தோழர் ஏ.பி.பழனிச்சாமி மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலு கா, எருமார்பட்டி கிராமத்தில், ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதில் களையெடுப்பது, ஆடு, மாடு பராம ரித்தல் போன்ற வேலைகளைச் செய்து வந்தார். கிராமப் பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை தான் அவரால் படிக்க முடிந்தது. ஆனால் 13ஆவது வயதில் மதுரைக்கு வந்து ஹார்வி மில்லில் ரோலிங் டிபார்ட்மெண்டில் வேலைக்கு சேர்ந்து விட்டார். இரண்டாவது உலகப் போர் 1939இல் தொடங்குவதற்கு முன் இவர் எஸ்.ஆர்.வரத ராஜுலு நாயுடு தலைமையிலிருந்த மதுரை லேபர் யூனியன்(எப்.எல்.யூ) சங்கத்தில் தீவிர ஊழியராக இருந்தார். அதன் பின்பு செங்கொடி அமைப்பு மில் தொழிலாளர்களுக்காக செயல் பட்டதை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1940-42ஆம் ஆண்டுகளில் தலைமறை வாக இயங்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு 1943-ஆம் ஆண்டில் கம்யூ னிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அப்போது ஹார்வி மில் தொழிலாளர்கள் முதன் முதலாக போனஸ் கோரிக்கைக்காகப் போராட முன்வந்தனர். அப்போராட்டத்தின் முன்னணி ஊழியர்களாக விளங்கிய ஏ.பி.பழனிச்சாமி உள்ளிட்ட 7 பேர்களை அன்றைய அந்நிய ஆட்சி கைது செய்து 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்தது. தண்டனை காலத்தை ஆந்திராவிலுள்ள அலிப்புரம் சிறையில் கழித்தனர். தண்டனைக் காலம் முடிந்து விடுதலை யாகி வந்தவர்களை ஹார்வி மில் நிர்வாகம் வேலையில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டது. 1944ஆம் ஆண்டில் மதுரை மில் தொழிலாளர்க ளின் நலனுக்காகப் பாடுபடுவதற்காக, மதுரை பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் தோழர் பி.ராம மூர்த்தியை தலைவராகக் கொண்டு ஆரம்பிக் கப்பட்டது. அதில் தோழர் பழனிச்சாமி ஹார்வி மில் தொழிலாளர் வட்டாரத்தில் சிறந்த அமைப்பா ளராகப் பணியாற்றினார்.
சிறைவாசம்
கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நகர்க் குழுச் செயலாளராகவும், பின்னர் மாவட்டக்குழுச் செயலாளராகவும் பணியாற்றிய பழனிச் சாமி 1949ஆம் ஆண்டில் பாதுகாப்புக் கைதி யாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1951-இல் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த சிறிது காலத்தில் மீண்டும் கட்சி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். 1951 பிப்ரவரி 22ஆம் தேதி தூக்குமேடை தியாகி பாலு அவர்களை விடியல்காலை தூக்கு மேடை ஏற்றினார்கள். செய்தி கிடைத்ததும் மதுரை மாநகரத்தில் பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளி மக்களும் திரண்டனர். சிறை அதிகாரி அன்று கூடிய கூட் டத்தை பார்த்து மிரண்டு பின்வழியாக பாலுவின் உடலை காவலர்கள் கொண்டு சென்றனர். தோழர் பாலு வாழ்க என கோஷம் எழுப்பியதும் செங்கொடி வாழ்க என முழக்கம் எழுப்பப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகளின் தியாக வரலாற்றில் என்றென்றும் மறக்க முடியாத அன்றைய தினம் தூக்குமேடை தியாகி பாலுவின் மனைவி வீரம்மாள் கைக் குழந்தையோடு கதறி அழுத போது, கம்யூ னிஸ்ட் இயக்கம் இருக்கிறது என்று தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
பொதுத் தேர்தலும் நகராட்சி தேர்தலும்
1952 பொது தேர்தலில் வெற்றி பெற்று சிறைச்சாலையில் இருந்து தோழர்.பி.ராம மூர்த்தி வெளியே வந்த போது நகரச் செயலாளராக இருந்த தோழர்.ஏ.பி.பழனிச்சாமி அவர்களின் தலைமையில் ஊர்வலமாய் சென்றனர். அதில் பங்கேற்க வீடு வீடாகச் செங்கொடிகளோடு புறப்பட்டு அணி அணியாய்த் திரண்டனர். 1953-இல் மதுரை நகராட்சிக்கு நடந்த தேர்தலின் போது கூட்டணி அமைப்பதில் அழகரடி வார்டை விட்டுக் கொடுப்பது சம்பந்த மாக கடும் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, விட்டுக் கொடுப்பதினால் ஏற்படும் ஒற்றுமையையும், வெற்றிகளையும், உற்சாகத்தையும் பற்றி கட்சி அணிகள் அனைவருக்கும் விளக்கிக் கூறி அதை ஏற்கச் செய்த பழனிச்சாமியின் திறமை யும், கூர்மதியும் தனிச் சிறப்பு வாய்ந்தது. கூட்டணி யின்வாக்குகள் பிளவுபடாமல் பாதுகாக்கப் பட்டதால் கம்யூனிஸ்ட் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற முடிந்தது. 1953இல் கட்சியின் 3ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்ற காலத்தில் உழைப்பாளி வாக்கமும், விவசாயி வர்க்கமும் லட்சக்கணக் கில் அணிதிரண்டதை வரலாறு சொல்லும். அப்போது இந்திய அரசியலில் முத்தாய்ப்பாக கம்யூனிஸ்ட் இயக்கம் முத்திரை பதித்து, சிறந்து விளங்கியது.
