articles

img

பாஜகவின் பணியைச் செய்யும் தேர்தல் ஆணையம் - டி முரளிதரன்

பாஜகவின் பணியைச் செய்யும் தேர்தல் ஆணையம்!

2025இல் பீகா ரில் வழக்கமான நிர்வாக நடவடிக்கையா க மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR - Special Intensive Revision), சமீபத்திய வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களின், குறிப்பாக பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளின், வாக்குரிமையைப் பறிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. தேர்தல் ஆணையம் எந்தவொரு முக்கிய மான மாற்றத்தைச் செய்வதாக இருந்தா லும், நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சி களையும் கலந்தாலோசித்த பின்னரே மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கை குறித்து அது  எந்த அரசியல் கட்சியுடனும் கலந்தாலோசிக்க வில்லை. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட  இந்தியத் தேர்தல் ஆணையம், பதவியேற்ற உடனேயே சீர்திருத்தங்கள் குறித்து கட்சிகளு டன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது.  எனினும், பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எந்தக் கட்சியுடனும் பேசவில்லை. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அது கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. பொறுப்பை வாக்காளர் மீது சுமத்துதல் சாதாரண திருத்தங்களைப் போலன்றி, சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ், வாக்குச்சாவடி அளவிலான அலுவலர் (BLO) அளித்திடும் படிவங்களை வாக்காளர் நிரப்ப வேண்டும். கல்வியறிவு நாட்டிலேயே மிகவும் குறைவாக உள்ள பீகார் மக்கள் இதனை நிரப்புவதற்குப் படும் சிரமத்தை நினைத்துப் பார்க்கலாம்.  இந்தச் சிரமத்தைக் குறைக்கும் வகையில், படிவங்களை வாக்காளரைத் தவிர அரசியல் கட்சிகளும் நிரப்பலாம் என்று தேர்தல் ஆணை யம் கூறியுள்ளது. இவ்வாறு கூறியதன் மூலம், பொது அறிக்கைகள் வாயிலாக அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களின் செயலற்ற தன்மையைக் குறைகூறவும் அது முயன்றிருக்கிறது. சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கமும் தாக்கமும் சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம் வாக்காளர் பட்டியலிலிருந்து வாக்காளர்களை நீக்க வேண்டும் என்பதேயாகும். எனவேதான் தேர்தல் ஆணையம் இதுவரை வாக்காளர் என்பதை நிரூபிக்கக் கூறிவந்த பொதுவான ஆவணங்கள் அனைத்தையும் ஏற்க அது மறுத்துவிட்டது.  தேர்தல் ஆணையம் முன்பு வழங்கிய தன் சொந்த வாக்காளர் அடையாள அட்டையையும்கூட ஏற்க முடியாது என்று கூறியிருக்கிறது. எனினும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரே ஆதார் அட்டையை ஏற்றுக்கொள்ள முன்வந்தது. தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட சில வகையான ஆவணங்களை மட்டுமே ஏற்க முடியும் என்று வலியுறுத்துவதால், கிராமப்புற பெண்கள், முஸ்லிம்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் சொத்து அல்லது குத்தகை ஆவ ணங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. மேலும் பலர் திருமணத்திற்குப்பின் இடம் பெயர்ந்து சென்றுவிடுவதால், பெருமளவில் நீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சாதாரணமாக, திருத்தம் செய்தால் வாக்காளர் பட்டியல் விரிவாக்கப்படும். இந்த முறை அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. பீகாரின் வாக்காளர்கள் 7 கோடியே 80 லட்சத்திலிருந்து 7 கோடியே 40 லட்சமாகக் குறைந்துள்ளனர். இறுதி சரிபார்ப்பு கட்டத்தில் மட்டும், எவ்விதமான முன்னறிவிப்புமின்றி சுமார் 38 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் பாதிப்பு பெண் வாக்காளர்களின் பங்கு 47.7 சதவீதத்திலிருந்து 47.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. 