articles

img

வசிப்பிடம் மக்கள் உரிமை! - உ.வாசுகி

வசிப்பிடம்  மக்கள் உரிமை!  - உ.வாசுகி

டு, வீட்டு மனை பட்டா போன்ற கோரிக்கைக ளுக்காகத் தமிழகம் முழுவதும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகிறது. ஏராளமான மக்கள் நம்பிக்கை யோடு பங்கேற்றுக் கொண்டுள்ளனர். பல இடங்களில் அவற்றை பெற்றும் கொடுத்துள்ளோம். இது அரசின் கருணை சார்ந்த நடவடிக்கையா அல்லது மக்களின் உரிமையா என்பது மிக முக்கியமான கேள்வி.  வீடு என்பது ஆதி காலம் தொட்டு வந்ததல்ல. ஆதி மனிதர்கள் மழை, வெயிலில் இருந்து, மிருகங்களின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு, உறக்கம், ஓய்வு போன்றவற்றுக்காகக் குகைகள், மரத்தடி, மரத்தின் மேல் வசித்தனர். பிறகு வேட்டை மற்றும் உணவு சேகரிப்பு (hunting and gathering) சமூகத்தில் மிருகங்களின் தோல், மரம், இலை தழைகளை வைத்துத் தற்காலிகக் குடியிருப்பை மனிதர்கள் உருவாக்கிக் கொண்டனர். ஆனால் தொடர்ந்து இடம் பெயர்ந்து போக வேண்டிய சூழல் நிலவியதால், தற்காலிக ஏற்பாடாகவே அது இருந்தது. மேய்ச்சல் சமூகம், விரிவான விவசாய ஏற்பாடு வந்த பிறகே  ஓரிடத்தில் தங்குவது (settle) என்ற நிலை ஏற்பட்டது. அப்போது தான் முறையான வீடுகள் உருவாகின. எனவே மனித குல நாகரிக வளர்ச்சியின் ஓர் அடை யாளமாக வீடு அமைந்தது எனலாம். பரிணாம வளர்ச் சியின் படிகளில் உள்ளவற்றுக்கெல்லாம் பொந்து, வளை, கூடு, குகை என இருப்பிடங்கள் உள்ள போது, அதன் உச்சியில் இருக்கும் மனித குலத்தின் பெரும்பகுதிக்கு முறையான குடியிருப்பு இல்லை.  

அரசமைப்புச் சட்டம்  சொல்வது என்ன?  

வீடு அல்லது வசிப்பிடம் அடிப்படை உரிமை என நேரடியாக அரசமைப்புச் சட்டம் கூறவில்லை. ஆனால் அதனுடைய இதர பல பிரிவுகளில் இது உரிமை சார்ந்தது என்பது  உள்ளடங்கியிருக்கிறது. பிரிவு 21 வாழ்வுரிமையை (right to life) உத்தரவாதப்படுத்து கிறது. பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள், இது வாழ்வ தற்கான வெறும் உரிமை அல்ல, கண்ணியமாக வாழ்வ தற்கான உரிமை என்று வரையறுப்பதன் மூலம் வசிப்பிட உரிமையை உள்ளடக்குகின்றன. பிரிவு 19(1)(e) இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கும் உரிமையை அளிக்கிறது. இதிலும் வசிப்பி டம் உள்ளார்ந்து இடம்பெற்றுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் 39(a), 47 போன்றவை குடிமக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தர உயர்வு, பொது சுகாதாரத்துக்கு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பேசுகிறது. இவையும் வசிப்பிட உரிமை சார்ந்ததே. மேலும் பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. குறிப்பாக மனித உரிமை பிரகடனம், பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள், குழந்தை உரிமைகள், பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு, மாற்றுத்திறனாளி உரிமைகள் போன்ற பலவற்றிலும் குடியிருப்பு இணைந்து வருகிறது. அதாவது கண்ணியமாக வாழ்வது என்பதில் வசிப்பிடமும் அடங்கியுள்ளது.

வசிப்பிட பிரச்சனை முதலாளித்துவத்தின் விளைபொருளே!

