அதற்கு சுமார் 73 வயதாகிறது. இந்திய விடுதலைக்குப் பிறகான அரசியல் நிர்ணய சபை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி அது நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தினம் 26.11.1949. இதை இந்திய சட்ட நாளாக நாம் கொண்டாடுகிறோம். அரசியல் சட்டம் நிறைவேறிய பின் 30.11.1949இல் வெளிவந்த ஆர்.எஸ். எஸ்.சின் ஆர்கனைசர் பத்திரிகை, “பாரதத்தின் புதிய அரசியல் சட்டத்தின் அவலம் என்னவென்றால், அதில் எதுவுமே பாரதத் தன்மையுடன் இல்லை என்பது தான்” என்று கடுமையாக எழுதுகிறது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த தலைவர் என்று அறியப்பட்ட மாதவ சதாசிவ கோல்வால்கர் தனது சிந்தனைக் கொத்து நூலில் இன்னும் கோபத்தோடு, “நம்முடைய அரசியல் சட்டத்தில் நமக்குச் சொந்தமானது என்று சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை. ஐநா சபையின் சார மற்ற சில கொள்கைகள், அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அரசியல் சட்டங்களிலிருந்து சிலவற்றை சேர்த்து அவசர அவசரமாக செய்த ஒட்டு வேலை தான் நம்முடைய அரசியல் சட்டம்” என்று சாடுகிறார். தனது ஆர்கனைசர் பத்திரிகையில் ஆர்.எஸ்.எஸ்., அரசியல் சட்டத்திற்கு மாற்றாக முன்வைக்கும் பாரதத் தன்மை கொண்ட நூல் எது தெரியுமா..? ”மனு ஸ்மிருதி”.
இந்தியத்தன்மை என்று ஒன்று பிரத்யேகமாக இருக்கிறதா என்றால் அப்படி ஒன்றும் இருந்த தில்லை. இந்திய விடுதலைக்கு முன்பு வரை 565 சமஸ் தானங்களோடு பிரிட்டிஷ் இந்தியாவும் சேர்த்து மொத்தம் 566 இந்தியாக்கள் இருந்தன. இங்கே இருந்த மன்னர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக ளில் தாங்கள் ஏற்றுக்கொண்ட தத்துவங்களையே அந்தப் பகுதியின் சட்டமாக்கினார்கள். குறிப்பாக பிரிட்டிஷ் இந்திய தண்டனைச்சட்டத்தின்படி கொலைக்குற்றத்தில் ஈடுபடும் ஒருவருக்கு அதிக பட்சமாக மரணதண்டனை வரை வழங்கப்படும். ஆனால் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கொலைக் குற்றத்திற்குக் கூட அவர்கள் ஏற்றுக்கொண்ட மனுஸ்மிருதி அடிப்படையில் சாதிக்கொரு தண்டனை கள் தீர்மானிக்கப்பட்டன. இது இந்தியாவோடு இணை யும் வரை தொடர்ந்தது. இவ்வாறு தான் இந்தியா முழு வதும் இந்தியத் தன்மை என்கிற பெயரில் தண்ட னைகள் இருந்தன. முற்போக்கு எண்ணம் கொண்ட சில ஆட்சியாளர்கள் இருந்த போதிலும் பெரும்பாலும் மனு ஸ்மிருதியால் ஆட்கொள்ளப்பட்ட சட்டங்களே சமஸ்தான இந்தியாவில் இருந்தன.
