நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட் டுள்ள 2025 பொருளாதார ஆய்வு அறிக்கை கார்ப்பரேட்டுகளின் லாபக் குவிப்பு 15 ஆண்டுகளாக இல்லாத உச்சத்தை தொட்டிருக்கிறது. ஆனால் லாபகரமான செயல்பாடுகள் தொழிலா ளர்களின் வருமான அதிகரிப்பில் பிரதி பலிக்கவில்லை என்றும் குறிப்பிட்டு இருக் கிறது. பல ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் இத்தகைய செல்வ குவிப்பை பற்றி இதற்கு முந்தைய பொருளாதார ஆய்வு அறிக்கை கள் ஏன் பேசவில்லை? இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து இது குறித்து பேசி வந்திருக்கும் நிலையில் தலைமை பொருளாதார ஆலோ சகருக்கு இந்த ஆண்டுதான் இந்த உண்மை தெரிய வந்ததா? லாபக் குவிப்பு இவ்வளவு அபரிமிதமாக இருந்த நிலையிலும் கார்ப்பரேட் வரிகள் கடந்த 11 ஆண்டுகளில் 11 சதவீதம் குறைக் கப்பட்ட போது பொருளாதார ஆய்வு அறிக்கைகள் அதை விமர்சித்து தடுப்ப தற்கான பரிந்துரைகளை தரவில்லையே? இப்போது பொருளாதார ஆய்வு அறிக்கை பேசுவது தன்னுடைய நம்பகத்தன்மையை பாதுகாத்துக் கொள்வதற்கா? அல்லது இந்த பட்ஜெட் ஏதாவது மேற்பூச்சு செய்து கொள்வதற்கான முன்மொழிவா? இந்த கேள்விகள் எல்லாம் எழுந்துள்ளன. இக் கட்டுரை வெளிவரும் நேரத்தில் 2025 பட்ஜெட் டும் வெளிவந்திருக்கும். அதன் உள்ள டக்கம் பற்றிய ஆய்வுகள் மேலும் நமக்கு தெளிவினை தரக்கூடும். ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் (ஜனவரி 26) பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் எழுதியுள்ள “ஏற்றுமதி சார் நுகர்விலிருந்து நுகர்வு சார் வளர்ச்சி நோக்கி செல்கிறோமா?” (“From Export- led to Consumption-led growth”) என்ற கட்டுரை நமக்கான வெளிச்சத்தை தருகிறது.
கூக்குரல்கள் எதற்காக?
பெரிய பெரிய ஆலோசனை நிறுவனங் களும், கார்ப்பரேட் வணிக இதழ்களும் உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதங்களை உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கூக்குரல்களை அண்மைக்காலமாக எழுப்பி வருகின்றன. இந்த கூக்குரல்களில் தற்போது ரிசர்வ் வங்கியின் குரலும் இணைந்து இருக்கிறது. நுகர்வு தூண்டுதலின் மூலம் தொழில் முனைவோருக்கு ஊக்கத்தை உருவாக்க வேண்டும் என்று அது கூறி இருக்கிறது. எதற்காக இந்த திடீர் கூக்குரல்கள்? இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2024- 25 இல் 7 சதவீதமாக இருக்கும் என்பது மதிப்பீடு. ஆனால் 6.5 சத வீதத்தை அது தொடும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. மதிப்பீட்டை விட அரை சத வீதம் தான் குறைவாக இருக்கும் என்றால் எதற்காக இந்த கூக்குரல்கள். 6.5 சதவீதம் என்பதே நுகர்வை நல்லதொரு நிலையில் வைத்திருக்கக் கூடிய அளவாகும். ஆகவே இந்த கூக்குரல்கள் ஒரு உண்மையை நமக்கு உடைத்துச் சொல்லுகின்றன. அதாவது இவர்கள் மதிப்பீடு செய்கிற, கணிக்கிற மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவுகள் உண்மையல்ல என்பதே. அதீத மதிப்பீடுகளைத்தான் அறிவித்து பெருமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்ப தற்கு சாட்சியம் இந்த கூக்குரல்கள்.
யாருடைய நுகர்வை அதிகரிக்க?
