ஆந்திர மண்ணில் மிகச்சிறந்த கட்சி அமைப்பாளர் - அ.அன்வர் உசேன்
தோழர் எல்பிஜ என ஆந்தி ராவில் நேசத்துடன் அழைக்கப்படும் தோழர் லவு பால கங்காதரராவ் 1921ஆம் ஆண்டு ஆகஸ்டு 3ஆம் நாள் பிறந்தார். அவர் மத்தியக் குழுவிலும் பின் னர் அரசியல் தலைமைக் குழுவி லும் பணியாற்றியவர். தனது 17ஆவது வயதில் 1938ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். நவரத்தின தலைவரான பசவபுன்னையா தலைமையின் கீழ் மாணவர்களை திரட்டிய பால கங்காதர ராவ் விரைவில் முக்கிய மாணவர் தலைவராக மிளிர்ந்தார். 1942ஆம் ஆண்டு தனது 21 வயதில் கட்சியின் முழு நேர ஊழியரானார்.
தொண்டர்படை ஊழியர்
அவர் முழுநேர ஊழியராக இணைந்த நேரம் கம்யூனி ஸ்ட் கட்சியின் கடுமையான சோதனை காலம். அப்பொழுது ஜெர்மனியின் இட்லர் படையினர் சோவியத் யூனியனை தாக்கியதால் இரண்டாம் உலகப்போரின் தன்மை மாறி விட்டது எனவும் இட்லரை தோற்கடிப்பதே முக்கிய இலக்கு என வும் கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பிட்டது. இதனால் “வெள்ளை யனே வெளியேறு” இயக்கத்தில் பங்கேற்க கம்யூனிஸ்டு கள் மறுத்தனர் என குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சியினர் கம்யூ னிஸ்டுகள் மீது அவதூறுப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்ட னர். இதனால் கட்சி தனிமைப்பட்ட நேரம் அது. கம்யூனிஸ்டு கள் எங்கு கூட்டம் நடத்தினாலும் காங்கிரஸ்காரர்கள் அங்கு திரண்டுவந்து கூட்டத்தை சீர்குலைப்பது வழக்கம். இதனை எதிர்கொள்ள ஒரு தொண்டர் படையை உருவாக்குவது என கட்சி முடிவு செய்தது. அத்தகைய தொண்டர் படையின் முக்கிய ஊழியராக எல்பிஜி பணியாற்றி காங்கிரஸ் விஷமிகளை எதிர்கொண்டார்.
தெலுங்கானா போராளிகளுக்குப் பயிற்சி
தெலுங்கானா போராட்டத்தில் எல்பிஜி நேரடியாகப் பங்கு கொண்டார். இரண்டாம் உலகப்போரின் பொழுது ஜப்பா னியப் படைகளை எதிர்கொள்ள அளிக்கப்பட்ட ராணுவ பயிற்சியை எல்பிஜி பெற்றிருந்தார். எனவே அவரும் மேஜர் ஜெய்ப்பால் சிங்கும் போராளிகளுக்கு பயிற்சி அளிக்க பணிக்கப்பட்டனர். முதலில் நிசாம் படைகளையும் பின்னர் இந்திய ராணுவத்தையும் சாதாரண கிராம மக்கள் வீரத்து டன் எதிர்த்து போரிட்டதில் எல்பிஜியின் பயிற்சி மிக முக்கிய மானது. அந்த கால கட்டத்தில் கம்யூனிஸ்டுகளை கண்டவு டன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பலமுறை அத்தகைய கொலைத் தாக்குதல்களிலிருந்து எல்பிஜி தப்பித்துள்ளார். 1955ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சி 35% வாக்குகளை பெற்றாலும் தொகுதி கள் 40லிருந்து 15ஆக சரிந்தன. இது கட்சியின் ஒரு பிரிவி னரிடையே கடும் சோர்வை உருவாக்கியது. கட்சி தலைமை யின் ஒரு பிரிவு முழு நேர ஊழியர்களை ஏதாவது அரசு பணி அல்லது விவசாயத்துக்கு செல்லுமாறு கூறினர். சிலர் அவ்வாறு போகவும் செய்தனர். ஆனால் தோழர் எல்பிஜி இதனை நிராகரித்து கட்சியின் முழு நேர ஊழியராக சிறிதும் ஊசாலாட்டமின்றி தொடந்தார். தோழர்கள் சுந்தரய்யா/ பசவபுன்னையா/ பிரசாதராவ் ஆகியோருடன் இணைந்து கட்சியை வலுவாக்கினார்.
தனித்துவத் திறமை
கட்சியின் சித்தாந்த நிலைபாடுகளில் மதில் மேல் பூனை எனும் பேச்சே தோழர் எல்பிஜியிடம் இருந்தது இல்லை. வலு வான மார்க்சிய- லெனினிய அடிப்படைகளில் நின்று முதலில் திருத்தல்வாதத்தையும் பின்னர் இடது சீர்குலைவு வாதத்தையும் எதிர்த்து கடுமையாகப் போராடினார். தோழர் எல்பிஜி மிகச்சிறந்த கட்சி அமைப்பாளர். நீண்ட நாட்கள் குண்டூர் மாவட்டக் குழுவின் செயலாளராக இருந்தார். பின்னர் ஆந்திர மாநிலக் குழு செயலாளராகவும் இருந் தார். அவரது தனித்துவத் திறமை என்பது சிறந்த ஊழியர்க ளை கண்டுபிடிப்பதும் அவர்களுக்கு பயிற்சி அளித்து தலைவர்களாக உருவாக்குவதும்தான். தோழர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மிகவும் பொறுமையாகவும் மென்மையுடனும் அதே சமயத்தில் கொள்கை நிலைபாடு களில் சமரசம் இல்லாமலும் வேறுபாடுகளை களைய முயல்வார். 20 ஆண்டு காலம் மத்தியக் குழுவிலும் பின்னர் அரசியல் தலைமைக் குழுவிலும் செயல்பட்டார். விவசாயத் தொழிலாளர்களின் அமைப்பில் செயல்படுவது என்பது அவருக்கு மிகவும் பிடித்தமான செயலாக இருந்தது. மாநில மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் அமைப்புகளில் செயல்பட்டார். விவசாயத் தொழிலாளர்க ளின் வாழ்வை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கோரிக்கைகளை அவர் உருவாக்கினார்.
சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்
வயது மூப்பு காரணமாக அவர் தன்னை விடுவித்துக் கொண்டு ஆந்திர மாநிலப் பணிகளுக்கு வந்தாலும் இறுதி மூச்சு வரை கட்சிக்காக பணியாற்றி கொண்டிருந்தார். “சுந்த ரய்யா விஞ்ஞான கேந்திரம்” உருவாக்கிய சிற்பி அவர். இன்று இது மிகப்பெரிய நூலகமாகவும் அறிவியல் ஆய்வு மையமா கவும் திகழ்கிறது. தனது வாழ்நாளில் 8 ஆண்டுகள் தலை மறைவு வாழ்விலும் 2.5 ஆண்டுகள் சிறையிலும் இருந்தார். தனது சொத்து முழுவதையும் கட்சிக்கு கொடுத்தார். தனது 81ஆவது வயதில் 2003ஆம் ஆண்டு மார்ச் 28இல் காலமானார்.