கு இன்றைக்கும் ரூ.300க்குள் இருப்ப தைக் காண முடிகிறது. அது தவிர்த்து ஒன்றிய அரசின் குறைந்த பட்ச கூலி மற்றும் மாநில அரசின் குறைந்த பட்ச கூலி ஆகியவை பல ஆண்டுகளாக திருத்தி அமைக்கப்படவில்லை. கடந்த ஏப்ரல் 3 அன்று அரசு வெளியிட்ட பஞ்சப்படி உயர்வையும் உள்ள டக்கி, அன்ஸ்கில்டு பிரிவு ரூ.616, செமிஸ்கில்டு ரூ.736, ஸ்கில்டு ரூ.858, ஹைஸ்கில்டு ரூ.959 என தீர்மா னிக்கப்பட்டது. அடிப்படை ஊதியத்தில் மாற்றம் இல்லாமல் இந்த உயர்வு வெளியிடப்பட்டது. ஆனா லும் தூத்துக்குடி, என்.டி.பி.எல் நிறுவனத்தின் தொழி லாளர்கள் இது அமலாகவில்லை என்பதால் வேலை நிறுத்தம் செய்ததை கண்டோம். இப்படித்தான் பல அரசு நிறுவனங்களில் விதி மீறல் உள்ளது. 

மாநில அரசின் திருத்தப்பட்ட பஞ்சப்படி உள்ளிட்டு ரூ.10,483 முதல் ரூ.11500 அளவில் தான் உள்ளது. அண்மையில் ஃபாக்ஸ்கான்  நிறுவனத்தில் போராட்டம் நடந்த போது பெண் தொழிலாளர்கள் குறைந்த பட்ச ஊதியம் என்ற பெயரில் சுரண்டப்பட்டதைக் கண்டோம். பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த கொடூர சுரண்டலை அரங்கேற்றி வருகின்றன.  தமிழ்நாடு மின் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கான உயர்வு குறித்து பேச மறுத்து இருப்பதும் இந்தப் பின்னணியில் தான். மொத்தத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது; ஆனால் ஊதிய உயர்வு குறைவாக உள்ளது. எனவே தேவைக்கு ஏற்ப அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க இயலாத நிலை நீடிக்கிறது. இதன் காரணமா கவே குறைந்த பட்ச ஊதியம் ரூ.26,000 என தீர்மானிக்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்துகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இத்தனை டாலர் குறைந்த பட்ச ஊதியமாக அறிவிக்கப்படும் என்பது, தேர்தல் கால விவாதமாக உள்ளது. இந்தியாவில் அப்படியான விவாதம் தேர்தல் காலத்தில் இல்லை என்பது, நமது ஜனநாயகத்தின் பலவீனங்களில் ஒன்று என்பதை உணர்வதும், கட்சிகளுக்கு அத்தகைய அழுத்தத்தை அளிப்பதும் அவசியமாகும். 

சங்கம் வைக்கும் உரிமை இல்லை

பாஜக ஆளும் குஜராத்தில் கூட்டு பேர உரிமை  குறித்து நினைத்துப் பார்க்க முடியாது. முதலீட்டா ளர்களை ஈர்க்க தொழிற்சங்கம் இருக்காது என்ற வாக்குறுதி அரசுகள் தரப்பில் அளிக்கப்படுகிறது. இது அப்பட்டமான முதலாளித்துவ கொள்கைகளுக்கான வசதி வாய்ப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை. உல கில் வளர்ந்த நாடுகள் அனைத்திலும் ஜனநாயக உரி மைகளில் ஒன்றாக சங்கம் வைத்துக் கொள்வதும், கூட்டுப்பேர உரிமைகள் மூலம் ஊதிய உயர்வு ஒப்பந்தங்கள் செய்வதற்கும் வழிவகை செய்யப் பட்டுள்ளது. இந்தியாவிலும், அரசானது, முன்மாதிரி வேலை அளிப்போராக இருக்கும் வரையிலும் அது சாத்தியமாகியது. ஆனால் தாராளமய பொருளாதார கொள்கை மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அதிகரித்த பின்னணியில் தொழிலாளர்கள் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. அதை தொழிலாளர் சட்டத் தொகுப்பு என்ற பெயரில் பாஜக ஆட்சி, மிக மோசமாக அமலாக்கி வருகிறது. மாநிலங்களுக்கு இடையில் யார் அதிக அளவு தொழி லாளர் உரிமைகளைப் பறிப்பது என்ற போட்டியை உருவாக்குகிறது. 

இந்த நிலையை முறைசாரா தொழிலாளர்கள் மத்தியிலும் உருவாக்குவதில் தாராளமய கொள்கை தீவிரம் காட்டி வருவது ஆபத்தானது. ஆட்டோ தொழி லாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட எண்ணற்ற முறைசாரா பிரிவினரிடம், கட்சி சார்ந்த, மதம் அல்லது சாதி சார்ந்த கண்ணோட்டங்களை அதிகப்படுத்தி, பிரித்து வைக்கும் பணியில் இன்றைய முதலாளித்துவ கொள்கை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சுமார் 94 சதம் தொழிலாளர்கள் இந்தியா வில் முறைசாரா பிரிவினர் என்பது, கசக்கும் உண்மை. இவர்களுக்கான கூட்டு பேர உரிமையை, சங்கம் வைக்கும் உரிமையை, சமூக நலத்திட்ட நட வடிக்கைகளை, அரசு தான் முன்னின்று செய்ய முடியும். குறிப்பாக நலவாரியங்கள் இந்த பணிகளில் கூடுதல் பலத்துடன் இயங்க அரசு அனுமதிப்பதும், நிதி ஒதுக்கீடு செய்வதும் வேண்டும். 

சிஐடியு நடைபயண பிரச்சாரம்

மேற்கண்ட பின்னணியில்,  14 அம்ச கோரிக்கை களை முன்வைத்து, இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாட்டில் நடைபயண பிரச்சாரத்தை மே 20 முதல் மே30 வரையான 10 நாள்களாக நடத்தி வருகிறது. சுமார் 2100 கி.மீ தூரத்தை 7 பிரச்சாரக் குழுக்க ளும் கடந்து இருப்பது தங்களை வருத்திக் கொள்ள அல்ல;  தொழிலாளர்களிடமும், பொது மக்களிடமும்  ஏற்புத் தன்மையை உருவாக்குவதற்கானது ஆகும். பிரச்சாரத்தை கவனிக்கும் தொழிலாளர்களிடம் மேற்படி கோரிக்கைகள் மீதான நியாயத்தை உணர்த்த முடிந்துள்ளது. பலரும் தங்கள் அங்க லாய்ப்புகளை வெளிப்படுத்தி பிரச்சார நடவடிக்கை களை ஆமோதிப்பதையும் காண முடிந்தது. மேற்படி யதார்த்த நிலையில் இருந்து வாழ்க்கை மேம்பாட்டை யும், தரமான வாழ்க்கைக்கான உத்தரவாதத்தையும் அளிப்பது அரசுகளின் கடமை. 

கட்டுரையாளர்: சிஐடியு, மாநில உதவிப் பொதுச் செயலாளர்

 

;