articles

கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை பாதுகாக்க அணிதிரள்வோம்!

கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை பாதுகாக்க அணிதிரள்வோம்!

சிபிஐ(எம்) அகில இந்திய மாநாட்டுத் தீர்மானங்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்)யின் 24ஆவது மாநாடு, கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) தலைமையிலான மாநில அரசின் தனித்துவமான அம் சத்தை, அதாவது இந்துத்துவா சித்தாந் ந்தத்திற்கு எதிராக இருப்பதையும், மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவ தையும், அதே நேரத்தில் ஒன்றிய அர சின் நவதாராளவாத கொள்கைகளுக்கு மாற்றாக திகழ்வதையும் மீண்டும் பெரு மிதத்துடன் சுட்டிக்காட்டுகிறது. மத்தியில் உள்ள பாஜக-தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாநிலத்திற்கு எதிராக நிதி முற்றுகையை விதித்துள்ளது; இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. துரதிர்ஷ்டவச மாக, எதிர்க்கட்சியான காங்கிரசும் இந்த நிலையற்ற முயற்சிகளில் இணைந்துள் ளது. சிபிஐ(எம்) 24ஆவது மாநாடு, மக்களின் அனைத்து ஜனநாயகப் பிரிவி னரையும் கேரளாவின் எல்டிஎப் அரசை பாதுகாக்க அணிதிரள அழைப்பு விடுக்கிறது.

கேரளாவின் மாற்று வளர்ச்சிக் கொள்கைகள்

கேரளாவில் தொடர்ந்து வரும் இடது சாரி அரசுகள் பின்பற்றிய மாற்று வளர்ச்சிக் கொள்கைகள், உள்ளடக்கிய வளர்ச்சிக்கான மறுவிநியோக உத்தியில் கவனம் செலுத்தியுள்ளன. நிலச் சீர்திருத் தங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்கள் மற்றும் குறைந்த பட்ச ஊதிய சட்டங்கள் அதிக ஊதியத்தை உறுதி செய்துள்ளன. அரசாங்கக் கொள் கைகள் அனைவருக்கும் கல்வி, சுகாதா ரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன. 2025-26இல் கடும் வறுமை நிலை முற்றாக ஒழிக்கப்படும். கேரளம், தனது சாதாரண குடிமக்களு க்கு கவுரவமான மற்றும் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்துள்ளது.

சமூக மற்றும்  பொருளாதார சாதனைகள்

சமூக மற்றும் நலச் சாதனைகளில் இந்தியாவில் கேரளம் முன்னிலை வகிக்கிறது; மேலும் கடந்த மூன்று தசாப் தங்களில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியை விட அதிகமாக உள்ளது. தற்போது  படித்த இளைஞர்களின் வேலையின் மையை எதிர்கொள்ள முயற்சி செய்கிறது. இதற்கு பொருளாதாரத்தின் தொழில் நுட்ப அடிப்படையை, மேம்பட்ட அறிவி யல் அறிவு மற்றும் அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக மாற்றுவது தேவைப் படும். இதை அடைய, கேரளாவின் அறிவு மற்றும் திறன் சார்ந்த தொழில்கள் ஈர்ப்புமிக்க முதலீட்டு இடமாக மாற வேண்டும். புதிய தலைமுறை ஸ்டார்ட்- அப் நிறுவனங்கள் பெருக வேண்டும். கேரளா ஒரு அறிவுசார் பொருளாதார மாக மாற வேண்டும்.

தற்போதைய  எல்டிஎப் அரசின் முயற்சிகள்

தற்போதைய எல்டிஎப் அரசின் கீழ் மாநிலம் பின்வரும் முயற்சிகள் மூலம் இத்தகைய மாற்றத்திற்கான முக்கிய தடைகளை சமாளிக்க பெரும் முயற்சி களை மேற்கொண்டு வருகிறது: (அ) கேர ளாவை ஈர்ப்புமிக்க முதலீட்டு இடமாக மாற்றுதல், (ஆ) சிறப்பு நோக்கங்களு டன் கூடிய நிறுவனங்கள் - திட்டங்கள் மூலம் கூடுதல் பட்ஜெட் வள திரட்டல் மூலம் உள்கட்டமைப்பு பற்றாக்குறை யை சமாளித்தல், (இ) உயர் கல்வித்  துறையை புதுப்பித்தல் மற்றும் (ஈ) மாண வர்கள் மற்றும் வேலையில்லாதோ ருக்கு திறன் அளிக்க அறிவுசார் கேரள மக்கள் பிரச்சாரத்தை தொடங்குதல்.

