விசித்திரமான தீர்ப்பு
கரூரில் நிகழ்ந்த உயிரிழப்புகள் நம் நெஞ் சங்களைப் பதைபதைக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தி லும் ஒரு மூலையில் அழுகத் தொடங்கியுள்ளது என்ற எச்சரிக்கையையும் தந்துள்ளது. நமது எதிர்கால நம்பிக்கையாக நாம் பார்க்கின்ற இளைய தலைமுறை யின் ஒரு பகுதியினர், தாங்கள் கடக்கவேண்டிய பாதை யில் இருக்கும் புதைமணல் குழிகளையும், விஷப் பாம்புகளையும் பார்க்காமல், ஆகாயத்தில் தோன்றி மறையும் மின்மினிப்பூச்சிகளைப் பிடிக்க ஆசைப்படு வதைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருக்க முடியுமா? அதன்பிறகு நடந்த சில நிகழ்வுகள், குறிப்பாக கரூர் மரணங்கள் குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு, “சட்டத்தின் ஆட்சி” பற்றிய கேள்விகளையும், மாநிலங்களின் கலாச்சார-பண்பாட்டு அடையாளங்களின் எதிர்காலம் பற்றிய அச்சங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
முரண்பட்ட தீர்ப்புகளும் அடிப்படைக் கேள்விகளும்
சமீபகாலமாக உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைக ளில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தீர்ப்புகளைப் பார்த்து வருகிறோம். ஒரு நீதிபதியின் தீர்ப்புக்கு மற் றொரு நீதிபதியின் தீர்ப்பு முரண்படலாம்; அதற்காகத் தான் கூடுதல் நீதிபதிகள் அமர்ந்து விசாரிக்கும் மேல் முறையீட்டு ஏற்பாடு உள்ளது. ஆனால், ஒரே நீதிபதி, ஒரே பொருள் பற்றி முரண்பட்ட இரண்டு தீர்ப்புகளை எப்படி வழங்க முடியும் என்பதுதான் இங்குள்ள விவாதம். செப்டம்பர் 27 சம்பவங்கள் குறித்து கரூர் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் தொ டரப்பட்ட இரண்டு பொதுநல வழக்குகளையும், காவல் துறையினரின் விசாரணையில் முறைகேடுகள் நிரூ பிக்கப்படாததால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது. இதற்கிடையில், மாநில அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களை ஒருநபர் விசாரணை ஆணையராக நியமித்தது. இதே காலகட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரச்சா ரத்தை முறைப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தின் முதன்மை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கரூர் சம்ப வங்களை விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு வினை (SIT) அமைத்து உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் விசித்திரமான இடைக்கால உத்தரவு
இந்த மூன்று உத்தரவுகளையும் எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் சிறப்பு அனுமதி மனுக்களும், சிபிஐ விசாரணை கோரி உயிரிழந்தவர்களின் உறவினர் கள் ரிட் மனுக்களும் தாக்கல் செய்தனர். இவை அனைத் தையும் விசாரித்த உச்சநீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்த ரவு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும், தமிழக அரசு நியமித்த ஒருநபர் ஆணையத்தின் நீதி விசாரணைக்கும் தடைவிதித்தது. மேலும், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு, சிபிஐ யின் விசாரணையை மேற்பார்வை செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலை மையில் ஒரு குழுவையும் நியமித்தது. முக்கியமாக, நீதிபதி ரஸ்தோகி தனக்கு உதவ இரண்டு தமிழ்நாட்டு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்துக் கொள்ளலாம் என்றும், ஆனால் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்தவர்க ளாக இருக்கக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது.