நுகர்வு அதிகரிப்பு என்று இவர்கள் பேசுவது யாருடைய நுகர்வு அதிகரிப்புக்காக என்ற கேள்வியும் எழுகிறது. இவர்கள் அதி கரிக்க வேண்டும் என்று சொல்வது கிராமப் புற மக்களின், உழைப்பாளி மக்களின் நுகர்வா? இல்லை. உண்மையில் இவர்கள் பேசுவது விரும்புவது எல்லாம் நகர்ப்புற நடுத்தர வர்க்க மக்களின் நுகர்வே ஆகும். உழைப்பாளி மக்களின் நுகர்வை உயர்த்துவதன் மூலம் பொருளாதாரத்தில் கிராக்கியை அதிகரிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? உழைப்பாளி மக்களின் கூலியை ஊதியத்தை உயர்த்த வேண்டும்; குறைந்தபட்ச ஊதிய அளவு களை உயர்த்த வேண்டும். நுகர்வு அதி கரிப்பு பற்றி பேசுகிற இவர்கள் இதைப் பற்றி எல்லாம் வாய் திறக்கவே இல்லை. மாறாக லார்சன் அண்ட் டியூப்ரோ சி இ ஓ என்ன சொன்னார்? (அவரோடு பெரு நிறுவனத் தலைவர்கள் யாரும் பெரிதாக மாறுபட வில்லை). வாரத்திற்கு வேலை நேரம் 90 மணிகளாக உயர்த்தப்பட வேண்டும் என்றார். இது இந்திய தொழிற்சாலைகளை நாஜி களின் “சித்ரவதை முகாம்களாக” மாற்றக் கூடியது ஆகும். அங்குதான் சாகும் வரை தொழிலாளர்கள் வேலை பார்த்தார்கள். சாவதற்காகவே வேலை செய்தார்கள். துணைவியரின் முகங்களை வீட்டில் உட்கார்ந்து வெறித்துப் பார்ப்பதை விட, பொழுதுபோக்குக்காக நேரங்களை செல வழிப்பதை விட வேலை பார்ப்பது வாழ்வை வளமாக்கும் என்பதே எல் & டி யின் எஸ்.என்.சுப்ரமணியன் கூற்று. இதே நளின மான வார்த்தைகள்தான் நாஜி சித்ரவதை - மரண முகாம்களின் வாசல்களில் எழுதப் பட்டிருந்தது. “வேலை உன்னை விடுதலை செய்யும்” என்று. ஆகவே இந்த ஆலோசனை நிறு வனங்களும், ரிசர்வ் வங்கியும் பேசுவது உழைப்பாளி மக்களின் ஊதிய உயர்வை பற்றியது அல்ல.
எதிரும் புதிரும் ஆன நலன்கள்
நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் நுகர்வை அதிகரிப்பது பற்றி இவர்கள் பேசுகிறார்கள். இவர்களின் உண்மையான நோக்கம் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின ரின் நலன் அல்ல. நகர்ப்புற நடுத்தர வர்க்கத் தினரின் நுகர்வு பெரும்பாலும் இந்திய ஏக போக தொழிலகங்களின் உற்பத்தியை சார்ந்து இருப்பதே காரணமாகும். இவர்கள் நுகர்வு அதிகமானால் அவர்கள் லாபம் அதிகமாகும். அதற்காக ஆலோசனை நிறுவனங்க ளும் ரிசர்வ் வங்கியும் உணவுப் பொருள் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது பற்றி பேசு கிறார்கள். உணவுப் பொருள் பணம் வீக்கத் தால் நகர்ப்புற நடுத்தரவர்க்கம் பாதிக்கப் படுகிறார்கள். இதனால் அவர்களின் பிற பொருள் நுகர்வுகள் குறைகின்றன என்பதே அவர்கள் கூறும் காரணம். ஆனால் உணவுப் பொருள் பண வீக்கத்தால் கிராமப் புற விவசாய வர்க்கத்தினர் பலனடை கிறார்கள். ஆகவே இவர்களில் ஒரு பகுதி யினர் நுகர்வை அதிகரிப்பது என்ற பெய ரால் அவர்களை விட எளிய மக்களை குறி வைக்கிறார்கள். இதில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. உணவுப் பொருள் பணவீக்கத்தால் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இழக்கப் படும் கிராக்கி என்பது உணவுப் பொருள் பணவீக்கத்தால் பயன்பெறுபவர்கள் மத்தி யில் உருவாகும் கிராக்கியை விட அதிகமா என்பதே! இரண்டாவது கேள்வி உணவுப் பொருள் பணவீக்கத்தால் பாதிக்கப்படும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் அப்பயனை சேமிக்கிறார்களா ? செலவழிக்கிறார்களா? என்பதாகும். சேமிக்கிறார்கள் எனில் அது கிராக்கியாக மாறாது. கிராமப்புற உழைப்பாளி மக்களோ தங்கள் கைகளில் கிடைக்கும் வருமானத்தை 