articles

img

மார்ச் 23 செந்தொண்டர் அணிவகுப்பு கலந்து கொள்ளும் தலைவர்கள்

மார்ச் 23 செந்தொண்டர் அணிவகுப்பு கலந்து கொள்ளும் தலைவர்கள்


கலந்து கொள்ளும் தலைவர்கள்

1    மதுரை புறநகர்    கே.பாலகிருஷ்ணன்
2    காஞ்சிபுரம்        பெ.சண்முகம்
3    வடசென்னை    எல்.சுந்தரராஜன்
4    மத்திய சென்னை    ஜி.செல்வா
5    தென்சென்னை    என்.குணசேகரன்
6    திருவள்ளூர்    ஏ.வி.சிங்காரவேலன்
7    செங்கல்பட்டு    ஏ.ஆறுமுகநயினார்
8    வேலூர்-திருப்பத்தூர்    எஸ்.டி.சங்கரி
9    ராணிப்பேட்டை    வி.அமிர்தலிங்கம்
10    விழுப்புரம்        என்.சுப்பிரமணியன்
11    கள்ளக்குறிச்சி    டி.எம்.ஜெய்சங்கர்
12    திருவண்ணாமலை    என்.பாண்டி
13    கடலூர்        ஜி.மாதவன்
14    மயிலாடுதுறை    எஸ்.ஜி.ரமேஷ்பாபு
15    திருவாரூர்        ஐ.வி.நாகராஜன்
16    நாகப்பட்டினம்    வி.மாரிமுத்து
17    தஞ்சாவூர்        நாகை.மாலி
18    புதுக்கோட்டை    எம்.சின்னதுரை
19    திருச்சி மாநகர்    கே.பாலபாரதி
20    திருச்சி புறநகர்    எம்.ஜெயசீலன்
21    பெரம்பலூர்    சாமி.நடராஜன்
22    அரியலூர்        எஸ்.வாலண்டினா
23    திருப்பூர்        ஜி.சுகுமாறன்
24    கோயம்புத்தூர்    ஆர்.சச்சிதானந்தம்
25    ஈரோடு        கே.சுவாமிநாதன்
26    நீலகிரி        எஸ்.ராஜேந்திரன்
27    தர்மபுரி        டி.ரவீந்திரன்
28    நாமக்கல்        செ.முத்துக்கண்ணன்
29    கரூர்        எஸ்.ஸ்ரீதர்
30    கிருஷ்ணகிரி    எஸ்.நம்புராஜன்
31    சேலம்        ஏ.குமார்
32    தேனி        கே.சாமுவேல்ராஜ்
33    திண்டுக்கல்        மதுக்கூர் ராமலிங்கம்
34    மதுரை மாநகர்    சு.வெங்கடேசன்
35    விருதுநகர்        எஸ்.கண்ணன்
36    சிவகங்கை        எஸ்.கே.பொன்னுத்தாய்
37    இராமநாதபுரம்    எஸ்.பாலா
38    தூத்துக்குடி        கே.அர்ச்சுனன்
39    தென்காசி        பி.சுகந்தி
40    திருநெல்வேலி    கே.ஜி.பாஸ்கரன்
41    கன்னியாகுமரி    க.கனகராஜ்

இந்தியாவின் திசைவழியைத் தீர்மானிக்கும் மாநாட்டில் செந்தொண்டர்களாக பங்கேற்பீர்!

மதுரை, மார்ச் 17 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெற உள்ளது. மாநாட்டின் நிறைவு நாளில் மாபெரும் செந்தொண்டர் அணிவகுப்பும் - லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணியும் நடைபெறுகிறது. செந்தொண்டர் அணிவகுப்பில் இடம்பெறுவோருக்கான பயிற்சி மதுரை அரசரடி யூ.சி. பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செந்தொண்டர் பயிற்சி பெறும் தோழர்களை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் ஞாயிறன்று நேரில் சந்தித்தார். செந்தொண்டர் அணியில் மாற்றுத் திற னாளித் தோழர்களும் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களிடம் பயிற்சி குறித்து ஜி. ராமகிருஷ்ணன் பேசினார். பயிற்சியாளர் வடிவேல் மற்றும் தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் மாவட்டச் செயலாளர் அ. பாலமுருகன், சைகை மொழியில் விளக்கினர். தொடர்ந்து செந்தொண்டர் பயிற்சி யை பார்வையிட்டு ஜி. ராமகிருஷ்ணன் பாராட்டி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டு செம்படைப் பேரணியில் செந்தொண்டர்களாக நீங்கள் கலந்து கொள்வ தில் மகிழ்ச்சி.  மூன்றாவது அகில இந்திய மாநாடு 1953-லும், ஒன்பதாவது மாநாடு 1973லும் மதுரையில் நடை பெற்றது. தற்போது 24-ஆவது மாநாடும், மதுரையில் ஏப்ரல் 2-இல் துவங்கி நடைபெற உள்ளது. மூன்று முறை அகில இந்திய மாநாடு நடைபெற்ற சிறப்பை  மதுரை மாநகர் பெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு இந்தியா முழுவதும் இருந்து ஆயிரம் பிரதிநிதிகள் வர உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்கிறார். திரிபுராவிலிருந்து முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் வருகிறார். அதேபோல இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் போராட்டக் களங்களைக் கண்ட தோழர்கள் கலந்து கொள்கின்றனர். இத்தகைய மாநாட்டில் செந்தொண்டர்களாக கலந்து கொள்ளக்கூடிய மகத்தான வாய்ப்பு இங்கு பயிற்சி பெறும் தோழர்களுக்குக் கிடைத்துள்ளது. எதிர்வரும் காலங்களில் மக்களுக்காகவும், மாண வர்களுக்காகவும், வாலிபர்களுக்காகவும் போராடும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உங்களோடு இருக்கும். இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் பேசினார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் தோ. வில்சன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், இரா. லெனின், ம. பாலசுப்பிரமணியம், ஜெ. லெனின், டி. செல்வராஜ், பயிற்சியாளர்கள் வடிவேல், சரவணகுமார், நல்லதம்பி, பாவெல் சிந்தன் உள்ளிட்ட பலர்  உடனிருந்தனர்.