நீதிக்கோட்பாடுகளுக்கு எதிரான கேள்விகள்
உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த இடைக்காலத் தீர்ப்பு சட்டத்தின்படியும், நியாயத்தின்படியும் சரி யல்ல என்பது நடுநிலையாளர்கள் பலரின் கருத்து. சிபிஐ விசாரணை கோரிய முதன்மை வழக்கு இறுதி தீர்ப்புக்காக விசாரணையில் இருக்கும்போது, சிபிஐக்கு விசாரணையை மாற்றி எப்படி ஒரு “இடைக் கால உத்தரவினை” பிறப்பிக்க முடியும்? இடைக்கால உத்தரவுகளில் நிரந்தரமான அம்சங் கள் இருக்கக்கூடாது என்ற அடிப்படையான நீதிக் கோட்பாடு ஏன் பின்பற்றப்படவில்லை? சட்டம்-ஒழுங்கு, காவல்துறை நிர்வாகம் போன்றவை முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட் பட்டவை. மாநில அரசின் தரப்பு விவாதங்களை முழு மையாகக் கேட்காமல், அதன் அதிகாரத்தை முடக்கும் ஒரு உத்தரவினை இடைக்கால உத்தரவாக உச்ச நீதிமன்றம் எப்படிப் பிறப்பிக்கக்கூடும்?
குஜராத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் வேறுபட்ட நீதியா?
குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்த விபத்தில் 141 பேர் இறந்த வழக்கில், சிறப்பு விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் இடைக் கால உத்தரவு வழங்க மறுத்து, மாநில அரசின் தரப்பு விவாதங்களைக் கேட்கக் காத்திருக்கிறது. குஜராத் அரசு இன்றுவரை பதில் அளித்ததாகத் தெரிய வில்லை. குஜராத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் ஒரே அர சியலமைப்புச் சட்டம் தானே! குஜராத்துக்கு ஒரு நீதி, தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா என்ற கேள்வி எழத் தானே செய்யும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் சில அம்சங்கள் புரியவில்லை. இந்த விசாரணையில் அரசியல் தலை யீடு இருக்கலாம் என உச்சநீதிமன்றம் அச்சப்படுகி றது. பாஜக தலைமை சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டது. பாஜகவினர் கேட்ட சிபிஐ விசாரணை யில் ஒன்றிய பாஜக அரசின் தலையீடு இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? தமிழக காவல்துறை யின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மீது புகார் கள் இல்லாத சூழ்நிலையில், விசாரணையில் அரசி யல் தலையீடு இருக்கும் என்ற முடிவுக்கு உச்சநீதி மன்றம் எப்படி வந்தது? வெறும் யூகத்தின் அடிப்ப டையில் அவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியு மென்றால், மாநில அரசுகளில் காவல்துறையே தேவையில்லையே!
மாநில அடையாளம் சார்ந்த பாகுபாடு
தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லா ததால் சிபிஐயிடம் ஒப்படைத்த பின்னரும், சிபிஐயும் சரியாக விசாரணை நடத்தாது என்ற சந்தேகத்தில், சிபிஐ விசாரணையை மேற்பார்வை செய்ய உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி தலைமையில் குழு அமைத்ததற்கான காரணமும் விளங்கவில்லை. மேலும், அந்த நீதிபதிக்கு உதவ நியமிக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் பிறந்தவர்களாக இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டது அதிர்ச்சிய ளிக்கிறது. அதிகாரிகளுக்குள் உச்சநீதிமன்றமே இப்படி ஒரு வேற்றுமையை உருவாக்கலாமா? தமிழ் நாட்டில் பிறந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அதிகாரிகள் நேர்மையாக நடந்துகொள்ள மாட்டார் கள் என்று உச்ச நீதிமன்றம் முடிவுக்கு வந்துவிட்டதா? அரசு அதிகாரிகளை அவர்களது மாநிலம் சார்ந்த அடையாளத்தோடு சம்பந்தப்படுத்தி பிறப்பிக்கப் பட்ட முதல் உத்தரவு இதுதான் என்று கருதுகிறேன். உதாரணமாக, சென்னை உயர்நீதிமன்றம் நிய மித்த திரு. அஸ்ரா கார்க், திறமையான, நேர்மையான அதிகாரியாக அங்கீகரிக்கப்பட்டவர். இவர் தமிழ் நாட்டைச் சார்ந்த, ஆனால் தமிழ்நாட்டில் பிறக்காத ஐபிஎஸ் அதிகாரி. உச்சநீதிமன்றம் நினைத்திருந் தால், இவரது தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவினை, மேனாள் நீதிபதியின் மேற்பார்வையில் விசாரணையைத் தொடர அனுமதித்திருக்கலாமே!