100 சதவீதம் செலவழித்து விடுகிறார்கள் என்பதே பொருளாதார எதார்த்தம். ஆகவே சேமிக்கிறவர்கள் கைகளில் பொருளா தார முடிவின் பயன்களை தரப் போகிறோமா? இல்லை உடனடியாக சந்தைக்குள் பாய்கிற, கிராக்கியை உயர்த்து கிற கிராமப்புற உழைப்பாளி மக்களின் வருமானத்தை அதிகரிக்கப் போகிறோமா? ஆகவே ரிசர்வ் வங்கி சொல்வது போல உணவுப் பொருள் பண வீக்கத்தை கட்டுப் படுத்துவது என்பது சந்தையில் கிராக்கி உயர்வை நிச்சயம் ஏற்படுத்தாது. தெரிந்தே இதை முன்மொழிவதற்கு காரணம் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் நுகர்வு ஏகபோக மூலதனத்தின் நலன்களுக்கு உதவுவதே ஆகும்.
தற்காலிக உந்துதலே
நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் நுகர்வு அதிகரிப்பது நடைபெற்றாலும் அது நிலைத்து நிற்காது என்பதும் முக்கியமான அம்சம். நவீன தாராளமயம், திறந்த வர்த்த கம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கான ஊக்கம் பொதுவாக ஏற்றுமதி சார்ந்து இருந்து வரு கிறது. அதையே நுகர்வு சார்ந்த வளர்ச்சி யாக மாற்றப்போவதாக இவர்கள் கூறு கிறார்கள். சில நேரம் இத்தகைய ஊக்க கள் தற்காலிக உந்துதலை பொருளா தாரத்தில் தரும். உள்ளூர் சொத்து விலை கள் நீர்க் குமிழிகள் போன்று மாறுதல்களை அடையும்போது, பொருளாதாரத்தில் சில நேரம் நுகர்வு அதிகரிப்பு நடைபெறும். கடன் மூலமாக நுகர்வு ஊக்குவிப்பும், எளிமை யான கடன் நடைமுறைகளும் சந்தையில் கிராக்கியை அதிகரிப்பதாக தோன்றும். பின்னர் அந்தக் கடன் சுமைகளை நுகர்வை குறைக்க ஆரம்பிக்கும். உணவுப் பொருள் பண வீக்கமும் அப்படித்தான். தற்காலிக உந்துதலை தரும் அப்புறம் நின்று போகும். எத்தகைய நுகர்வு நிலைத்த ஊக்கத்தை பொருளாதாரத்தில் உருவாக்கும்? அத்த கைய நுகர்வு யார் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும்? அதை உருவாக்க வெளியில் இருந்து எத்தகைய தலையீடு தேவைப்படு கிறது? ஆகியனவே இந்த விவாதத்தின் முக்கியமான அம்சங்கள் ஆகும்.
அரசு முதலீடுகளின் அதிகரிப்பே
அரசு செலவினத்தில் அதிகரிப்பு ஏற்படு வது நுகர்வோர் கைகளில் வாங்கும் சக்தியை அதிகரிக்கும். ஆனால் அரசு முதலீடு களில் அதிகரிப்பு நடைபெற வேண்டும் என்றால், நிதி பற்றாக்குறை விரிவடைவதை அனுமதிக்க வேண்டும். நுகர்வைக் கடந்து சேமிக்க முடிகிற வர்க்கங்களின் மீது வரி களை உயர்த்த வேண்டும். இப்படி செய்யா மல் சேமிக்க இயலாதவர்கள் மீது வரிகளைப் போட்டால் எவ்வளவு வரிகளை அவர்கள் மீது போடப்படுகிறது அதற்கு ஈடான கிராக்கி இழப்பு சந்தையில் ஏற்படும். ஆகவே நுகர்வுசார் தொழில் ஊக்கம் நிகழ வேண்டும் என்றால் விவசாய வளர்ச்சி உறுதி செய்யப்பட வேண்டும். விவசாய வரு மானம் அதிகரிக்க வேண்டும். விவசாயி களுக்கு ஆதரவான கொள்கைகள் அமலாக் கப்பட வேண்டும். கார்ப்பரேட் ஆதரவு, விவ சாய வர்த்தக பெருநிறுவன ஆதரவு கை விடப்பட வேண்டும். ஆனால் இவற்றை யெல்லாம் நவீன தாராளமய சட்டகம் அனு மதிக்குமா? நவீன தாராளமயப் பாதையில் பய ணிக்கும் ஒன்றிய ஆட்சியாளர்கள் நேர் எதி ரான திசையில் பயணிக்கிறார்கள். கார்ப்ப ரேட் விவசாயத்திற்கு ஊக்கமளிக்கிறார்கள். இது விவசாயிகளின் வருமானத்தை சுருக்கும். மேலும் கிராக்கியை பாதிக்கும். ஆகவே நுகர்வு அதிகரிப்பு என்றாலும் நகர்ப்புற நடுத்தர வர்க்க மக்களையே குறி வைத்து செய்வார்கள். இதன் பொருள் அவர்கள் நலனில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருக்கிறது என்பது அல்ல.
