மார்க்ஸ் - பெரியார் - அம்பேத்கர் ஒரு சகாப்தம் - ஐ.வி.நாகராஜன்
மார்க்ஸ் - பெரியார் - அம்பேத்கர் ஒற்று மையும் முரண்பா டும் என்ற நூல் இன்றைய அரசியல் சூழலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆசிரியர் பற்றி இந்நூலை எழுதிய தோழர் என்.ராமகிருஷ்ணன் தமிழகத்தில் நன்கு அறிமுகமான இடதுசாரி படைப்பாளி யாவார். தனது வாழ்நாளில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு, தமிழக வரலாறு, அகில உலக கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் வரலாறு, மேலும் தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத் தலை வர்களின் வாழ்க்கை வரலாறுகள், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாவட்ட வர லாறுகள் என 100க்கும் மேற்பட்ட புத்த கங்களை எழுதி சாதனை படைத்தவர். சுருக்கமாகச் சொன்னால் இவர் ஒரு கம்யூனிஸ்ட் இயக்க ஆவணக் களஞ்சியமாவார். நூலின் முக்கியத்துவம் மாமேதை மார்க்ஸ், தந்தை பெரி யார், அறிஞர் அம்பேத்கர் ஆகியோ ரின் வாழ்க்கை வரலாறுகளையும், அவர் களுடைய மகத்தான பங்களிப்புகளை யும் விளக்கி தனித்தனியாக நூல் களை எழுதியுள்ளார். அதன் தொடர்ச்சி யாகத் தன்னுடைய பெரும் உழைப் பைச் செலுத்தி இந்த நூலைப் படைத் துள்ளார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத் கரியம் ஆகிய தத்துவக் கருத்தியல் குறித்து பரவலான விவாதங்கள் நடை பெற்று வரும் இன்றைய சூழலில் இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறு கிறது.
மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகிய அறிஞர்கள் சமூக மேம்பாட்டிற் காக வளமான பங்களிப்புகளை நல்கி யுள்ளனர். இவர்களது தத்துவப் போக்கு களுக்கு இடையில் உடன்படுகிற புள்ளி களும் உண்டு. முரண்படுகிற புள்ளி களும் உண்டு. அவைகளில் எதுவும் நீடித்த முரண்பாடு உள்ளவை அல்ல. மகத்தான இம்மூவரின் வாழ்க்கை வரலாற்றை இணைத்து இந்நூல் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதோடு அவர்களது பங்களிப்புகள் குறித்து சமூக, அரசியல், பொருளாதார, தத்துவ அணுகுமுறைகளை விளக்கி விரிவான ஆய்வினைத் தோழர் என்.ராமகிருஷ் ணன் தமிழக மக்கள் முன் படைத்துள் ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். மார்க்சியம் - சாதனைகள் தொடக்க காலத்திலிருந்து மனித குலம் வறுமை, பசி, பட்டினி, நோய், வேலையின்மை போன்றவைகளுக்குத் தீர்வுகாண முடியாமல் மூச்சுத்திணறித் தவித்து வந்துள்ளது. வரலாற்றில் முதன் முறையாக மார்க்சியத்தின் வழி நின்று அமைக்கப்பட்ட பொதுவுடமைச் சமூகங்களே இந்நெருக்கடியிலிருந்து மனித சமூகத்திற்கு விடுதலை அளித்துள்ளது.
குறிப்பாக, கண்ணுக்கு தெரியாத கொரோனா நோய்க் கிருமி களின் தொற்றால் உலகமே முடங்கிப் போயிற்று. வல்லரசு நாடுகள் தடுமா றின. எண்ணற்ற உயிர்பலிகளும் கண க்கற்ற மக்களது வாழ்வும் முடங்கிக் கிடந்தன. வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரமும் நொறுங்கிப் போனதை உலக வங்கியின் மதிப்பீடே தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், இதே காலத்தில் கொரோனாவின் கொடு மையிலிருந்து உயிர்களையும், மனித வாழ்வினையும் பாதுகாத்துப் பொருளா தாரத்தை நிமிரச் செய்த சாதனையை சோசலிச நாடுகளால் மட்டுமே நிறை வேற்ற முடிந்தது என்பது கண்கூடு. கடந்த ஆயிரம் ஆண்டுகளின் வரலா ற்றில் காரல் மார்க்ஸே சாதனையாளர் என பி.பி.சி. நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவு வெளியிட்டது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மாமேதை மார்க்சின் அளப்பரிய பங்கு, பணி குறித்து அவரும், பிரடெரிக் ஏங்கெல்சும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகள் குறித்தும் மிக விளக்கமாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். மனித சமூக வாழ்விற்கு அடிப்படையானது பொருளுற்பத்தி. இதில் மனித உழைப்பு மையமான பங்கு வகிக்கிறது. மனித சமூக வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட சூழலில் முதலாளித்துவம் உருவாகிறது என்பதை மார்க்ஸ் தெளி வாக விளக்கியுள்ளார். மனித சமூகம் தோன்றி உபரி மதிப்பு எட்டிய நிலையில் சுரண்டுவோருக்கும், சுரண்டப்படு