முரண்பாடுகளின் உச்சம்
தமிழக அரசு, தமிழக காவல்துறை, தமிழக அரசு அதிகாரிகள் என்று தமிழகம் சார்ந்த எந்த அமைப் பும் உச்சநீதிமன்றத்தின் நல்லெண்ணத்தையும் நன் மதிப்பையும் பெறவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு சோக நிகழ்வின்போது, ஊடகங்களுக்கும், குடிமைச் சமூகத்துக்கும் அரசு சார்பில் பதிலளிக்க வேண்டிய அதிகாரிகள் மௌனம் காக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறதா? அதிகாரிகள் பேட்டி அளித்த தாலேயே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம் என்ற இடைக்கால உத்தரவு நியாயமானதுதானா? இதில் இன்னுமொரு வினோதம் உண்டு. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட சில நாட்களில், உத்தரப்பிரதேச சட்ட மேலவை சம்பந்தப்பட்ட வழக்கில், லக்னோ உயர்நீதிமன்றத்தின் சிபிஐ விசாரணை உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதில், “மாநில விசாரணை அமைப்புகளின்மீது நம்பிக்கை இல்லை யென்று சொல்லி சில ஊர்ஜிதமாகாத குற்றச்சாட்டு களை சம்பந்தப்பட்டவர்கள் முன்வைப்பதால் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது” எனவும், “மாநில அரசின் அதிகாரத்தை முடக்கும் அத்தகைய தீர்ப்புகளை அனுமதிக்க முடியாது” என வும் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பை யும், கரூர் வழக்கின் தீர்ப்பையும் எழுதியவர் ஒரே நீதிபதி என்பதுதான் வியப்பிலும் வியப்பு! உயர்நீதிமன்றங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகள். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத் தின் முதன்மை அமர்வு பிறப்பித்த உத்தரவு பற்றி விசா ரணை நடத்தி அறிக்கை அனுப்ப அதன் பதிவாள ருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நீதித் துறை அதிகார வரம்பில் கேள்வி எழுப்புகிறது. பொதுவாக நீதிமன்றங்கள் “எது சரி? என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, யார் சரி? என்று பார்க்கக் கூடாது.” ஒரே பொருள் பற்றிய வழக்குகளில் குஜராத்து க்கு ஒரு நீதி, உத்தரபிரதேசத்திற்கு ஒரு நீதி, தமிழ் நாட்டிற்கு முற்றிலும் மாறுபட்ட நீதி என்றால், எதிர்கா லத்தில் உச்சநீதிமன்றத்தின் மீது மக்களுக்குள்ள நம்பகத்தன்மைக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். அது நமது அரசியலமைப்புச் சட்ட கட்டமைப்பின் அடித்தளத்தையே சிதைத்துவிடும். உச்சநீதிமன்ற றமே பழுதுபட்டால் இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும்? கலைஞரின் பராசக்தி படத்தில் சிவாஜிகணேசன் பேசும் வசனம்: “இந்த நீதிமன்றம் பல விசித்திர மான வழக்குகளைப் பார்த்திருக்கின்றது”. இப்போது கலைஞர் இருந்திருந்தால், “இந்த நீதிமன்றம் பல விசித்திரமான தீர்ப்புகளைத் தந்துள்ளது” என்று எழுதுவாரோ என்று நான் யோசித்தேன். ஆம்! கரூர் அசம்பாவித வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு “ஒரு விசித்திரமான தீர்ப்புதான்!”
