articles

img

கால்பந்து வீரர் நானி கம்யூனிஸ்ட் கட்சியில்... - எம்.சதீஸ்குமார்

கால்பந்து வீரர் நானி கம்யூனிஸ்ட் கட்சியில்...

போர்ச்சுக்கல் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் நானி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளார். விளையாட்டு ஆர்வமிக்கவர்கள் நானியை அறியா மல் இருக்க வாய்ப்பில்லை. போதுமான உயரம் இல்லாமல் களத்தில் பம்பரமாக சுழலும் நானிக்கு ஐரோப்பாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில்,”உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவு அளிக்க உள்ளேன்” எனக் கூறி நானி போர்ச்சுக்கல் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளார். “லூயிஸ் கார்லோஸ் அல்மெய்டா டா குன்ஹா” என்ற இயற்பெய ரைக் கொண்ட நானி போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்தவர்.  போர்ச்சுக்கல் தேசிய அணிக்கு மட்டுமின்றி, தலை சிறந்த ஐரோப்பிய கிளப் கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து கிளப்) மற்றும் வாலன்சியா (ஸ்பெயின் கிளப்) என 12 முக்கிய அணிக்காக  விளையாடி பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். போர்ச்சுக்கல் அணிக்காக சர்வதேச அளவில் 24 கோல்களும் (உதவி கோல் - 112), கிளப் அணிகளுக்காக 97 கோல்களும் (உதவி கோல் - 455) அடித்து சாதனை படைத்துள்ளார்.  ரொனால்டோவின் நண்பர் உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நெருங்கிய நண்பர்.  இருவரும் ஒரே அணி என்பதால் பல்வேறு வகையில்  போர்ச்சுக்கல் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ள னர். குறிப்பாக 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை யை ரொனால்டோ - நானி கூட்டணி வென்று வரலாறு படைத்தது. இத்தகைய சூழலில் நானி போர்த்துக்கீசிய கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளார். நானி அரசியலில் காலடி வைப்பது இதுவே முதல்முறையாகும். போர்ச்சுக்  கல் நாட்டின் இடதுசாரி கூட்டணியாகக் கருதப்படும் “ஜனநாயகக் கூட்டணிக்கு” தனது ஆதரவை அறி வித்துள்ளார். அதே போல வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் களமிறங்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக நானி தரப்பில் வெளியான தகவலில், ”தனது நாட்டின் முன்னணி அரசியல் அமைப்புகளில் ஒன்றான மற்றும் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் ஜனநாயகக் கூட்டணிக்கு தனது ஆதரவை நானி அறிவித்துள்ளார். இந்தக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் நுழையத் தயாராகி வரு கிறார்” என அதில் கூறப்பட்டுள்ளது. பிரச்சாரம் தொடக்கம் போர்ச்சுக்கலின் இடதுசாரிக் கூட்டணி என அழைக்கப்  படும் ஜனநாயகக் கூட்டணிக்கு (கம்யூனிஸ்ட் கட்சி (PCP) மற்றும் கிரீன் கட்சியுடன் (CDU)) ஆதரவாக நானி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. குறிப்பாக அரிவாள் சுத்தியலுடன் நானி  புகைப்படம் அடங்கிய போஸ்டர்களுடன் இளைஞர்கள்  பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக சமூக வலைத்தளங் களில் செய்திகள் வட்டமடித்து வருகின்றன. இடதுசாரி கூட்டணிக்கு  சாதகத்தை ஏற்படுத்தும் போர்ச்சுக்கல் கால்பந்து விளையாட்டில் ஆர்வமிக்க நாடாகும். அங்கு நானிக்கு, நம்மூரில் உள்ளது போன்று  பல இளைஞர் அமைப்புகளும் உள்ளன. அவருக்கு ஆதரவாக சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பி னரும் உள்ளனர். இதனால் நானி கம்யூனிஸ்ட் இயக்கத்  தில் சேர்ந்து இருப்பது இடதுசாரிக் கூட்டணிக்கு சாத கத்தை ஏற்படுத்தும் செய்திகள் வெளியாகியுள்ளன.