articles

img

நாடாளுமன்றத்தில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., கேள்விகள்

இந்தியா-அமெரிக்கா  குடியேற்ற நெருக்கடி பற்றி பேச்சுவார்த்தை 

குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பி னர் ஆர். சச்சிதானந்தம், வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் “குடியேற்ற நெருக்கடி பற்றிய பிரச்சனையைத் தீர்க்க மற்றும் எச்-1பி (H-1B) விசாக்களின் வரம்புகளைக் குறைக்க அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஏதேனும் நடத்தப்பட்டுள்ளதா?” மற்றும் “அப்படியென்றால், அதன் விவரங்கள் மற்றும் முடிவுகள் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு வெளிவிவகார அமைச்சகத்தின் இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அளித்த பதிலை ஆய்வு செய்த பின்னர்,  ஆர். சச்சிதானந்தம் எம்.பி., பின்வரும் செய்தியை வெளியிட்டுள்ளார்: “அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் எதிர்கொள்ளும் குடியேற்ற நெருக்கடிகள் மற்றும் எச்-1பி (H-1B) விசா வரம்புகள் தொடர்பாக இந்திய அரசும் அமெரிக்க அரசும் காலத்திற்குக் காலம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தேவைப்படும் இடங்களில் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள் மற்றும் நிபுணர்களின் சட்டப்பூர்வ இடப்பெயர்வை எளிதாக்குவது, குறுகிய கால சுற்றுலா மற்றும் வணிகப் பயணங்களை ஊக்குவிப்பது போன்ற விஷயங்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மனித கடத்தல் குறித்தும், சமூக விரோதிகள், குற்றவியல் பின்னணி கொண்டவர்கள் மற்றும் சட்ட விரோத குடியேற்ற வலையமைப்புகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மூலம் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனுக்கு  மேற்கொண்ட பயணத்தின் போது, உலகம் ஒரு உலகளாவிய பணியிடமாக உருவாகி வருவதை இரு தரப்பும் வலியுறுத்தியதாகவும், இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இடப்பெயர்வு கட்டமைப்புகளை ஊக்குவிக்க அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர் கள் எதிர்கொள்ளும் குடியேற்ற நெருக்கடி மற்றும் எச்-1பி (H-1B) விசா வரம்புகள் குறித்த பிரச்சனைகளுக்கு இதுவரை உறுதியான தீர்வு எதுவும் காணப்படவில்லை. இந்த விவ காரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுத்த அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 89.23  லட்சம் குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு 

 இன்னும் 14.29 லட்சம் குடும்பங்கள் பயனடையவில்லை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், ஜல் சக்தி அமைச்சகத்திடம் “ஜல் ஜீவன் திட்டத்தின் சாதனைகள் குறித்த மாநில வாரியான விவரங்கள் என்ன?” மற்றும் “தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் எத்தனை குடும்பங்கள் பயனடைந்துள்ளன?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஜல் சக்தி இணை அமைச்சர் வி. சோமண்ணா அளித்த பதிலை ஆய்வு செய்த பின்னர்,  ஆர். சச்சிதானந்தம் பின்வரும் செய்தியை வெளியிட்டுள்ளார்: “ஜல் ஜீவன் திட்டம் ஆகஸ்ட் 2019-இல் தொடங்கப்பட்டபோது, தமிழகத்தில் வெறும் 21.76 லட்சம் (17.37%) கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். திட்டம் தொடங்கப்பட்ட பின்னர், 24.03.2025 வரையிலான காலகட்டத்தில் 89.23 லட்சம் கூடுதல் கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள மொத்தம் 125.28 லட்சம் கிராமப்புற குடும்பங்களில், 110.99 லட்சம் (88.60%) குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் 2019 முதல் மார்ச் 2025 வரையிலான காலகட்டத்தில் 71.23% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்னும் 14.29 லட்சம் (11.40%) கிராமப்புற குடும்பங்கள் இத் திட்டத்தின் பலன்களைப் பெறவில்லை என்பது கவலைக்குரிய விஷயம். குறிப்பாக, இணைப்பின் தரவுகளை ஆய்வு செய்தபோது, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், டாமன் & டையூ, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், மிசோரம், புதுச்சேரி, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 100% இலக்கை எட்டியுள்ளன. நீர் ஆதாரம் குறைவாக உள்ள பகுதிகளில் உள்ள கிராமப்புற குடும்பங்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய, தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் கிராமப்புற குடிநீர் விநியோக திட்டங்களை விரைவாக முடிக்க நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாலின நிதி ஒதுக்கீடு ரூ.2208.90 கோடியாக உயர்வு

ஒதுக்கீட்டின் முறையான செலவினம் உறுதி செய்யப்பட வேண்டும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பி னர் ஆர். சச்சிதானந்தம் அவர்கள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் “அமைச்சகத்தின் கீழ் உள்ள பாலின பட்ஜெட் திட்டங்களின் விவரங்கள் மற்றும் 2025-26 நிதியாண்டுக்கான ஒதுக்கீ டுகள், 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகள் (BE) மற்றும் வருவாய் மதிப்பீடுகள் (RE) மற்றும் 2023-24 நிதியாண்டுக்கான BE, RE மற்றும் உண்மை யான செலவினம் ஆகியவற்றின் விவரங்கள் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா அளித்த பதிலை ஆய்வு செய்த பின்னர்,  ஆர். சச்சிதானந்தம் பின்வரும் செய்தியை வெளியிட்டுள்ளார்: “மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விபரப்படி பாலின நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் இந்த அமைச்சகத்தின் பாலின பட்ஜெட் ஒதுக்கீடு வெறும் ரூ.100 கோடியாக இருந்தது. இதில் முழுத் தொகையும் திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. 2024-25 ஆம் ஆண்டில் இந்த ஒதுக்கீடு ரூ.1625.80 கோடியாக உயர்ந்து, 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.2208.90 கோடியாக அதிகரிக் கப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் 22 மடங்கு அதிகரிப்பாகும். குறிப்பாக, 2025-26 நிதியாண்டில் பின்வரும் துறைகளுக்கு கணிசமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது: Y திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம்: ரூ.287.50 கோடி Y தகவல் தொழில்நுட்பம்/மின்னணுவியல்/CCBT ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு: ரூ.412.41 கோடி Y மின்னணு ஆளுகை: ரூ.203.61 கோடி Y சைபர் பாதுகாப்புத் திட்டங்கள்: ரூ.391.00 கோடி Y இந்தியா AI திட்டம்: ரூ.660.00 கோடி அரசின் விபரப்படி இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த நிதி ஒதுக்கீடு பெண்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பெண்களுக்கு டிஜிட் டல் கல்வியறிவு மற்றும் தொழில்நுட்ப திறன்களை வழங்குவதில் இந்த நிதி முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். அமைச்சகத்தின் திட்டங்களின் கீழ் பெண்களுக்கான திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், அணுகல் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கான திட்டங்களின் செயலாக்கத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.” இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.