articles

img

இந்தி சீனி பாய்! பாய்! - நிருபமா சுப்பிரமணியன்

கிழக்கு லடாக்கில் உள்ள டெப் சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் இந்திய -சீன படை கள் விலக்க உடன்பாட்டின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை (குறிப்பாக 2019க்கு பிறகு கிட்டத்தட்ட) பயன் படுத்தப்படாத” உரையாடல்” என்ற கருத்து எப்படி இப்பொழுது விரும்பத் தகுந்ததாக மாறியது என்பது தான். இதன் விவரங்களை தில்லி “ஒப்பந்தம்” என்று அழைக்கிறது. சீனா” முன்னேற்றம்” என்கிறது. ஆனால் இதன் விவரங்கள் பொதுவெளியில் இல்லை. மோடி அரசின் துதிபாடிகளோ, இது பொறுமை மற்றும் தொடர்ச்சியான உரையாடலின் விளைவு என பாராட்டுகின்றனர். “பல்வேறு காலகட்டங்களில் மக்கள் நம்பிக்கை யை கைவிட்டனர். 2020 முதல் நம் எல்லையில் எங்கள் எதிர் நடவடிக்கை தொடர்வதில் உறுதியாய் இருந்தோம்.பேச்சுவார்த்தை நடத்தினோம்.சிக்கல் நிறைந்ததாக இருந்தாலும்  பொறுமை மற்றும் விடாப்பிடியான ராஜதந்திரம் இது” என அக்டோபர் 21  அன்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். “இந்தியாவும் சீனாவும் படைகளை விலக்கிக் கொள்ள பரந்த  கருத்தொற்றுமை இருந்தது. தொடர்ச்சி யான உரையாடலில் ஈடுபடும் சக்தியும் இருந்தது. விரைவில் தீர்வுகள் வெளிப்படும் என நம்பியதால் இது நடந்தது” என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். 2020 ஜூன் முதல் இருதரப்பு ராணுவ தளபதி களும் கல்வான் பள்ளத்தாக்குகளில் இருந்து  விலகு வது குறித்து பேச்சுவார்த்தைகளை துவக்கினர்.பாதுகாப்பு மண்டலத்தில் சீனர்களால் அமைக்கப் பட்ட கூடாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மோத லில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

எடுபடாத வீர வசனங்கள்

ஏப்ரல் 2020க்கு முன் இருந்த பழைய நிலைக்கு (Status Quo Ante) சீனா திரும்ப வேண்டும் என்ற மோடி அரசின் வீர வசனங்கள் எடுபடவில்லை. சீனா வின் அத்துமீறல்களை எதிர்த்து பதிலடி கொடுக்கும் வலுவான நிலையில் இந்தியா தயாராக இல்லை என்பதை உணர்ந்த போதும் இத்தகைய வீர வச னங்கள் உலாவந்தன. சீனா ஏற்படுத்திய கட்டமைப் புக்கு எதிராக 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை ஆயுதம் ஏந்திய கூடுதல் துருப்புகளை எல்லைக்கு அனுப்பு வது இந்தியாவிற்கு பெரும் சவாலாக இருந்தது. ஒரு  எதிர் நடவடிக்கையாக கைலாஷ் சிகரத்தின் உயரங்க ளை ஆக்கிரமித்ததைத் தவிர சீனா ஊடுருவல்களுக்கு இந்திய துருப்புகள் எந்த இயங்கியல் ரீதியிலான பதி லையும் தரவில்லை.

நீடிக்கும் பாதுகாப்பு மண்டலங்கள்

பிப்ரவரி 2021 முதல் செப்டம்பர் 2022 வரை படைகளை குவித்திருந்த நான்கு உராய்வு புள்ளிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதற்கு ராணுவ தளபதிகளுக்கிடையே 21 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தது. ஒவ்வொரு புள்ளியிலும் ராணுவ  தடுப்பு மண்டலங்களை அமைக்க சீனாவுடன் இந்தியா ஒப்புக்கொண்டது. இரு படைகளை பிரித்திடவும் மேலும் கல்வான் போன்ற விரிவாக்கங்களை தடுக்க வும் இது மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு மண்ட லங்கள் இப்பொழுதும் நீடிக்கின்றது.ஆனால் அந்தப் பகுதியில் இந்தியாவிற்கு மீட்டமைக்கப்படுமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ராணுவ தளபதியின் கோரிக்கை

