articles

img

எதிர்க்கட்சிகளின் குரல் இந்தியாவின் குரல்! சோனியா காந்தி

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை பிரதமர் மோடி ஏற்றார் என்பதற்கோ அல்லது வாக்காளர்கள் தனக்களித்த செய்தியை  பிரதிபலித்தார் என்பதற்கோ அடையாளமாக எவ்வித மாற்றமும் அவரிடம் தென்படவில்லை.

2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் தமக்கு ஒரு தெய்வீக அந்தஸ்தை வழங்கிக் கொண்டார். ஆனால் மக்கள் தீர்ப்பு, அதை அவருக்கு மறுத்தது. மேலும், ஒரு தனிப்பட்ட தார்மீக அரசி யல் தோல்வியையும் அளித்தது. பிளவு, முரண்பாடு மற்றும் வெறுப்பு அரசியலையும் சந்தேகத்திற்கிட மின்றி நிராகரித்தது. திரு. மோடி அவர்களின் ஆட்சி யின் குரலையும் பாணியையும் அழுத்தமாக மக்கள் தீர்ப்பு மறுதலித்தது.

முடிவை ஏற்க மறுக்கும்  முரட்டுக் குணம்

ஆனாலும் பிரதமர் ஒன்றுமே நடக்காதது போல பாசாங்கு காட்டுகிறார். கருத்தொற்றுமையை நமக்கு போதிக்கிறார். அதே வேளை மோதலுக்காக தன் நகங்களை கூர்மையாக்குகிறார். 18ஆவது மக்களவை யின் துவக்க நாட்கள் ஊக்கமளிப்பதாக இல்லை. கருத்தொற்றுமைக்கான அணுகுமுறையை அவரிடம் காண முடியும் என்ற நம்பிக்கையும் சிதைந்தது. பரஸ்ப ரம் மரியாதை, நட்புறவு மற்றும் புதிய நல்லெண்ண மனப்பான்மை மலரும் என்னும் நம்பிக்கையும் பொய்யானது.

சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் தங்களு டன் ஒருமித்து ஆதரிக்க வேண்டும் என்று அவரது கோரிக்கையை அவருடைய தூதுவர்கள் முன்வைத்த பொழுது, இந்தியா கூட்டணிக் கட்சிகள் பிரதமரிடம் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சபாநாயகர் பதவிக்கு நாங்கள் அரசாங்கத்தை ஆதரிப்போம்; ஆனாலும் மரபு மற்றும் பாரம்பரி யத்தின் படி எதிர்க்கட்சி வரிசையில் உள்ள ஒரு உறுப்பினருக்கு துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என்று கோரினோம். அது நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக, 17ஆவது மக்களவைக் காலம் முழுவ தும்  அந்த பதவியை நிரப்பாத இவர்களது ஆட்சி, இந்த நியாயமான ஆலோசனையை ஏற்கவில்லை.

திட்டமிட்ட திசை திருப்பல்

பின்னர், அவசர நிலைக் காலம் பற்றிய விவகாரம் அவராலும், அவருடைய கட்சியினராலும் தோண்டி எடுக்கப்பட்டது. பாரபட்சமற்று செயல்பட வேண்டிய சபாநாயகரும் அதில் இணைந்து நடுநிலைமையை தவறவிட்டார். இது எவ்விதமான பொது அரசியல் நிலைப்பாட்டிற்கும் பொருந்தாதது. கடந்த ஆட்சியின் போது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் விழுமியங்கள் தாக்கப்பட்டதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவது தான் இதன் நோக்கம். மேலும் இந்த முயற்சி நாடாளுமன்றத் றத்தின் சுமூகமான செயல்பாட்டிற்கும் உகந்ததல்ல.

1977 மார்ச்சில், அவசர நிலைக்கு எதிரான திட்டவட்டமான தீர்ப்பை மக்கள் வழங்கினர். அது தயக்கமின்றி, சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின் மூன்றாண்டுகளுக்குள் (திரு மோடி மற்றும் அவருடைய கட்சியினர் எப்பொழுதும் பெற முடியாத) ஒரு பெரும்பான்மையை பெற்று (காங்கிரஸ்) மீண்டும் ஆட்சிக்கு வந்தது அந்த வரலாற்றின் ஒரு பகுதியாகும். (ஆனால் இப்போது நாட்டின் பிரச்சனை அதுவல்ல.)

விரிவான விவாதம்  தேவைப்படும் பிரச்சனைகள்

உண்மையில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் என்ன?

1 நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மீறல்  குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று சட்டப்பூர்வமாக கோரிய 144 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது; எவ்விதமான விவாதமும் இல்லாமல் மூன்று புதிய குற்றவியல் நீதிச் சட்டங்களை நிறைவேற்றும் நோக்கத்தில் தான் இது நடந்தது. பல சட்ட வல்லுநர்கள் இந்தச் சட்டங்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சட்டத்தை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?2024 தேர்தல் முடிவுக்குப் பின் முழுமையான நாடாளுமன்ற ஆய்வுக்கு அதை உட்படுத்தியிருக்கலாமே?

