அதானி குழுமம் தொடர்பான அமெரிக்க நீதி மன்றத்தின் புதிய மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, இந்தியாவின் பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பான செபி (SEBI) மீது பொதுமக்களின் நம்பிக்கை மேலும் குறைந்துள்ளது.
என்ன நடந்தது?
F 2024 ஜனவரி 3-ல், உச்சநீதிமன்றம் செபிக்கு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்தது. F அமெரிக்க நிறுவனமான ‘ஹிண்டன்பர்க்’ ஆய்வு மையம் அதானி குழுமத்தின் மீது சுமத்திய குற்றச் சாட்டுகளை விசாரிக்க வேண்டும்; F இந்திய முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பு களை ஆராய வேண்டும்; F சட்ட மீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்பதுதான் அந்த உத்தரவு.
அதானி குழுமத்தின் மறைப்பு
F அதானியின் செயல்பாடுகள் பற்றி அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்பிஐ விசாரணை நடந்து வரு வதை அதானி குழுமம் அறிந்திருந்தது F ஆனால் இதை பங்குச் சந்தைகளிடமும், நிதி நிறு வனங்களிடமும் மறைத்தது F 2024 மார்ச் மாதம் இது குறித்த செய்தி வெளி யான போதும், விசாரணை பற்றி தெரியாது என்று பொய் சொன்னது F 2020 முதல் 2024 வரை வெளியிட்ட ஆண்டறிக்கை களில் “லஞ்சத்தை எதிர்க்கும் கொள்கை உள்ளது” என்று பொய்யாக கூறியது
செபியின் செயலின்மை
செபி தனது கடமைகளை சரியாக செய்யவில்லை; மேற்கண்ட எதையும் கண்டுகொள்ளவில்லை. F அதானி குழுமத்தின் ஆவணங்களை சரியாக ஆய்வு செய்யவில்லை F ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்கவில்லை F 2024 மார்ச்சில் அதானி வெளியிட்ட பொய்யான அறிக் கைகளையும் கண்டுகொள்ளவில்லை
செபி தலைவரின் கள்ள மௌனம்
செபி தலைவர் மாதவி பூரி புச்: F குற்றச்சாட்டுகள் குறித்து கள்ள மௌனம் காத்தார் F தவறுகள் நடக்கவில்லை என்று வேண்டுமென்றேமறுத்தார் F தன் மீதான நலன் முரண்பாடு குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லவில்லை
இனி என்ன நடக்கும்?
F உச்சநீதிமன்றம் முன்பு கூறியது: “விசாரணை சரி யாக நடக்கவில்லை என்பதற்கு வலுவான ஆதாரம் இருந்தால், வேறு அமைப்பிடம் விசாரணையை மாற்றலாம்.” F தற்போது வெளிநாட்டில் இருந்து அதானி மீது புதிய குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன F உலகமே இந்த வழக்கை கவனித்து வருகிறது F இந்நிலையில், உச்சநீதிமன்றம் என்ன முடிவு எடுக் கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
நேர்மை காக்குமா செபி?
இந்த மிக முக்கிய கட்டத்தில், செபி ஒரு முக்கியமான பொறுப்பை கொண்டுள்ளது - முதலீட்டாளர்களின் நலனைக் காப்பது, சந்தையில் நேர்மையை உறுதி செய்வது. ஆனால் அதானி விவகாரத்தில் அதன் செயல் பாடு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமக்க ளின் நம்பிக்கையை மீட்டெடுக்க செபி கடுமையான நட வடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். ஆனால் அதைச் செய்யுமா? என்பது மிகப் பெரிய கேள்விதான். தி வயர் இணைய ஏட்டில் பவன் கொராடா எழுதிய கட்டுரையின் தமிழ்ச் சுருக்கம்.