மார்க்சிய மூலவர் பிரெடரிக் ஏங்கெல்ஸ்,  1845இல் தொழில் புரட்சி காலத்தில்,  இங்கிலாந்தில் தொழி லாளி வர்க்கத்தின் நிலைமைகள் என்ற பெயரில், ஆய்வுகளின் அடிப்படையில் விரிவான ஒரு நூலை  எழுதினார். அதில் முக்கிய பிரச்சனையாக,  தொழி லாளிகளின் மோசமான குடியிருப்புச் சூழலை விளக்கி யுள்ளார். 1872ல் குடியிருப்பு பிரச்சனைகள் (The Housing Question ) என்பது பற்றி மட்டுமே ஒரு நூலை  எழுதினார். ஓர் அறை குடியிருப்பில் பெரிய குடும்பம் வசிப்பது, ஒரே வீட்டை ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பகிர்ந்து வசிப்பது, வெளிச்சம் காற்றோட்டம் சுத்தமான குடிநீர் இல்லாத,  நெரிசல் மிகுந்த குடியிருப்புகளில் வசிப்பது, அதனால் வரக்கூடிய வியாதிகள், அது ஏற்படுத்தும் இறப்பு கள் என ஏங்கெல்ஸ் விவரிக்கிறார். குடியிருப்பு பிரச்சனைகள் என்கிற கண்ணாடியின் வழியாக முதலாளித்துவ நெருக்கடியை அவர் அளந்தார். முதலாளித்துவம், லாபத்தை மட்டுமே முன்னால் வைத்து தொழிலாளர்களின் நலனை அலட்சியப்படுத்துவதன் விளைவே  குடியிருப்பு நெருக்கடி; ஒட்டுமொத்த முதலாளித்துவ சுரண்டலின் ஒரு வெளிப்பாடு அது என்றார். “தொழிலாளர்கள் இரண்டு விதங்களில் சுரண்டப்படுகின்றனர். ஒன்று  தொழிற்சாலைகளில் முதலாளிகளால்; மற்றொன்று  அபரிமிதமான வாடகை மூலம் வீட்டு உரிமையாளர்க ளால்” எனக் குறிப்பிடுகிறார்.  முதலாளித்துவ சமூக அமைப்பில் குடியிருப்பு நெருக்கடி என்பது தற்செயலானது அல்ல; அது முத லாளித்துவத்தின் உள்ளார்ந்த ஓர் அம்சம்;  முதலா ளித்துவம் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பையே உரு வாக்குகிறது; பலரது உழைப்பால் உருவாகும் செல்வ மும் வளங்களும் ஒரு சிலரின் கைகளில் குவிகின் றன; அது பகிர்ந்து அளிக்கப்படுவதில்லை என்ப தெல்லாம் குடியிருப்பு நெருக்கடியின் பின்புலமாக அமைகின்றன என்று விரிவாக விளக்குகிறார். மொத்தத்தில் இது ஒரு வர்க்கப் பிரச்சனை, குடியிருப்பு உரிமைக்காக தொழிலாளிகள் நடத்தும் போராட்டம் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே என்ற சாராம் சத்தை ஏங்கெல்ஸ் முன்வைக்கிறார்.

முதலாளித்துவம் வீடு என்பதை ஒரு சரக்காகப் பார்க்கிறது. உலகப் பொருளாதார நெருக்கடியின் முன்னோட்டமாக அமெரிக்காவில் 2006-2007ல் உரு வான நிதித்துறை சார் நெருக்கடி, வீட்டுக் கடன்களை (sub prime lending/ housing bubble) மையப் படுத்தியே உருவானது என்பதை மறந்து விடக்கூடாது. ரியல் எஸ்டேட், முதலீட்டுக்கான துறை, சந்தைப்படுத் தல் என்ற ரீதியில் தான் வீடு என்பது கருதப்படுகிறது. ஆனால் சோசலிச அமைப்போ, வசிப்பிடத்தை அனைவருக்கும் கிடைக்க வேண்டிய மனித உரி மையாகப் பார்க்கிறது. சோசலிச நாடுகளின் அரசுகள் அனைவருக்கும் வீட்டுரிமை வழங்க பல முயற்சி களை எடுத்து வருகின்றன. அது முழுமையாகாவிட்டா லும், அது மக்களின் உரிமை என்ற அடிப்படையி லேயே அரசின் கொள்கைகளும் அணுகுமுறையும் அமைந்துள்ளன. நவீன தாராளமயக் கொள்கையின் அடிப்படையில் உருவாகும் நகர்மயம், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், மெகா திட்டங்கள் மக்களை வசிப்பிடத்திலிருந்து அகற்றும் விதத்தில் அமைகின்றன. அல்லது அவர்க ளின் நலனைக் கணக்கில் எடுக்காமல் அமைகின்றன. கார்ப்பரேட்டுகளுக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது; மக்களை வசிப்பிடங்களில் இருந்து அகற்று கிறது. கனிம வள சுரங்கக் குத்தகைகளைக் கார்ப்ப ரேட்டுகளுக்கு அளித்து பழங்குடி மக்கள் வெளியேற் றப்படுகின்றனர். சட்டங்கள் இத்தகைய வெளியேற் றத்துக்கு ஏற்ற விதத்தில் திருத்தப்படுகின்றன. கடற்கரை பாதுகாப்பு என்ற பெயரில், நகரத்தை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் மீனவர்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர். கிராம பொது நிலங்களும் வேறு பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டு, அதுவும் மக்களுக்கு இல்லை என்றாகி வருகிறது. புறம்போக்கு, கோயில் நிலங்களில் குடியிருப்போ ருக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. சொந்த வீடு என்பது பலருக்கும் கனவாகவே உள்ளது. மணல், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. வாடகை, அட்வான்ஸ் போன்றவற்றை ஒழுங்கு படுத்தும் ஏற்பாடே இல்லை. மக்கள் ஜனநாயகப் புரட்சியை இலக்காகக் கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு, மக்கள் ஜனநாயக அணியின் அடிப்படை வர்க்கங்கள் சந்திக்கும் இந்தப் பிரச்சனை நெருக்கமானது. ஒட்டுமொத்த முதலாளித்துவ நெருக்கடியின் ஓர் அம்சமான குடியிருப்பு பிரச்சனைக்கான போராட்டங்கள் மூலம், முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டத்தை வலுப்படுத்த முடியும். இத்தகைய சூழலில், வசிப்பி டம் மக்களின் உரிமை என்ற அடிப்படையில் போராட் டங்களை, தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.