articles

img

“சீன் டபாக்கு டம் டம்” - அமர்த்தியா

“சீன் டபாக்கு டம் டம்” - அமர்த்தியா

ஹேய், அம்மு.. கைல என்னவெச்சுருக்க.. குச்சி மாதிரி இருக்கு.. வா.. வா.. இது வெறும் குச்சிதான்.. மந்திரக்கோல்னு நெனச்சிட்டியா.. ஆமாமாம்... அப்புடித்தான் நினைச்சேன்.. அப்புடியே மந்திரக்கோல் வெச்சுருந்தாலும் என்ன செஞ்சிருப்ப... என்கூட பழைய காலத்துக்கு உன்னை அழைச்சுட்டுப் போவேன். என்னோட பழசெல்லாம் பாக்கலாம். நான் குழந்தையா இருந்தப்ப நான் பண்ண சேட்டையெல்லாம் காட்டுவேன்... நான் எவ்வளவு கொழு, கொழுனு இருந்தேன் தெரியுமா..? என்னை உனக்கு அவ்வளவு புடிக்குமா.. மந்திரக்கோல் கிடைச்சாக்கூட என்னோடதான் இருக்கப் போறியா.. ஆமா... போயிட்டே இருக்குறப்ப நீ ஒரு வடை கேக்குறேன்னு வெச்சுக்கோ... மந்திரக்கோல வெச்சு கொண்டு வந்துருவேன்ல... அட அப்புடியா? வெறும் மந்திரக்கோலா... இல்லேனா, மந்திரமும் உண்டா.. மந்திரம் உண்டு.. அதில்லாமலா..? அதென்ன மந்திரம்..? சீன் டபாக்கு டம் டம்..(சிரிப்பு) குறுக்கே புகுந்த அம்மா, அலைபாயுதே படத்துல அந்தப் பாட்டுல கோரஸ் வரும்ல.. அதுதான... இல்லம்மா..  அம்மு...என்னை ஏமாத்த முடியாது. எனக்குத் தெரியும்.. இது சோட்டா பீம் வில்லனோட டயலாக் ஆச்சே... சரி... அதெப்புடி வடை வரும்..  (யோசித்து விட்டு) ம்ம்ம்.. வானத்துல இருந்து வரும்.. (இருவருமே சிரித்தனர்) மாவுயின்றி, ஆயிலின்றி வடை ஒண்ணு வருகுது... பாட்டாகவே இருவரும் படித்தனர். சிரிப்பு பலத்தது. சரி விடு... மந்திரம் போட்டா பக்கத்து கடைல இருந்து மாவு பிசைஞ்சு, ஆயில்ல போட்டு எடுத்த ஒரு வடை என் கைக்கு வந்துரும்.. அத நான் தருவேன்னு வெச்சுக்கோயேன்.. அப்போ, கடைக்காரருக்கு நஷ்டம்தான. மந்திரக்கோல் இருக்குறதத்தான் எடுத்துத்தருமா, அம்மு..  ஆமா... அப்புடித்தான் நினைக்குறேன்..  பாட்டி வடை சுடுற கதை கேட்டுருக்கோமே.. காக்காவுக்குப் பதிலா நம்மளோட மந்திரம் வடைய எடுத்துட்டு வருதுன்னு வெச்சுக்குவோம். இப்போ நான் பத்து வடை கேக்குறேன்.. என்ன ஆகும்..?? பாட்டி பொழப்புல மண்ணு.. மந்திரம்குறது சும்மா கற்பனைதான.. ராமாயணம் சீரியல்ல உதட்டுலயும், மூக்குலயும் உரசிக்கிட்டு அம்பை வெச்சுக்குவாங்க.. நீ பாத்துருப்பேல.. ஏதோ முணுமுணுப்பாங்க.. அம்பு பாயுறப்ப நெருப்பு வரும்.. தண்ணி வரும்.. பாக்குற நமக்கு அந்த அம்பு சரியாப் போகனும்னு டென்சனா இருக்கும்.. அதெல்லாம் நெஜமா நடந்துருக்குமா..? அதுவும் கற்பனைதான.. நம்ம பாகுபலி படத்துல ஒரு அம்ப விட்டப்புறம் அது பல அம்பா மாறிப் பாயுமே.. அதுமாதிரிதான்.. ஆனா, அன்னிக்கே அது இருந்துச்சு, இது இருந்துச்சுனு சில பேரு பேசிக்குறாங்களே..  ஒவ்வொரு முன்னேற்றத்துக்கும் மனுஷந்தான் காரணம்.. இப்புடி சொன்னா பிடிக்காதவங்களும் இருக்காங்க...  அந்தப் பிடிக்காதவங்க எண்ணிக்கை குறைஞ்சுட்டு வருது.. ஆனா கற்பனை முக்கியம்.. நம்ம உலகத்துல கற்பனை இல்லேனா, சுவாரஸ்யமே இருக்காதே... கற்பனை நல்லாருக்குல்ல.. நாட்டுல வறுமை இருக்கு... நேத்து வகுப்புல கூட படிச்சோம்ல.. மந்திரக்கோல் இருந்தாலும் அதத் தீர்க்க முடியாதில்லையா.. மந்திரத்துல மாங்காய் காய்க்காதுன்னு சொல்வாங்களே.. வறுமைய ஒழிக்க என்ன பண்ணனுமோ அதப் பண்ணுனாதான தீர்வு..  அப்போ இந்த மந்திரக்கோல்..?  விளையாடலாம்... நீளமா கோடு போட வெச்சுக்கலாம்... நாம பந்தை மரத்துல அடிச்சுட்டு எடுக்குறதுக்கு சிரமப்படுவோம்ல... அப்போ இத பயன்படுத்திக்கலாம்..  அது சரி.. இப்போ எனக்கு உண்மையிலேயே வடை வேணும்...  இரு.. இரு... சீன் டபாக்கு டம் டம்.. ஏய்.. ஏய்.. மறுபடி முதல்ல இருந்தா.. பசிக்குது.. கடைக்குப் போலாம், வா.. சிரித்தவாறே கடையை நோக்கி இருவரும் நகர்ந்தார்கள்.

