articles

img

திறமையான கட்சி அமைப்பாளர் சரோஜ் முகர்ஜி

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இருந்த தோழர் சரோஜ் முகர்ஜி 14.01.1911 அன்று வங்காளத்தின் பகதூர்பூர் எனும் இடத்தில் பிறந்தார். தனது 13 ஆவது வயதிலேயே 1924இல் மாணவப் பருவத்தில் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றார். அப்பொழுது தோழர் முசாபர் அகமதுவுடன் ஏற்பட்ட தொடர்பு க்கு பின்னால் 1931 ஆம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். 1938ம் ஆண்டு முழு நேர ஊழியரானார். 1939 முதல் 1943 வரை கல்கத்தா மாவட்டக் குழுவின் செயலாளராக இருந்த அவர் 1943 முதல் 1948 வரையிலும் பின்னர் 1951 முதல் 1964 வரையிலும் ஒன்று பட்ட கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்பட்டார்.  

32 பேரில் ஒருவர்

திருத்தல்வாதத்துக்கு எதிராக வலுவாக போரிட்ட அவர் பொது குழுவிலிருந்து வெளி நடப்பு செய்த 32 உறுப்பினர்களில் ஒருவர். பின்னர் இடதுசீர்குலைவு வாதத்துக்கு எதிராக வும் கடுமையான சித்தாந்த அரசியல் தளங்க ளில் மட்டுமல்லாது களத்திலும் கட்சியை காப்பாற்ற கடுமையாக உழைத்தார். 1978 ஆம் ஆண்டு மத்திய குழுவுக்கு தேர்வு செய்யப்பட்ட அவர் 1985 இல் அரசியல் தலைமை குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டார். 1982 ஆம் ஆண்டு தோழர் புரமோத் தாஸ் குப்தா மறைவுக்கு பின்னர் மேற்கு வங்க மாநில குழுவின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இடது முன்னணியின் தலைவரகவும் செயல்பட்டார்.

 பத்திரிகை ஆசிரியர்

மிகச்சிறந்த பத்திரிகையாளரான தோழர் சரோஜ் முகர்ஜி ஒன்றுபட்ட கட்சியின் வங்காள பத்திரிகைக்கும் பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பின்னர் கணசக்திக்கும் முதன்மை ஆசிரியராக செயல்பட்டார். ஏராளாமான கட்டு ரைகளையும் புத்தகங்களையும் எழுதியுள் ளார். அவர் 11 ஆண்டுகள் சிறையிலும் 5 ஆண்டுகள் தலைமறைவு வாழ்வையும் எதிர் கொண்டார். கட்சி ஊழியர்களிடம் மிகவும்  நேசமாகவும் அன்புடனும் பழகிய அவர் கட்சி கட்டுப்பாடில் உறுதியான நிலை எடுத்தார். அவரும் அவரது இணையர் கனக் முகர்ஜி யும் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர்.  பல ஆண்டுகள் இருவரும் கம்யூனில்தான் வாழ்ந்தனர். மேற்குவங்க கட்சியின் வரலாற் றில் மிகப்பெரிய பங்கை ஆற்றிய தோழர் சரோஜ் முகர்ஜி 09.02.1990 ஆம் ஆண்டு கால மானார்.