சீன அனுபவம்
நவீன தாராளமயப் பாதையை கடந்து செல்வது அவ்வளவு எளிதாக இருப்ப தில்லை. நிதிப் பற்றாக்குறையை விரிவு படுத்தி அரசு முதலீடுகளை அதிகரிக்க வேண்டுமெனில் அதை நவீன தாராளமய பொருளாதாரப் பாதை அனுமதிப்பதில்லை. சட்ட ரீதியான தடைகளே உள்ளன. இந்தி யாவின் “நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம்” (FRBM) ஒரு உதா ரணம். நவீன தாராளமய சாட்டை சொடுக் கும் போது எதிர்ப்பு தெரிவிக்கக் கூட வாய்ப்பு இல்லாமல் கட்டி வைத்து அடிப்பது தான் இத்தகைய சட்டங்கள். கார்ப்பரேட் வரிகள் உயர்த்தப்பட்டால் மூலதனம் நாட்டை வெளியேறி விடுவதாக மிரட்டுகிறது. அப்படி வெளியேறும் போது அது அந்நியச் செலாவணி நெருக்கடியை உருவாக்கும். இதனால் சில பொருட்களை நுகர முடியாத நிலை ஏற்படும். இதற் கெல்லாம் மக்களை தயார் செய்யாவிடில் நவீன தாராளமய கட்டத்தை கடப்பது கடினம். சீனா ஒரு மாறுபட்ட உதாரணம். நவீன தாராளமயக் கட்டை மீறி அதனால் பயணிக்க முடிகிறது. சர்வதேச நிதி மூலதனத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு அது அடி பணி வதில்லை. சந்தையை திறந்து விடுமாறு மேலை நாடுகள் சீனாவை எளிதாக நிர்ப்பந் திக்க முடிவதில்லை. காரணம் சீனா வர்த்தக உபரி வைத்திருக்கிறது; நடப்புக் கணக்கு பற்றாக்குறை பிரச்சனை பெரிதாக இல்லை.
வழி என்ன?
இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடு கள் நவீன தாராளமயக் கட்டத்தை எளிதாக கடக்கிற அரசியல் உறுதியோடு இல்லை. சிறிய நாடுகள் அமெரிக்கா தலைமையி லான மேலாதிக்க நாடுகளின் நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ள முடியாமல் அடி பணிந்து போகின்றன. நிதி மூலதனத்தின் வரவு, எல்லை தாண்டும் வர்த்தகத்தின் மீதான கட்டுப்பாடு கள் இல்லாததால் அவர்களால் அந்நியச் செலாவணி பற்றாக்குறை நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத சூழல் உள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கி மற்றும் ஆலோ சனை நிறுவனங்கள் எல்லாம் ஏதோ இந்திய அரசு மிக சுதந்திரமாக இயங்குவது போல பாவனை செய்கின்றன. இது நவீன தாராள மய இயங்கியல் குறித்த அறியாமையை, அவர்களின் அணுகுமுறையை வெளிப்படுத் துகிறது. நவீன தாராளமயக் கட்டமைப்பை மீறிச் செல்கிற அரசியல் உறுதியை வெளிப்படுத் துவதும், கொள்கைகளை வகுப்பதுமே வழியாகும்.