காலப்போக்கில் வீர வசனங்கள் மறைந்து நடை முறை வாதம் மோடி அரசுக்கு புரிந்தது. தற்போ தைய நிலைக்கு முந்தைய நிலை என்ற தன் கோரிக்கை யில் இருந்து தூர விலக்கிக் கொண்டது. ஆனால்  ராணுவ வட்டாரங்கள், ஊடக நேர்காணல்கள், சிந்தனைக் கூடங்களிலும் இந்த பேச்சுக்கள் நீடித்தன. ராணுவ தலைவர் ஜெனரல் உபேந்திரா திவேதி ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள் (அக்டோ பர் 22) சீனா பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்திய பொருளாதாரத்திற்கு சீனா தேவை.  மோடி அரசு இதை உணர்ந்தது. சீன முதலீடு, விசாக்கள், மக்களுடனான உறவுகள் மற்றும் டிக் டாக் உட்பட பல சீன பயன்பாடுகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் சீனாவுடனான இரு வழி வர்த்தகம்- 85% சீன ஏற்று மதிகளை உள்ளடக்கிய நூறு பில்லியன் டாலர் என்னும் அளவிற்கு- புதிய நிலைகளுக்கு உயர்ந்தது.

2024 பொருளாதார ஆய்வறிக்கையின் ஒப்புதல் வாக்குமூலம்

2024 பொருளாதார ஆய்வு அறிக்கை பகிரங்க மாக ஒரு எச்சரிக்கையை முன் வைத்தது:  நமக்கு வேறு பல ஆபத்துக்கள் உள்ளன. பல விஷயங்களைப் போலவே மிகச்சிறந்த முதல் உலக நாடுகளில் நாம் வாழவில்லை இரண்டாவது மற்றும் மூன்றாவது சிறந்த தேர்வுகளில் ஒன்றை நாம் தேர்வு செய்ய வேண்டும். மொத்தத்தில் இந்திய உற் பத்தியை அதிகரிக்கவும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியாவை இணைப்பதற்கு சீனாவின் விநியோகச் சங்கிலிகளுடன் இந்தியா தன்னை இணைத்துக் கொள்வது தவிர்க்க முடியாதது. இறக்குமதியை மட்டுமே நம்பி இருப்பதா அல்லது சீன முதலீடுகள் மூலம் அதை ஈடுசெய்வதா என்பது இந்தியா செய்ய வேண்டிய தேர்வு.

சீனாவிற்கும் இந்தியாவுடன் நல்லுறவு தேவை

இந்தியாவுடன் நல்லுறவு கொள்வதும் சீனாவுக்கு அவசியம். உள்நாட்டு நெருக்கடியில் சீனா சிக்கியுள்ளது. சிப்ஸ் (Chips) உள்ளிட்ட அதன் ஏற்று மதிகள் மீதான அமெரிக்க தலைமையிலான மேற் கத்திய நாடுகளின் தடைகளையும் அது கையாள வேண்டும். இரு  நாடுகளுக்கும் இடையே இயல்பு நிலை அவசியம் என்று உணராமல் இருந்திருந்தால் பிரிக்ஸ் மாநாட்டின் போது இருநாட்டின் தலைவர்க ளின் சந்திப்பும் பேச்சு வார்த்தையும் நடைபெறாமல் போயிருக்கும்.

இயல்புநிலை இன்னும் சற்று தொலைவில்!

வெளி விவகார அமைச்சர் கூறியது போல இயல்பு நிலை இன்னும் சிறிது தூரத்தில் உள்ளது. 2020இல் இருந்த நிலைமை திரும்பிவிட்டது என்ற அவரது ஆரம்பகால கருத்துக்களை இது தெளிவுபடுத்தியது.சீனா தனது துருப்புக்களைக் குறைத்து போர் போன்ற சூழலை அகற்றும் பொழுது, இந்திய ராணுவம் அதே போல செய்யும் பொழுது படைவிலக்கலின் விளைவாக  அமைதி ஏற்படலாம் என்பதே இதன் அர்த்தம்.