வோருக்கும் இடையில் நடைபெறும் வர்க்கப் போராட்டமே மனித குல வர லாறு என்று மார்க்ஸ் வரலாற்றுக்குப் புதிய இலக்கணம் படைத்தார். மார்க்சி யம் ஒரு வளரும் தத்துவமாகத் தொட ர்ந்து விளங்கி வருகிறது. மார்க்சிய அடிப்படைக் கோட்பாடுகளை அறிய ஆர்வம் கொண்டவர்களுக்கான நூலாக இந்நூல் அமைந்துள்ளது சிறப்பாகும். அம்பேத்கர் - பங்களிப்பு அதேபோன்று மகாராஷ்டிராவில் பிறந்த டாக்டர் அம்பேத்கர் சிறந்த சிந்த னையாளராகவும், சிறந்த படிப்பாளி யாகவும் திகழ்ந்தார். வாழ்வில் தான் அனுபவித்த தீண்டாமைச் சமூகக் கொடுமைகள், இந்து மதத்தின் ஆணி வேரையே அசைக்கத்தக்க சிந்தனை யாளராக இவரை மாற்றியது. மனுநீதிக் கோட்பாட்டினால் உருவாக்கப்பட்ட வர்ணாசிரமத்தை எதிர்த்துத் தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்ட வாழ்நாள் போராளியாகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் இந்துவாகப் பிறந்தாலும் ஒருபோதும் இந்துவாகச் சாகமாட்டேன் என்று பிர கடனம் செய்து புத்த மதத்தைத் தழு வினார். விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சியையும், காந்தியையும் எதிர்த்துத் தீவிரமான கருத்தியல் போராட்டத்தை நடத்திய அம்பேத்கர் நாட்டு விடுதலையை ஒட்டி நேரு தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையில் சட்ட அமைச்ச ரானார். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவினருக்குத் தலை மைப் பொறுப்பினை ஏற்று அரசியல் சாசனத்தை வடிவமைத்தார். சில ஆண்டுகளுக்குள்ளேயே மத்திய சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றிப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் டாக்டர் அம்பேத்கர் குரலெழுப்பினார். மத்திய அமைச்சர வையிலிருந்து அவர் ராஜினாமா செய்த போது, அரசியல் சட்டத்தின் 340வது பிரிவின்படி பிற்படுத்தப்பட்டோர் களைக் கண்டறிவதற்கான ஆணை யம் அமைக்கவும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவும் தான் வலியுறுத்தி யதை மத்திய அரசு ஏற்கவில்லை, அடுத்ததாக, பெண்களுக்குச் சொத்து ரிமை வழங்கப்படவில்லை என்ற கார ணங்களைக் கூறியிருந்தார்.
மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகிய மூவரின் பங்களிப்புகளைச் சுருக்கமாகப் புரிந்து கொள்ள இந்த ஒரு நூலே போதுமானது என்ற அளவுக்கு விவரங்கள் தொகுக்க ப்பட்டுள்ளன. வர்க்கமும் சாதியும் இந்திய நாட்டு விடுதலைக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல், பொருளா தார, சமூக மாற்றங்களின் விளைவாக சாதிய படிநிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அடித்தட்டு சமூகத்தைச் சார்ந்த சிலர் மத்தியதர மக்களாகவும், உயர்சாதி வகுப்பைச் சார்ந்த சிலர் உழைப்பாளி மக்களாகவும் மாறி யுள்ளார்கள் என்பது உண்மையே. ஆனாலும் இன்றைக்கும் உழைப்பாளி வர்க்கங்களாக உள்ளவர்களில் அறுதி ப்பெரும்பான்மை மக்கள் பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்க ளாக உள்ளனர். அதேபோல், உடமை வர்க்க முதலாளிகள் பெரும்பகுதி யினர் உயர்சாதியினராக இருப்பது கண்கூடு. இந்திய நாட்டில் வர்க்கப் பிரிவினையோடு, சாதிப் பிரிவினையும் இணைந்தே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். கம்யூனிஸ்ட் இயக்கப் போராட்டங்கள் மேற்கண்ட கள நிலைமையைக் கவனத்தில் கொண்டு தொடக்க காலம் முதல் கம்யூனிஸ்ட் இயக்கம் நிலப்பிர புத்துவச் சுரண்டல் முறையையும், சாதிய ஆதிக்க வர்ணாசிரம தர்மக் கட்டமைப்பை எதிர்த்தும் நடத்திய போராட்டங்களை மிக விளக்கமாக ஆசிரியர் தொகுத்து அளித்துள்ளார். 