திருமணம்
1954 அக்டோபர் 10இல் பழனிச்சாமி, கிறிஸ்துமதத்தை சார்ந்த வேதமணியை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். இவ ருக்கு 4 பெண்குழந்தைகளும், 2 ஆண் குழந் தைகளும் இருக்கிறார்கள். பழனிச்சாமியின் துணைவியார் மாநகராட்சி பள்ளியில் ஆசிரிய ராக பணியாற்றி வந்தார்.
மீண்டும் கைதுகள்
1962இல் இந்திய-சீன எல்லை தகராறின் போது பாதுகாப்புக் கைதியாக கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு, 1 வருடம் கழித்து விடுதலை செய்யப்பட்டார். 1964 டிசம்பர் கடைசியில் மீண்டும் பாது காப்புக் கைதியாகப் பிடிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 1966 மத்தியில் விடுதலையடைந்து தொடர்ந்து கட்சிப் பணியில் மும்முரமாக ஈடுபட்டார். மதுரையில் 1972இல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய 9ஆவது மாநாடு நடைபெற்றது. இந்திய திருநாட்டின் பாட்டாளி வர்க்க கட்சியின் தளபதியாய் கட்சியை பறை சாற்றியது. அன்றைய தினம் ஒன்றுபட்ட மதுரை மாவட்டச் செயலாளராக ஏ.பி.பழனிச்சாமி, நகரச் செயலாளராக தோழர்.வி.கார்மேகம் ஆகி யோர் செயல்பட்டனர். அன்றைய மாநில கட்சி தலைவர்கள் பி.ராமமூர்த்தி, ஏ.பாலசுப்பிர மணியம், கே.பி.ஜானகியம்மாள், என்.சங்க ரய்யா, என்.வரதராஜன் ஆகியோருடன் இணைந்து மாநாட்டை சிறப்பாக நடத்தினர். இந்த மாநாடு இந்தியாவில் எதேச்சதிகாரம் தலை தூக்குகிற அபாயம் இருக்கிறது என்று எச்ச ரிக்கை செய்தது. மதுரை மாநகரின் வீதி எங்கும் செங்கொடியின் வீச்சு, விவசாயிகளின் உரிமைக் குரல், உழைப்பாளிகளின் உரிமைக் குரல் ஒலித் தது. எங்கெங்கும் செங்கொடி பறந்தது. ஒரு செங் கடல் மதுரையில் சங்கமமாய் அமைந்தது. 1973இல் விலைவாசி உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற தர்ணா போ ராட்டத்திற்கு மதுரையில் தலைமை தாங்கிய பழனிச்சாமி 400 தோழர்களுடன் மதுரை சிறை யில் அடைக்கப்பட்டார். வர்க்க உணர்வும், கொள்கை உறுதியும் கொண்ட தோழர் ஏ.பி. பழனிச்சாமி அனைவருடனும் இன்முகத்துட னும், நிறைந்த சிரிப்புடனும் பழகக் கூடியவர். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் திருத்தல் வாதமும், அதிதீவிரவாதமும் தலைதூக்கிய சம யங்களில், மதுரை மாவட்டத்தில் அவ்விரு போக்குகளினால் கம்யூனிஸ்ட் கட்சி சிதைந்து போகாது சரியான வழியில் செல்ல தோழர் ஏ.பி. பழனிச்சாமி ஆற்றிய பங்கு முக்கியமானதாகும்.