articles

img

பீடித் தொழிலாளர்களின் உரிமைக் குரல் தோழர் வே.கண்ணன் - எஸ்.டி.சங்கரி

பீடித் தொழிலாளர்களின் உரிமைக் குரல் தோழர் வே.கண்ணன் - எஸ்.டி.சங்கரி

1946 இல் அச்சுத் தொழிலா ளர் சங்கம் துவக்கப்பட்ட போது தீவிர கடவுள் பக்தரான தோழர் வே கண்ணன் சங்கத்தில் சேர்ந்து சங்க ஈர்ப்பின் காரணமாக தீவிர ஊழியர் ஆனார். சாமியாராக இருந்து 1947 இல் கம்யூனிஸ்ட் ஆக மாறியவர் தோழர் வே. கண்ணன்.   ஏற்கனவே மந்த நிலையில் செயல் பட்டுக் கொண்டிருந்த பீடி சங்கத்தை புன ரமைக்க கட்சி பணித்தபோது அதனை ஏற்று பணியாற்றினார்.  எவ்வித உரிமை களும் இன்றி பணியாற்றிய பீடித் தொழி லாளர்களை அமைப்பு ரீதியாக திரட்டி வலுவான போராட்டங்களை உருவாக்கி வழி நடத்தியவர் தோழர் வே. கண்ணன்.  1955 இல் ஆயிரம் பிடி சுற்றினால் ஒரு ரூபாய் 12 அணா கூலி. இதில் ஆறு அணா  பிராஞ்ச் மேனேஜருக்கு போய்விடும்.

அற்பக் கூலிக்கு உழைப்பவர்களாக இருந்த பீடித் தொழிலாளர்களின் உரி மைக்காக 1955 -இல் டிசம்பரில் வேலை நிறுத்தம் வலுவாக நடைபெற்றது. இதன் விளைவாக 1957 -இல் பீடி தொ ழிலாளர்கள் பிரச்சனைகளை ஆராய  ஒரு நபர் குழுவை அமைக்க சட்டமன்றத் தில் தோழர் வி. கே. கோதண்டராமன் கோரிக்கை வைத்தார்.சட்டமன்றதுக்கு வெளியே தோழர் வே. கண்ணன் ஆயி ரக்கணக்கான தொழிலாளிகளை திரட்டிப் போராடினார்.  இதன் பயனாக 1958இல் சென்னை பீடித் தொழிலாளர் சட்டம் வெளியிடப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் மட்டுமே இச்சட்டம் உதயமானது. இதனை உரு வாக்கிட, அமலாக்கிட பலமுறை போராட் டக் களம் கண்டவர் தோழர் வே. கண்ணன்.  

இன்று பீடித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச உரிமைகள், பி. எப். பென் ஷன், வார விடுமுறை கூலி, போனஸ் உள்ளிட்டவை கிடைக்கிறது என்று சொன் னால் அதில் தோழர் வே. கண்ணன் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. பெண் பீடித் தொழிலாளர்களுக்கு சட்ட உரிமைகள் இல்லாத நிலையில் அவர்களுக்கான போராட்டத்தை நடத்தி உரிமைகள் பெற்றுத் தந்தவர்.    சமரசம் இல்லாத போராளியாக தனது வாதங்களை திறம்பட வைக்கும் தலைவர் வே. கண்ணன். தனது திரு மணத்தை மட்டுமன்றி தனது குழந்தை களின் திருமணத்தையும் சீர்திருத்தத் திருமணமாக நடத்தியவர். சடங்கு சம்பிர தாயங்களை ஒருபோதும் அனுமதியா தவர். கடலூர் சிறையில் இருந்தபடியே கருகம்பத்தூர் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்.  

பீடித் தொழிலில் ஃபேக்டரி முறை அமலில் இருந்தபோது ஒரு நூறு தொழி லாளர்கள் பீடி சுற்ற, ஒரு தொழிலாளி அன்றைய தீக்கதிரை, கட்சியின் இலக்கி யங்களை உரக்கப் படிப்பார். மாலை யில் ஆளுக்கொரு கட்டு பீடி, படிக்கும் தோழருக்கு சுற்றிக் கொடுப்பார்கள்.

அன்றைய வேலூரில் கல்லூரி பேராசிரி யர்கள் கூட பீடித் தொழிலாளர்களோடு  அரசியல் விவாதம் செய்ய முடியாத அளவில் தொழிலாளிகளுக்கு அரசியல் புரிதலை, அரசியல் உணர்வை ஏற் படுத்திய தோழர் வே.கண்ணன்.  கட்சியின் மாவட்டத் தலைவர்களில் ஒருவராக, பீடி தொழிலாளர் சம்மேள னத்தின் மாநிலத் தலைவராக, சிஐடியு மாவட்டத் தலைவராக, ஆயிரக்கணக் கான தொழிலாளர்களின் உரிமைக ளைப் பெற்றுத் தந்தவர். அவருடைய குடும்பம் முழுவதும் தலைமறைவு காலங்களில், நெருக்கடி நேரங்களில் கட்சித் தோழர்களை பாதுகாத்தது. அவரின் துணைவியார் சிவகாமிக்கு இதில் மகத்தான பங்கு உண்டு. அவரின் மகன் கே. திருச்செல்வன் சிஐடியு துணைப் பொதுச் செயலாளராக, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகச் செயல்படுகின்