நடைமுறை வாதமே சிறந்தது

நடைமுறை வாதமே சிறந்தது இந்திய - சீனா உராய்வுகள்  அகற்றப்படுதல்  சந்தே கத்திற்கு இடமின்றி ஒரு நேர்மறையான வளர்ச்சிப் போக்கு தான். நடைமுறைவாதம் (Pragmatism) சிக்கல் தீர்க்கும் ஒரு அற்புத முறையாகும். குறிப்பாக சர்வதேச உறவுகளில்   பெரும்பாலும் கொள்கை கள், எதார்த்தவாதம் என்னும் பலி பீடத்தில் வைக்கப் படுகின்றன. அடையக்கூடியது, சாத்தியமற்றது, உரை யாடல், பேச்சுவார்த்தைகள் என்பவற்றின் எதார்த்த மான மதிப்பீடானது சிக்கல்களை தீர்க்கும் சிறந்த வழி மட்டுமல்ல, நன்மைகளும் விளைவிப்பதாகும்.ராஜதந்திரத்தின் ஆற்றலை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்த விடாமுயற்சியுடனான ராஜ தந்திரத்தின் அவசியத்தை புரிந்து கொள்ளாமல் அதற்கு நேர் மாறாக மோடி அரசு நம் கடினமான அண்டை நாடுகளுடன் நடந்து கொள்ள விரும்பு கிறது. அதிகார சமச்சீரற்ற தன்மை இந்தியாவிற்கு சாத கமாக உள்ள நிலையில் பாகிஸ்தானுடன் உறவை சரி செய்ய இது உதவுமா என கூறுவது சற்று கடினம்தான். தேவை சிறந்த பார்வை! டோக்ளாமில் இந்தியா- சீனா- பூடான் முச்சந்தி யில் பிரச்சனை ஏற்பட்ட போது இந்துத்துவா பாணியில் பாஜக மற்றும் அதன் நண்பர்களால் லால் ஆங்க் (சிவந்த கண்கள்) என்ற சொற்றொடர் பிரபலப்படுத் தப்பட்டது. ஆனால் அந்த நிலையில் இருந்து தற்போது மோடி அரசாங்கம் விலகி சீனாவுடன் வெகு தூரம் ஒன்றாக பயணித்துள்ளது. சீனாவிற்கு எதிராக  விளம்பரத்தை தேடும் வகையில் தன் வலிமையை குறிக்கும் வார்த்தை ஜாலங்கள் தற்பொழுது அதனிடம் அறவே இல்லை. கசப்பு மாத்திரைகளை விழுங்கியது யார்? நடைமுறைவாதத்தின் குளிர்ந்த தர்க்கங்களால் உந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சமரசத்தை தந்துள்ளன. டேம் ஜோக் மற்றும் டெப் சாங்கில் சீனா வால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோந்து களை  இந்தியா மீண்டும் மேற்கொள்ளும் நிலை ஏற்பட் டுள்ளது. மோடி அரசாங்கத்திடமிருந்து எந்தவித தகவல்களும் வரவில்லை என்றாலும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள யாங்ட்சே  மற்றும் அசாபிலா பகுதிகளில்   ரோந்து செல்ல சீனா அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற  ஊடக அறிக்கைகளை அது மறுக்கவில்லை. இந்தப் பகுதிகள் தெற்கு திபெத் என்ற சீனா உரிமை கொண்டாடுபவை. பல ஆண்டுகளாக இந்திய துருப்புகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இது உண்மை என்றால் மோடி அரசாங்கம் பாதுகாப்பு மண்டலங்கள் என்னும் கசப்பு மாத்திரையை விழுங்கி உள்ளதா?

உண்மையை வெளியிடுக

உறையும் பனிமலையின் உயரங்களில் உண்மை யில் நடந்தது என்ன? இந்தியா ஏன் ஆச்சரியத்தில் சிக்கியது? இது குறித்து மோடி அரசாங்கம் ஒளிவு மறைவுடனேயே எப்பொழுதும் நடந்து கொண்டுள் ளது. பொதுக்களத்தில் அது  குறித்த தகவல்கள் இல்லை.

பிரதமரின் விநோத விளக்கம்

“எல்லைக்குள் யாரும் அத்துமீறி நுழையவில்லை. இப்போது உள்ளே யாரும் இல்லை. எல்லையில் முகாம்கள் கைப்பற்றப்படவில்லை” என்று கல்வான்  சம்பவத்தை ஒட்டி நடந்த அனைத்து கட்சி கூட்டத் தில் பிரதமரின் உறுதியான மறுப்பு முதல் அறிக்கை யாக வெளியானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக நடந்த பல சுற்று பேச்சுகளில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்தும் திருப்திகரமான விளக்கங்கள் இல்லை. மோடி அரசாங்கம் சீனா குறித்து அதன் சினம் கொண்ட பார்வையை  (லால் ஆங்க்) பாங்காங் ஏரியின் கரையில் புதைத்து விட்டதால் 2020 முதல் லடாக்கில் உண்மையில் என்ன நடந்தது என்பதை மோடி அரசாங்கம் முழுமையாகக் கூறவும் தெளிவு படுத்தவும் தற்பொழுது நல்ல நேரம். ராணுவத் தீர்வுகள் மட்டுமே வழி என்று நம்பி வந்த ஒரு தேசத்திற்கு “இந்தி சீனி பாய் பாய்” என்பதே சிறந்தது  என்பதை மீண்டும் வலியுறுத்த இது உதவட்டும்.

நன்றி : தி ட்ரிப்யூன் 5/11/24. 
தமிழில் : கடலூர் சுகுமாரன்