2 அதேபோல கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்ட பொழுது வனப் பாதுகாப்பு மற்றும் உயிரியல் பன்மைத் தன்மை பாதுகாப்பு வனச் சட்டங்களுக்காக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.கிரேட் நிக்கோபார் திட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மனித குலப் பேரழிவை ஏற்படுத்தும் ஆபத்துக்கள் உள்ளன. பிரதமர் மோடி கருத்து ஒற்றுமையை மதிக்கிறார் என்றால் இந்த திருத்தங்களை முழுவதும் விவாதத்திற்கு உட்படுத்தி மறுபரிசீலனை செய்ய முன் வர வேண்டாமா?

3 நீட் நுழைவுத் தேர்வும் அதில் நடந்துள்ள ஊழலும் லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வை நாசமாக்கியுள்ளது. கல்வி அமைச்சர் அதை உடனடியாக மறுக்கிறார். நாடு முழுவதும் பல குடும்பங்களை சீரழித்த “வினா, விடைக் கசிவுகள்”குறித்து வெளிப்படையாக பேச மறுக்கிறார். தவிர்க்க முடியாத நிலையில் தான்,உயரதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும்பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களின் தொழில் முறை எவ்வாறு ஆழமாகசேதம் அடைந்துள்ளது என்பதுதான் உண்மையான பிரச்சனை ஆகும்.

ஏற்கனவே சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, மிரட்டல் மற்றும் வெறுப்புப் பிரச்சாரம் மீண்டும் தீவிரமடைகிறது. பாஜக ஆளும் மாநிலங்க ளில் புல்டோசர்கள் எல்லாவித நடைமுறைகளையும் மீறி வெறும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறு பான்மை மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளும் தண்டனையை வழங்குகின்றன.  தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மக்கள் மீது திணித்த வகுப்புவாத தூண்டுதல் மற்றும் அப்பட்டமான பேச்சைப்  பார்த்தால் இதில்  ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. வெற்றி தன்னை விட்டு நழுவிப் போகிறது என்ற தோல்வி பயத்தில் ஆத்திரமூட்டும் வகையில் தன் வெறுப்புப் பேச்சுகளை அதீதமாக விசிறிவிட்டார்.

மணிப்பூர்

2022 பிப்ரவரியில் மணிப்பூரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உறுதியான பெரும்பான்மையைப் பெற்றன. ஆனாலும் கூட 15 மாதங்களில் அந்த மாநிலம் பற்றி எரியத் துவங்கியது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக பாதுகாத்த சமூக நல்லிணக்கம் சிதைந்து போயுள்ளது. அங்கு  செல்வதற்கோ பாதிப்படைந்த அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லவோ அரசியல் தலைவர்களை சந்திக்கவோ பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை. அவருடைய கட்சி அங்குள்ள இரண்டு நாடாளுமன்ற இடங்களையும் இழந்ததில் ஆச்சரியப்பட ஒன்று மில்லை.

40 நாட்களுக்கு மேலாக நடத்திய பிரச்சாரத்தில் தனது தரம் கெட்ட பேச்சுக்களால் பிரதமர் தன்னை மிகவும் தாழ்த்திக் கொண்டார். அவர் பயன் படுத்திய சொல்லாடல்கள் நம்முடைய சமூகக் கட்ட மைப்பிற்கும் அவர் வகிக்கும் பதவியின் கண்ணி யத்திற்கும் சொல்லொணா தீங்கு விளைவித்தன. 400 சீட்டுகளுக்கு அவர் விடுத்த அழைப்பு உறுதி யாக நிராகரிக்கப்பட்டது. மக்கள் “போதும்” என்று சொல்லியதை அவர் சுய பரிசோதனை செய்து சிந்திக்கத் துவங்க வேண்டும்.

ஆளுங்கட்சி முன் வருமா?

இந்தியா கூட்டணிக் கட்சிகள், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் மோதல் போக்கை கடைப்பிடிக்க மாட்டோம் என தெளிவுபடுத்தின. எதிர்க்கட்சித் தலை வர் ராகுல், ஒத்துழைக்க முன்வந்தார். 

பிரதமரும் அவரது கட்சியினரும் சாதகமாகப் பதில் அளிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். நாடாளு மன்றத்தில் சமநிலையையும் ஆக்கப்பூர்வ செயல் பாடுகளையும் மீட்டெடுக்க உறுதி  பூண்டுள்ளோம். எனவே, ஆளும் கட்சி உறுப்பினர்களும் தங்களு டைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற முன்வரு வார்கள் என நம்புகிறோம்.

தி இந்து 29/6/24,
தமிழில் : கடலூர் சுகுமாரன்

சோனியா காந்தி 
காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர்

40 நாட்களுக்கு மேலாக நடத்திய பிரச்சாரத்தில் தனது தரம் கெட்ட பேச்சுக்களால் பிரதமர் தன்னை
மிகவும் தாழ்த்திக் கொண்டார். அவர் பயன்படுத்திய சொல்லாடல்கள் நம்முடைய சமூகக் கட்டமைப்பிற்கும் அவர் வகிக்கும் பதவியின் கண்ணியத்திற்கும் சொல்லொணா தீங்கு விளைவித்தன.




 

 




 

;