articles

img

உழைக்கும் வர்க்கங்களின் ஒற்றுமையைக் கட்டுவதே இப்போதைய தேவை! -எஸ்.கண்ணன்

வெறுப்பாகப் பேசுவதை ஒரு கலையாகக் கொண்டிருப்பவர் மோடி. பற்றற்றவர் என்பதை முன்னிலைப்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார். வாழ்க்கை இணை யரை தவிக்க விட்டுச் சென்றார். தாயின் பிறந்த நாளுக்கும், தனது பிறந்த நாளுக்கும் நேரில் சென்று தாயை வணங்கி விளம்பரம் செய்து கொள்வார். ஆனால் இந்த தேர்தலில் நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை, கடவுளால் அனுப்பப்பட்டவர், என தன்னை பெருமைப் படுத்துவதாக பேசி, தனது தாயை அவமானப்படுத்தி னார். இவர் பேசும் அரசியல் பிரச்சாரம் எப்படி விஷத் தன்மை இல்லாமல் இருக்கும்? 

மோடியின் செயல்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் சார்ந்தது. ஆய்வு செய்தால் தான், அவர் பிரச்சாரத்தில் தெறிக்கும் விஷம் மற்றும் பொய்களை புரிந்து கொள்ள முடியும். என்ன நோக்கத்திற்காக இந்தப் பிரச்சாரம் என்பதையும் புரிந்து கொள்ள முடியும். தனது 8 வயதில் ஆர்.எஸ்.எஸ்சில் சேர்ந்த மோடி, 22 வயதில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் ஆகவும், பின்னர் குஜராத்தில், விஸ்வ ஹிந்த் பரிசத் அமைப்பி லும் பணியாற்றினார். 1987இல், இவரது பிரச்சாரம் கார ணமாக அத்வானியால், ஆர்.எஸ்.எஸ்-க்கு பரிந்துரை செய்யப்பட்டு, குஜராத் மாநில பாஜக பொதுச் செய லாளர் பொறுப்பிற்கு வந்தவர்.

அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகி யோர் நடத்திய ரத யாத்திரைகளில் முக்கிய பங்கு வகித்தார். பாஜகவிற்குள் இருந்த உள்கட்சி பூசல் கார ணமாக தில்லி தலைமை அலுவலகத்திற்கு பணி மாறு தல் செய்யப்பட்ட நரேந்திர மோடி, ஆறு ஆண்டுகள் கழித்து, குஜராத் முதல்வராக 2001-இல் பொறுப் பேற்றார். தோற்கும் நிலையில் இருந்த பாஜகவின் செல்வாக்கை உயர்த்த, அவர் கையாண்ட பிரச்சாரம் முஸ்லிம் இனப்படுகொலை அரசியல் ஆகும். இது ஆர்.எஸ்.எஸ் அடித்தளமாகக் கொண்ட அரசியல் என்றா லும், மோடி பின்பற்றிய இந்த உத்தி, கோத்ரா ரயில் எரிப்பு, அதைத் தொடர்ந்த கலவரம், பல ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை, முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது என நீண்ட கொடும் செயல்களின் பட்டியலுக்கு அடித்தளம் இட்டது. இதன் மூலம் மிக பலமான இந்து வாக்கு வங்கி உரு வாக்கப்பட்டது. மக்கள் நலத்திட்டங்கள் மூலமாக அல் லாமல், கலவரங்கள் மூலம் தற்காலிக முன்னேற்றம் காணமுடியும் என்பதை செயல்படுத்தியவர் மோடி. 