பிராமணிய சட்டத் தொகுப்பு
மனு ஸ்மிருதியின் அடிப்படை கோட்பாடுகளை நால் வருணப்படி நிலை, பிராமணிய மேலாண்மை கீழ்வருண இழிநிலை, உடல் உழைப்பு சார்ந்தோரை இழிவாக எண்ணுதல், நால்வருணத்திற்கு வெளியே உள்ள சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்டோர் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள், பெண்ணடிமை. இவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக் கப்பட்ட சட்ட நூல் தான் அது. இது குறித்து அம்பேத் கர் சொல்லும் போது, “மௌரியர்களின் புத்த மத அரசுக்கு எதிரான பிராமணப் போரின் விளைவாக பிராமணர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட பிராமணிய சட்டத் தொகுப்பு தான் மனு ஸ்மிருதி” என்று கூறுகிறார். இதற்கு மாற்றாக ஒட்டுமொத்த இந்தியா விற்கும் சாதி மதம் கடந்த பொதுவான சட்டத்தை உருவாக்கிய பெருமை நம் விடுதலை இந்தியாவில் அவரே உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் எல்லாவற்றி லும் முற்போக்கான முன்னணி பங்கு வகித்தவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்தியாவிற்கு முழு சுதந்திரம் வேண்டும் என்று 1929இல் காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே அதை இம்மண்ணில் கம்யூனிஸ்டுகள் முன் வைத்தார்கள். அதே போல் தான் காங்கிரஸ் தனது மாநாட்டில் இந்தியாவிற்கு என்று தனித்த அரசியல் அமைப்புச் சட்டம் வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு முன்பாகவே, அப்படி ஒரு குரலை முதன் முதலாக 1934இல் முன்வைத்தவர் தோழர் எம்.என்.ராய் அவர்கள். அவர் சொல்லும் போதே அந்த அரசியல் சட்டம் என்பது சர்வதேசப் பார்வை கொண்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் பின்னரே அது தேசிய இயக்கத்தின் கோரிக்கையாக மாறியது. அப்படி மாறினாலும் கூட அது வடிவம் பெற பத்து ஆண்டுகள் ஆனது.
இணைய விரும்பாத 93 சமஸ்தானங்கள்
டிசம்பர் 9, 1946இல் தான் அரசியல் நிர்ணய சபை யின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த சபையில் 389 உறுப்பினர்கள் இருந்தார்கள். அதில் 296பேர் மாகாண சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். (208 பேர் காங்கிரஸ் பெரும்பான்மை யாலும், 73பேர் முஸ்லிம் லீக் பெரும்பான்மையாலும் தேர்வு செய்யப்பட்டவர்கள். இதர 15 பேர்) இந்தியா வில் இருந்த 565 சமஸ்தானங்களின் சார்பாக 93 பிரதி நிதிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் முஸ்லிம் லீக்கின் 73பேர் தனி நாடு கோரிக்கையின் விளைவாக எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. சமஸ்தானங்களின் 93 பேரும் இந்தியாவோடு இணைய விருப்பமில்லாமல் அந்தக் கூட்டத்தை புறக்க ணித்தனர். ஒரு கட்டத்தில் இந்திய விடுதலைக்குப் பின் உருவான புதிய அரசியல் நிர்ணய சபையில் தான் அந்த 93 சமஸ்தான பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். அதுவரை இந்தியா முழுவ தற்கும் இருந்தது ஒரே சட்டம் அல்ல. அது பகுதிக் கொன்றாகச் சிதறிக்கிடந்தது. அரசியல் நிர்ணய சபை ஓரளவு முற்போக்கு எண்ணம் கொண்டோரும், படு பிற்போக்கு எண்ணம் கொண்டோரும் கொண்ட கலவையாகத் தான் இருந்தது.
