உதவித்தொகை உயர்வு முதல் வங்கி கடன் வரை
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) தமிழக முதல்வருக்கு முக்கிய கோரிக்கைக ளின் மனுவை சமர்ப்பித்துள்ளது. சங்கத்தின் தலைவர் தோ.வில்சன் மற்றும் பொதுச்செய லாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள மனுவில், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த பின்வரும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன: உதவித்தொகை உயர்வு கோரிக்கை: H 40% மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு ரூ.6000 H ஊனமுற்றோருக்கு ரூ.10,000 H முதுகுதண்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு ரூ.15,000 வழங்க வேண்டும் வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைகள்: H மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்த வேண்டும் H பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் H அரசு துறையில் 4% இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் உதவி தொகை வழங்கும் முறையில் மாற்றம்: H மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கமிட்டிகளை ரத்து செய்ய வேண்டும் H வயது வரம்பு சான்று இல்லாமல் அனைத்து சலுகை களையும் வழங்க வேண்டும் மருத்துவ உதவிகள்: H காது கேளாதோருக்கான கருவிகளின் பேட்டரிகளை அரசே மாற்றி தர வேண்டும் H மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு (சுமார் 8 லட்சம் பேர்) அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை மாவட்டந்தோறும் அமைக்க வேண்டும் நிதி உதவி: H வங்கி ஏடிஎம் அட்டை வழங்குவதில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும் H சிறு மற்றும் குறு தொழில் தொடங்க கடன் பெற உத்தரவா தம் (SURETY) தேவை என்பதை நீக்க வேண்டும் Hகுடும்ப ஊனமுற்றோருக்கான கூடுதல் உதவித்தொகை ரூ.1000/-ஐ உயர்த்த வேண்டும் இந்த மனுவின் நகல்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் ஆகியோரிடமும் அளிக்கப்பட்டுள்ளன.