மகத்தான வர்க்கப் போராளி தோழர் கே.ரமணி
கோவை செங் கொடி இயக்கத் தின் அனைத்துமாக செயலாற் றிய தோழர் கே.ரமணி. 1932 காலகட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளியாக வாழ்க்கை யைத் தொடங்கியவர். இளமை யிலேயே தோழர் கே.ஆர். அவர் கள் தொழிலாளிகளின் துயரங்களை கண்டு தொழிற்சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். இவரது உறுதியான செயல்பாட்டின் காரணமாக தொழிற்சங்க அமைப்பிலும், கட்சியிலும் பல பொறுப்புக்களுக்கு தேர்வு செய்யப்பட்டார். ஒன்றுபட்ட கட்சியில் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மாவட்டத்தின் செயலா ளர், 1959 ஆம் ஆண்டு கட்சியின் தேசிய கவுன் சில் உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் செய லாற்றினார். ஒன்றுபட்ட கட்சியில் இந்தியாவில் உண்மையான புரட்சி கட்சியை உருவாக்குவோம் என முழக்கமிட்டு வெளியேறிய 32 தோழர்களில் ரமணியும் ஒருவர் என்கிற பெருமை கோவை தொழிலாளி வர்க்கத்திற்கு நிரந்தரமாக உண்டு. பதவிகளுக்கு பெருமை மார்க்சிஸ்ட் கட்சி உருவான பின்பு மாவட்டச் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர், சிஐடியு வின் மாநிலத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 4 முறை சட்டமன்ற உறுப்பினர் என்று தான் வகித்த அனைத்து பதவிகளுக்கும் பெருமை சேர்த்தவர். இந்திய கம்யூனிச இயக்கத்தின் தியாக வரலாறுகளைக் கொண்ட பல தலைவர்களுடன் நேரடியாக பழகும் அரிய வாய்ப்பை பெற்றவர். பல்லாயிரம் கட்சிக் குடும்பங்கள், தோழர்கள், அதிகார வர்க்கம், முதலாளிகளோடு பழகிற வாய்ப்பு, மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம், அதே அளவிலான காலத்தில் தலைமறைவு, இத்தனை துயரங்கள் – மகிழ்ச்சிகள் இருந்த போதும், இதில் எதிலுமே கரைந்து விடாத வகை யில் இடதுசாரி அரசியலையும் மனச்சமநிலை யையும் பெற்றிருந்தார். தனித்துவம் தாய் மொழி இவருக்கு தமிழல்ல. இருந்த போதும் கேட்போர் வியக்கும் வகையில் எளிய தமிழில் பல அரிய பழமொழிகளை மிகச் சரள மாக மேடைப்பேச்சுக்களில் எடுத்து வைப்பார். மூன்றாம் வகுப்பே படித்திருந்தாலும், இயக்கத் தின் தேவையிலிருந்து நல்ல உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசுவார். சின்னியம்பாளையம் தூக்கு மேடைத் தியாகிகளின் மேன்மையை, ஸ்டேன்ஸ் மில் துப்பாக்கிச்சூட்டை நேர் சாட்சியாக தான் கண்டதை உணர்வுப் பூர்வமாக விவரித்துச் சொல்வது, இவரது தனித்துவமாகும். 60 ஆண்டு பயணம் கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருந்த எந்த சமூகத்தையும் சார்ந்தவரல்ல. இருந்த போதும் இவரது நேர்மையும் போரா டுகிற உணர்வும் சாதி – மொழி – இன அடையா ளங்களைத் தாண்டி பல்லாயிரம் தொழிலாளர்க ளின் நம்பிக்கையைப் பெற்றுத்தந்தது. பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கான அவரது பயணம் 1936 களில் தொடங்கி 60 ஆண்டுகள் தொடர்ந்தது. பேச்சுவார்த்தைகள்- ஒப்பந்தங்கள் என்பதையெல்லாம் தாண்டி, போராட்டம் என்று அறிவித்தால் பத்தாயிரக்க ணக்கில் தொழிலாளர்கள் தெருவில் நிற்பார்கள். அப்படிப்பட்ட பெரும் போராட்டங்களை அரசியல் உணர்வோடு தலைமை தாங்கி நடத்தியவர். மின் ஊழியர் மத்திய அமைப்பு – அரசு போக்கு வரத்து - தோட்டம், ஹிந்துஸ்தான் போட்டோ என இவரது பங்களிப்பு இல்லாத சங்கங்களே தமிழகத்தில் இல்லை என்று சொல்லும் அள விற்கு உழைப்பாளிகளின் கோரிக்கைகளோடு ஒன்றிணைந்தவர். மாற்றாரும் போற்றிய... ரமணி என்றாலே பொதுவுடமை அரசியல் வாதி, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தலைவர் என மாற்றாரும் போற்றும்படியான பெருமிதம் இருந்த தால் வாழ்நாள் முழுவதும் நிமிர்ந்து நின்றார். மேற்கு மாவட்டங்களில் கட்சியை வழிநடத்திய ஆர். வெங்கிடு - கே.பூபதி - டி.பாலன்- நீலகிரி என்.வாசு - கே.சி.கருணாகரன் - யூகே.வெள்ளிங் கிரி - எம் .நஞ்சப்பன் - கே.எஸ்.கருப்புசாமி – கே. தங்கவேல் – கே.துரைராஜ் – என்.வி.தாமோதரன் – பி.ஆர்.நடராஜன் – ஆர்.பாலகிருஷ்ணன் – ப.மாரி முத்து என்ற நீண்ட பட்டியலில் ரமணி என்கிற மூன்றெழுத்தின் பங்களிப்பு, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. எளிமை - நேர்மை கோவையில் செயலாற்றிய நம் இயக்கத் தலைவர்களில் எளிமை என்றால் ரமணி தான், ரமணிக்கு உதாரணம் ரமணி தான். தோழர் கே.ஆர். பளபளபான உடைகளுடன் காட்சிய ளித்ததை பார்த்தவர்கள் இல்லை. மேல் சட்டை காலரில் கைக்குட்டையை மடித்து வைப்பது சாதாரணம். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதே சைக்கிள் மிதித்து பணியாற்றியவர். மிக நேர்த்தியாக வரவு – செலவுகளை கையாண்டவர் என்பதை இன்றும் நினைவு கூருவோருண்டு. தோற்றத்தில் 5 அடி உயரமே இருந்தாலும் பொது வெளியில் சொல்லால் – செயலால் – தியாகத்தால் இவர் அடைந்த உயரம் பல மடங்காகும். மார்க்சிய அரசியலுக்காக தோழர்.கே.ஆர். போன்ற அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களின் தொண்டால் உருவாக்கப்பட்ட அமைப்பில் செயலாற்றுகிறோம். அந்த முன்னோடிகளின் பாதையில் வர்க்கத்தை ஒன்று திரட்ட நீள்பயணம் தொடர்கின்றோம். நிச்சயம் முடித்து வைப்போம்.