1930ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்மேடை என்ற முதல் ஆவணம் தொடங்கி பல் வேறு ஆவணங்களில் அடிமை முறை யையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்துக் கம்யூனிஸ்ட் இயக்கம் மேற்கொண்ட தீர்மானங்களை மேற் கோள் காட்டியுள்ளார். மேலும் விடு தலைப் போராட்டக் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த சுதந்திரப் போராட் டத்தில் முக்கியப் பங்காற்றிக்கொண்டே நிலப்பிரபுத்துவ மற்றும் சாதிய ஒடுக்கு முறைகளை எதிர்த்துக் கம்யூனிஸ்டுகள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங் களை எல்லாம் தெளிவாக விளக்கியுள் ளார். ஆந்திர மண்ணில் நடந்த வீரத் தெலுங்கானா போராட்டம், மேற்கு வங்கத்தில் நடந்த தேபகா போராட்டம், மராட்டியத்தில் நடந்த ஆதிவாசி மக்க ளின் வொர்லி போராட்டம் ஆகியவை களோடு தமிழகத்தில் கீழத்தஞ்சை தரணியில் நடந்த சாணிப்பால், சவுக்கடி நிலப்பிரபுத்துவக் கொடுமைகளை எதிர்த்த போராட்டங்களை உணர்ச்சித் ததும்ப விளக்கியுள்ளார். வரலாறு நெடுகிலும் தியாக வடுக் கள், ரத்தச்சுவடுகள் நிறைந்த போராட்டங் களை முன்னெடுத்த செங்கொடி இயக்கம் ஒரு பக்கம் நிலப்பிரபுத்துவச் சுரண்டல் அமைப்பை எதிர்த்தும், இன்னொரு பக்கம் சாதிய, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட்டங்களை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய நாட்டில் உருவான வர்ணா சிரம தர்மக் கட்டமைப்பை எதிர்த்து வர லாற்றுக் காலம் முதல் வலுமிக்க போராட்டங்கள் நடந்துள்ளன. நவீன காலத்தில் ஜோதிபா பூலே, டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகி யோர் சாதியக் கட்டமைப்பை எதிர்த்து நீண்ட, நெடிய போராட்டங்களை நடத்தி யுள்ளனர். இப்போராட்டங்களில் மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றதையும், வரலாறு நெடுகிலும் பார்க்க முடிகிறது. சாதியப் பிரிவுகளால் மனிதர்களை இழிவுபடுத்தும் கொடுமைகளை எதிர்த்த இப்போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இத்த கைய சமூக ஒடுக்குமுறைகளை ஒழித்து க்கட்டும் போராட்டங்களை மேலும் வலு வாக முன்னெடுத்துச் செல்வது அவசிய மானதாகும். சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் பல சாதனைகள் படைந்திருந்தபோதிலும் இப்போராட்டங்கள் சாதியக் கட்ட மைப்பைத் தகர்க்கவில்லை என்பதும், நவீன காலத்திலும் மனித சமூகத்தில் அது அழுத்தமான பிடிமானத்தைக் கொண்டுள்ளது என்பதையும் கவனத் தில் கொள்ள வேண்டும்.
சமூக ஒடுக்கு முறைகளும், பட்டியலின மற்றும் பழங் குடியின மக்கள் மீதான தாக்குதல் களும் அனுதினமும் தொடர்ந்து வரு கின்றன. நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவச் சுரண்டல் கட்டமைப்பை எதிர்த்த போராட்டத்துடன் இத்தகைய சாதிய ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டங் கள் இணைக்கப்படாமல் துண்டிக்கப் பட்டது. சாதிய ஆதிக்கம் ஒழிந்தால் பொருளாதார ஏற்றத்தாழ்வு தகர்ந்து விடும் என்ற அணுகுமுறை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதே அனுபவ மாக உள்ளது. எனவே, இந்திய சமூகத்தில் வர்க்கப் போராட்டம் இரு பரிமாணங்களைக் கொண்டுள்ளது என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டமும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய இரண்டு பரிமாணங்களும் இணைந்த போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமாகவே இந்திய நாட்டு உழைப்பாளி மக்கள் அனுபவித்து வரும் பொருளாதார மற்றும் சமூக ஒடுக்கு முறைகளிலிருந்து விடுதலை பெற முடியும். சமகால சவால்கள் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான பாஜக ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் உள் ளது. மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகியோருடைய கோட்பாடுகளுக்கும், முற்போக்குச் சிந்தனைகளுக்கும் முற்றிலும் நேரெதிரான சித்தாந்தத்தை நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
ஒருபுறத்தில் மக்களை அது பிளவுபடுத்தி, மதவெறியைத் தூண்டி அதன் மூலம் தங்களுடைய இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை நிறை வேற்றுவது, மறுபுறத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சேவகம் செய்வது என்ற இரட்டைக் கடமையினைப் பாஜக பரிவாரம் செய்து வருகிறது. வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கித் தள்ள முயலும் இவர்களை முறியடித்து முன்னேற்றப் பாதையில் இந்திய நாடு பயணித்திட நிலப்பிரபுத்துவ, நவீன முதலா ளித்துவச் சுரண்டலை எதிர்த்த வர்க்கப் போராட்டங்களையும், சாதிய ஒடுக்கு முறையினை எதிர்த்த சமூக நீதிப் போரா ட்டங்களையும் இணைந்து முன் னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.