மறுவிநியோக உத்தியில் தொடர்ந்த கவனம்

மேற்கண்ட முன்மாதிரி மாற்றங்க ளை அமலாக்குவதன் பொருள், மாநி லம் தனது மறுவிநியோக வளர்ச்சி உத்தி யிலிருந்து விலகும் என்பதல்ல. பொ துத்துறை நிறுவனங்கள், பொதுக் கல்வி மற்றும் பொது சுகாதாரம் வலுப்படுத்தப் படும். ஜனநாயக உரிமைகள் அல்லது தொழிலாளர் உரிமைகள் குறைக்கப்பட மாட்டாது. ஜனநாயக அதிகாரப் பரவலாக் கம் மற்றும் பங்கேற்பு ஆகியவை சமூக மற்றும் சிறு துறைகளில் நமது தலை யீடுகளை தொடர்ந்து வகைப்படுத்தும். சாதி மற்றும் பாலின பாகுபாடுகளின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போராட்டம்; மற்றும் மதச்சார்பற்ற மற்றும் அறிவியல் மதிப்புகளுக்கான போராட்டம் தொடரும்.

ஒன்றிய அரசின் எதிர்ப்பு

மத்தியில் உள்ள பாஜக-தேசிய ஜன நாயக கூட்டணி ஆட்சி  இத்தகைய விளை வைத் தடுக்க விரும்புகிறது. நிர்வாக கையாளுதல்களுக்கு ஆளுநர் என்ற ஏற்பாட்டை பயன்படுத்துவதோடு, மசோ தாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் மாநிலத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை குறைப்ப தோடு,  மாநில அரசின் நிதி வாய்ப்புகளை யும் ஒன்றிய அரசு சுருக்கி வருகிறது.

நிதி ஒதுக்கீட்டில் வெட்டுகள்

நிதி ஆணையத்தின் கேரளாவுக் கான வரி பகிர்வு பங்கு 10ஆவது ஒன்றிய நிதி ஆணையக் காலகட்டத்தில் 3.9 சதவீதத்திலிருந்து தற்போதைய 15 ஆவது நிதி ஆணையக் காலகட்டத்தில் 1.9 சதவீதமாக குறைந்துள்ளது. ஒன்றிய அரசால் நிதியளிக்கப்படும் திட்டங்களில் கேரள மாநிலத்திற்கு கிடைக்கும் பங்கு 1.6 சதவீதம் மட்டுமே. மூலதனச் செல வில் (CAPEX)  அதன் பங்கு 1.1 சதவீதம் மட்டுமே. பல்வேறு மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டங்களில் இருந்து கேரளத்திற்கு கிட்டத்தட்ட எதுவும் கிடைக்கவில்லை. 2024-25இல் ஒன்றிய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் மொத்தம் ரூ. 25 லட்சம் கோடி அளவில் நிதி பரிமாற்றம் செய்துள்ளது. 2.8 சத வீத மக்கள்தொகை பங்குடன், விகிதாச் சாரமாக கேரளம் ரூ. 70,000 கோடி பெற்றிருக்க வேண்டும். ஆனால் உண் மையில், நடந்த கேரளாவுக்கான பரிமாற்றம் ரூ. 35,000 கோடி மட்டுமே, அதாவது அதற்கு உரியதில் பாதி மட்டுமே.

கடன் பெறும்  உரிமைகளில் தலையீடு

தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தைப் போன்ற ஒரு சிறப்பு நிதிய மைப்பு நிறுவனமான கிப்ஃபி (KIIFB) மூலம் மேற்கொள்ளப்பட்ட மூலதனக் கடன், மாநிலத்தால் மறைமுகமாக கடன் வாங்குவதற்கு சமமானது என்ற போர்வையில் ஒன்றிய அரசு தன்னிச் சையாக மாநில அரசின் வழக்கமான கடனை குறைத்துள்ளது. மேலும் மோ சமாக,  கூடுதல் பட்ஜெட் திட்டங்களுக் காக கேரள அரசு வெளி கடன் வாங்கு வது குறித்த தனது புதிய விதியை முன் தேதியிட்டு அமலாக்க ஒன்றிய அரசு  முடிவு செய்தது. இதன் விளைவாக,  கடந்த மூன்று ஆண்டுகளாக மாநி லத்தின் சந்தைக் கடன்வாய்ப்புகளில் இருந்து ரூ. 10,000 கோடிக்கும் அதிக மாக குறைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மாநில அரசின் நிதிநிலை யை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளன.

பொய்யான பிரச்சாரம்

தனது பாகுபாட்டை மறைக்க, ஒன்றிய அரசும் அதன் ஆதரவாளர்களும் கேரள மாநில அரசுக்கு எதிராக முற்றிலும் தவ றான, அடிப்படையற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.

அழைப்பு

சிபிஐ(எம்) 24ஆவது மாநாடு, தனது அனைத்து கிளைகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரையும் ஒன்றிய அரசை அம்பலப்படுத்த, கேர ளாவின் ஜனநாயக சாதனைகளை பரப்ப மற்றும் கேரளாவில் எல்டிஎப் அரசை பாதுகாக்க பலமாக அணிதிரள அழைக்கிறது.