விடுக(வி)தை மா.முத்துசாமி, மு.வாடிப்பட்டி

வேர் விடா மரம் கிளை இல்லா மரம் இலை இல்லா மரம் பூக்கா மரம் காய்க்கா மரம்  விறகுக்குதவா மரம் நீரில் குளித்த மரம்  நிழல் தரா மரம் பறவைகள் உட்காரும் மரம்  காட்டிலும் மேட்டிலும் காணும் மரம்  வனத்திலும் கூட நிற்கும் மரம் இரவை பகலாக்க உதவும் மரம்  வீதிகளில் நிற்கும் மரம் இரும்பை விழுங்கிய மரம் – இந்த நெடுமரம் இல்லையேல் வாழ்வே சூனியம் -மனித வாழ்வே சூனியம்!  அது என்ன மரம்?  குட்டீஸ் முயன்று பாருங்கள். உங்களால் முடியும்!!!

அன்புச்செல்வி சுப்புராஜு

காடு மலையில் இருக்கும் கடுமைப் பனியில் சறுக்கும் தேடும் பழங்கள் சுவைக்கும் தேர்ந்த புல்லைக் கடிக்கும்  தேனின் கூட்டைக் காணும்  தேனை அருந்தி மகிழும்  கானில் சுற்றித் திரியும்  காட்டின் வாழ்வில் மகிழும்   நாட்டில் வித்தை காட்டும்  நலிந்த செயலது வாட்டும்  காட்டும் மீசை இருக்கும்  கரடி பொம்மை சிறக்கும்   மேளம் அடிக்க ஆடும் மேலும் வித்தை காட்டும்  விலங்கைப் பூட்டுதல் கேடு விலங்கு பெறும்படு பாடு!  விலங்குகள் வீடு காடு  விரும்பி வாழும் கூடு விலங்கை விடுதலைச் செய்க! விளையும் நன்மைக் கொய்க!