ஹிட்லரின் பாரம்பரியமும் கொண்டவர்

ஹிட்லர் தனது வரலாற்றை விவரிக்கும் போது, “நான் ஜெர்மனியரல்லாத அனைவரையும் வெறுக்கி றேன். செக், ருமேனியர், போலந்துகள், ஹங்கேரியர் கள், செர்பியர்கள், ஆகியோரின் மோட்லி (பல வண்ண மயமானவர்கள்) கலவையை வெறுத்தேன். குரேஷி யர்கள் கூட என்னால் வெறுக்கப்பட்டவர்களே. எல்லா வற்றிற்கும் மேல், யூதர்கள் மீது வெறித்தனமான எதிர்ப்பை கொண்டிருந்தேன்” என்கிறார்.  வகுப்புவா தம் என்ற பிற அடையாளங்களின் மீதான வெறுப்பு இப்படி தான் வளர்கிறது. வெறுப்பு அரசியலுக்காக, வெறுப்புப் பிரச்சாரம் செய்ததாக ஹிட்லரின் வரலாறு கூறுகிறது.

பிரதமர் மோடியும், ஹிட்லர் போலவே, வளர்ச்சி என்ற சொல்லாடலைப் பயன்படுத்திக் கொண்டே, வெறுப்பு அரசியலையும் தீவிரமாகக் கையாண்டார். அதற்கு அவருடைய பிரச்சாரம் தீவிரமாக தீனி போட்டது. இது குஜராத்தில் மக்களிடம் அச்சுறுத்தலை உருவாக்கி, தொ டர்ந்து ஆட்சியைப் பிடிக்க உதவுகிறது. பிரதமராக மோடி முன் வைத்த வளர்ச்சி முழக்கம் பொய்த்துப் போன தாலும், முதல் இரண்டு கட்டங்களில், தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் உள்ளிட்ட தேர்தல்களில், பாஜக முன்னேற்றம் இல்லாமல் இருந்ததாலும், மோடி தனது முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டார். 

இந்தியா கூட்டணியினர் ஆட்சிக்கு வந்தால், இந்துக்களின் தாலியை, இஸ்லாமியர்களிடம் ஒப்ப டைத்து விடுவார்கள், எருமை மாட்டைக் கூட இஸ்லாமி யர்களுக்கு தாரைவார்ப்பார்கள் என்கிற அளவிற்கு தரம் தாழ்ந்த பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஹிட்லர் போலவே, மோடியும் பல வண்ணங்களின் கலவையை எதிர்க்கக் கூடியவர். பிற மொழிகளை வெறுக்கக் கூடிய வர். உ.பியில் தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் மீதும், ஒடிசாவில் தமிழ்நாட்டு மக்கள் மீதும் வெறுப்பை உமிழும் வகையில் பிரச்சாரம் செய்தார்.  இது ஒருபகுதி பலனை அளித்துள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

பொருளாதாரக் கொள்கையின் தோல்வி காரண மாகவே, வகுப்புவாத அரசியல், தீவிரமாக முன்னுக்கு  வருகிறது. ஹிட்லர் தனது பொருளாதாரக் கொள்கை யை, பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக மடை மாற்றம் செய்யும் போது, மக்களின் கோபத்தை, யூதர்கள் மீதான வெறுப்பு அரசியல் மூலமாக மடைமாற்றம் செய்தார். இந்தியாவில், மோடி தனது பெரு முதலா ளித்துவ ஆதரவு அரசியலை நிறைவேற்ற, முஸ்லிம் மற்றும் பிற மொழிகள் மீதான வெறுப்பு அரசியலை தீவிரப்படுத்துகிறார். மோடி இல்லையென்றாலும், பாஜக கட்சியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இதை முன் னெடுக்கும். இதைத் தான் வகுப்புவாதமும், கார்ப்பரேட் பெரு முதலாளித்துவமும் ஒருவருக்கு ஒருவர் துணை செய்யும் அமைப்புகள் என்கிறோம்.

2019 தேர்தலுக்கு புல்வாமா! 2024க்கு இஸ்லாமிய வெறுப்பு:

2014இல் ஆட்சிக்கு வந்த மோடி, தனது பொரு ளாதாரக் கொள்கை, பணமதிப்பு நீக்கல், ஜி.எஸ்.டி வரி ஆகியவை மூலம் மிகக் கடுமையான தாக்குதலை, உழைப்பாளி மக்கள் மற்றும் சிறு, குறு தொழில் செய்வோர் மீது நடத்தியது. இதை தொடர்ந்து பாஜக 2019 தேர்தலில் தோற்கும் என்ற நிலை உருவான போது, புல்வாமா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள், சென்ற வாகனம் மீது, தாக்குதல் நடத்த இருந்த விவ ரத்தை, உளவுத் துறை அறிந்திருந்தும் எச்சரிக்கை செய்யவில்லை. இதனால் ஏற்பட்ட சாவு, தேசிய வெறி யையும், ராணுவ வெறியையும் தூண்டியது, 2019 தேர்த லில் பாஜக ஆதாயம் அடைந்தது. இதை சில ஆண்டுகள்  கழித்து அன்றைய ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், வெளிப்படுத்தினார். அதற் காக அவர் மீது சி.பி.ஐ ரெய்டு நடத்தப்பட்டது.

2019இல் இரண்டாம் முறை தொடர்ந்து, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தை கைப் பற்றிய பாஜக, கோவிட் கால பொதுமுடக்கம், தொழிலா ளர்களை பட்டினி போட்டது, தொழிலாளர் சட்டங்களை பொது முடக்க காலத்தில் நிறைவேற்றியது, வேளாண் சட்டத் திருத்தங்களை அமலாக்கியது என மொத்தமாக விவசாயி, தொழிலாளி விரோத அரசாக, மோடி தலை மையிலான பாஜக ஆட்சி செயல்பட்டது. இதன் காரணமாக பாஜக மீதான வெறுப்பை, மடைமாற்றம் செய்யும் வகையில் இஸ்லாமியர் எதிர்ப்புப் பிரச்சா ரம் தீவிரமாகச் செய்யப்பட்டது. அதே காலத்தில் கர்நா டகா, உத்தர்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அமல் படுத்தப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள், ஒன்றிய அரசு அமலாக்கிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவை, அப்பட்டமான இஸ்லாமியர் எதிர்ப்பு நடவடிக்கைக ளாக அமைந்தன. 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் சட்டத்தை  முன் மொழிந்து அமலாக்கியதும், வெறுப்பு அரசிய லின் வழிப்பட்டதே!

மேற்படி செயல்கள் மூலம், பாஜகவின் பொருளா தாரக் கொள்கைகளையும், அதன் பாதிப்புகளான, விலை உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையின்மை, உண்மைக் கூலியில் உயர்வின்மை ஆகிய தாக்குதல்களையும், எதிர்த்துப்  போராட வேண்டிய தொழிலாளி வர்க்கத்தின் ஒரு  பகுதி, அரசியலில் மதம் சார்ந்து சிந்திக்கும் பிற்போக் குத்தனத்திற்கு பாஜகவால் தள்ளிவிடப்படுகின்றனர். ஆனாலும் பைசாபாத் என்ற நாடாளுமன்ற தொகுதி க்கு உள்ளே தான் அயோத்தி உள்ளது. ராமர் கோவில் கட்டுவது, பெரும் அரசியலாக இருந்தாலும், அந்த தொகுதியில் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது. 

எனவே மோடியின் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுக்கள்  சாதாரணமாகக் கடந்து செல்லக் கூடியது அல்ல. மாறாக தொழிலாளி வர்க்க ஒற்றுமையை, தொழிலாளி – விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை சீர் குலைக்கும் நோக்கம் கொண்டதாகும். இந்தப் பேச்சு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை உருவாக்குவ துடன், மோடி பெரு முதலாளிகளுக்கு அளிக்கும் ஏராள மான சலுகைகளை மறைக்கவும் உதவுகிறது. இப்போது பாஜக, எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும், தனி பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். தொழிலாளி வர்க்கம் தனது ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்ட போராட்டம் மூலமே இந்த கொடும்செயலுக்கு தீர்வு காண முடியும். மதம், வழிபாடு, சடங்கு, சம்பிரதாயம் வேறு, வாழ்வாதாரம் சார்ந்த பொருளாதார கோரிக்கைகள் வேறு என்பதை  புரிய வைக்க, தொழிலாளி வர்க்க ஒற்றுமையே பயன்படும். 

கட்டுரையாளர் : மாநில செயற்குழு  உறுப்பினர், 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)