articles

img

மனித நேயம் என்றும் மரிப்பதில்லை! - தமிழ்

மனித நேயம்  என்றும் மரிப்பதில்லை!

உலக மகா திரைக் கலைஞன் சார்லி சாப்ளின் நடித்த ‘தி கிட்’ திரைப்படம் ஆதரவற்ற குழந்தையை வளர்க்கும் கதையைக் கொண்டது. தமிழ்த் திரையின் உச்சநட்சத்திரமாக ஜொலித்த எம்ஜிஆர் நடித்த “பெற்றால்தான் பிள்ளையா” திரைப்படமும் அத்தகைய கதையம்சம் கொண்டதே. அதையும் விஞ்சும் உண்மைக் கதை அசாமில் நடந்துள்ளது.

அசாமில் உள்ள தின்சுகியா மாவட்டத்தில் ஓர் ஏழை  காய்கறி வியாபாரி இருந்தார். சோபரன் என்ற அவர் ஒரு  நாள் தன் வண்டியில் காய்கறிகளைத் தள்ளிக்கொண்டு செல்லும்போது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்.  அருகில் சென்று பார்த்தபோது, ஒரு பெண் குழந்தை  அழுதுகொண்டிருப்பதைக் கண்டார். சிறிது நேரம் பார்த்தார், ஆனால் யாரையும் காணவில்லை. 30 வயது டைய, திருமணமாகாத அவருக்கு அந்தக் குழந்தை யை அங்கேயே, அப்படியே விட்டுச் செல்ல மன மில்லை. அவர் அந்தக் குழந்தையுடன் தன் சிறிய வீட்டிற்குச் சென்றார்.  யாருடைய பொறுப்பிலும் விடுவதற்கு வீட்டில் ஆள்  இல்லாததால், தன் வண்டியில் குழந்தையை வைத்துக்  கொண்டே காய்கறி வியாபாரம் செய்து கொண்டு இருந்  தார். அந்தக் குழந்தைக்கு ‘ஜோதி’ என்று பெயரிட்டார்.  அவள் வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் வயதை அடைந்ததும், அவளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். ஏழையான அவர் கடுமையாக உழைத்து அந்தக் குழந்தையை பட்டம் பெறும் வரை படிக்க வைத்தார்.  2013 இல், அவள் கணினி அறிவியலில் பட்டம் பெற்றாள். 2014 இல், பொது சேவை ஆணையம் நடத்திய  தேர்வில் அவள் உயர் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தாள். இவ்வாறாக ஜோதி உதவி வருமான வரி ஆணையராக நியமிக்கப்பட்டாள்.  தன் வளர்ப்பு தந்தையின் கண்ணீரைத் துடைத்து, இன்று அவரைத் தன் சொந்த தந்தையாகவே ஏற்று,  அமைதியான ஓய்வு வாழ்க்கையை நடத்த அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, இருவரும் ஒன்றாக  வாழ்கிறார்கள்.  “கல்வியே அனைத்துச் செல்வங்களிலும் சிறந்தது”  மற்றும் “கடின உழைப்பு அமைதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்” என்ற இரண்டு நற்பண்புகளை இவர் களின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறுகிறோம்.