இதில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் வரைவை உருவாக்குவதற்கு டாக்டர் அம்பேத்கர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு உருவாக்கப் பட்டது. அந்தக்குழு உலகின் 60க்கும் மேற்பட்ட நாடு களின் அரசியல் சட்டங்களை இந்தியாவிற்கான அரசி யல் சட்டம் உருவாக்குவதற்கு எடுத்துக் கொண்டது. இரவு பகலாக நடைபெற்ற வரைவுக்குழு கூட்டத்தில் பெரும்பாலும் உழைத்தவராக அம்பேத்கர் அவர்களே இருந்தார். மற்ற குழு உறுப்பினர்கள் பெரும்பாலான கூட்டங்களுக்குக் கூட வரவில்லை. மூன்று மாதத்தில் நவம்பர் 4,1947இல் வரைவுக்குழு தனது முதல் அரசியல் வரைவு அறிக்கையை விவாதத்திற்கு அரசி யல் நிர்ணய சபையில் முன்வைத்தது. 165நாட்கள் நடைபெற்ற கூட்டங்களில் அம்பேத்கர் முன்வைத்த வரைவு அரசியல் சட்டத்தின் மீது மட்டும் 114 நாட்கள் விவாதங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில் 7635 திருத்தங்கள் சபை உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டன. அதில் 2473 திருத்தங்கள் விவாதித் ததின் முடிவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்திய விடுதலைக்குப் போராடிய இந்தியாவின் அறிவார்ந்த தலைவர்கள் ஒன்று கூடி இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாட்கள் அரசியல் நிர்ணய சபையில் உரு வாக்கிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்தியத்தன்மை இருக்குமா..? அல்லது மனு ஸ்மிருதியில் இந்தியத் தன்மை இருக்குமா..? என்கிற கேள்வியை நாம் முன்வைக்க வேண்டும்.
அம்பேத்கரின் எச்சரிக்கை
“சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வற்றை வாழ்க்கை கொள்கைகளாகக் கடைப்பிடிப் பதே சமூக ஜனநாயகம். இவை மூன்றையும் பிரிக்க நேரிட்டால் ஜனநாயகம் தோற்றுப் போகும்.” என்று எச்சரித்தார் அம்பேத்கர். சமத்துவம் மறுக்கப்பட்டால் பலர் மீது சிலர் அதிகாரம் செலுத்தும் சுதந்திரமாக அது சுருங்கிவிடும். அதனால் சகோதரத்துவமும் பாதிக்கும். அப்போது அம்பேத்கரிடம் நீங்கள் சுதந்தி ரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை பிரஞ்சுப் புரட்சியிலிருந்து எடுத்துக் கொண்டீர்களா என்ற போது அவர் மிகத் தெளிவாகச் சொன்னார் இவற்றை நான் புத்தரிடமிருந்து எடுத்துக் கொண்டேன் என்று. அவர் மட்டுமல்ல வள்ளுவனின் “பிறப்பொக்கும்” உள்ளிட்ட இன்னும் எண்ணற்ற இந்த மண்ணின் தன்மை கொண்ட முற்போக்குத் தத்துவங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டதே நம் அரசியல் அமைப்புச் சட்டம். உலகிலேயே நீண்ட எழுத்துப்பூர்வமான அரசியல் சட்டம் நம் இந்திய அரசியல் சட்டம். வயதுவந்தோ ருக்கு வாக்குரிமை என்பதன் மூலம் எல்லோருக்கும் அரசியல் சம வாய்ப்பை அளித்த சொற்ப நாடுகளில் இந்தியாவையும் சேர்த்த பெருமை நம் சட்டத்திற்கு உண்டு. சில வளர்ந்த நாடுகளே பெண்களுக்கு வாக்கு ரிமை அளிக்காத நாட்களில் வயதுவந்த பெண்க ளுக்கு வாக்குரிமை அளித்த பெருமை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கே உண்டு. குறிப்பாக “சமூகநீதி” எனும் சொல் போன்ற சில சொற்கள் இருக்கும் ஒரே அரசியல் சட்டமும் இந்திய அரசியல் சட்டம் தான். இப்படி உலகிற்கே சட்ட வார்த்தை களைக் கொடையளித்த இந்திய அரசியல் சட்டம் அந்நியத் தன்மை கொண்டது என்று சங்கிகள் கதறக் காரணம் மனுவென்னும் சாதியப் படிநிலைக் கோட் பாட்டை அமலாக்கத் துடிப்பது ஒன்றே ஆகும். கட்டுரையாளர்
: தமுஎகச, மாநில துணைப்பொதுச்செயலாளர்