43 தொகுதிகளில், நீக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிக மானோர் பெண்கள். வாக்காளர் பட்டியலில் மாநிலத்தின் பாலின விகிதம் இப்போது 892 ஆகக் குறைந்துள்ளது. சுயேச்சையாக மேற்கொள்ளப்பட்ட பல  ஆய்வுகள், கணிசமான முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட மாவட்டங்கள் மாநில சராசரியை விட மிக அதிகமாக நீக்கல் விகிதங் களைப் பதிவு செய்துள்ளன என்று குறிப்பிடு கின்றன. பீகார் மக்கள்தொகையில் 16.9 சத வீதமாக இருக்கும் முஸ்லிம்கள், அனைத்து நீக்கல்களிலும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு  பங்கைக் கொண்டுள்ளனர் என்று யோகேந்திர யாதவ் தலைமையிலான ஆய்வுக்குழு மதிப்பிட்டுள்ளது. கிஷன்கஞ்சில், சுமார் 12 சதவீத வாக்காளர்கள் காணாமல் போயுள்ள னர். இதில் முஸ்லிம் பெண்கள் இரட்டிப்பாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீதித்துறை தலையீடுகளும் மௌனமும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளைத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க மறுத்ததால், அவை உச்சநீதிமன்றத்தை அணுகின. எனி னும், எதிர்க்கட்சிகளின் வாதங்களை முழுமை யாகக் கேட்க நீதிமன்றம் தயக்கம் காட்டியது. இறுதியாக, தாமதமாக, ஆதார் அட்டையை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறி யிருக்கிறது. அதன் சமீபத்திய உத்தரவு 3.7 லட்சம் விலக்கப்பட்ட வாக்காளர்களுக்கு இலவச சட்ட உதவியை மட்டுமே கோருகிறது. அதுமட்டுமல்லாமல், எதிர்க்கட்சியினரை, நீதிமன்ற அமர்வு “அதிக ஆர்வம் உள்ளவர்கள்” என்றும், “அற்ப காரணங்களுக்காக” மனு  தாக்கல் செய்திருக்கிறார்கள் என்றும் கண்டித் திருக்கிறது. மிக முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், அனைத்து அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசிக்காமல், இவ்வாறு மிகப்பெரிய முடிவினை எடுத்தி ருக்கும் பிரச்சனை குறித்து எதுவும் கூறாமல் நீதிமன்றம் தவிர்த்துள்ளதாகும். “ஊடுருவல்காரர்கள்” கதை  மற்றும் “தூய்மை” வெறி 2003-ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே இந்த சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்று தேர்தல் ஆணை யம் கூறியது. ஆனால், அந்த வழிகாட்டுதல் களை வெளியிட அது மறுத்துவிட்டது. 2003-ஆம் ஆண்டு வழிகாட்டுதல்கள் குடியுரிமை யைத் தீர்மானிப்பது கணக்கெடுப்பாளரின் வேலை அல்ல என்று தெளிவாகக் கூறுகின்றன. இதற்கு நேர்மாறாக, 2025-இல் தேர்தல் ஆணையம் “வெளிநாட்டினர்” என்று அழைக்கப்படுபவர்களை அடையாளம் காண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. இது அஸ்ஸாம் தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த தர்க்கங்களை இதில் எதிரொலித்தது. முஸ்லிம் களை “ஊடுருவல்காரர்கள்” என்று பாஜக-வினர் ஜார்கண்ட் மற்றும் பீகார் சட்டமன்றத் தேர்தலின்போதும் கட்டவிழ்த்துவிட முனைந்துள்ளனர். ஏனெனில் இங்கே கணிச மான அளவிற்கு முஸ்லிம்களும், வங்கமொழி  பேசுவோரும் உள்ளனர். “வெளிநாட்டினர்” மற்றும் “போலி வாக்காளர்கள்” என்று முத்திரை குத்துவதன் மூலம், பாஜக  நீண்ட கால மாக வளர்த்து வந்த ஒரு விவாதத்தை தலைமைத் தேர்தல்  ஆணையம் இப்போது தூக்கிப்பிடித்திருக்கிறது. நீக்குதல் செயல்களை இதன் அடிப்படையில்தான் தேர்தல் ஆணை யம் மேற்கொண்டிருக்கிறது. பீகார் தேர்தல் நெருங்கியுள்ள வேளையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி  ஆகியோர் பொது வெளியில் இந்த “ஊடுருவல்” கதையைத் தீவிரமாகப் பேசியுள்ளனர். “தூய்மை” மீதான இந்த வெறி, இந்திய ஆட்சியில் ஓர் ஆழமான எதேச்சதிகார சறுக்கலையும், பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் நவீன பாசிச போக்குகளுடன் எதிரொலிக்கும் இந்துத்துவா திட்டத்தையும் பிரதிபலிக்கிறது. பலமுறை கோரப்பட்ட போதிலும், நேபாளம் மற்றும் மேற்கு வங்காளத்தின் எல்லையான கிஷன்கஞ்சில் கூட, கண்டறியப்பட்ட “ஊடுருவுபவர்கள்” பற்றிய தரவை வெளியிட தலைமைத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அரிக்கப்படும் சுயாட்சி அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை இல்லாமை, தான் நினைத்ததை செயல்படுத்துவதில் அவசரம், நடைமுறையில் தெளிவின்மை, மற்றும் பாஜக-வினரின் மதவெறிக் கதையைத் தூண்டுவது ஆகியவை இந்திய மக்களிடையே இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு சார்புடையதாகவும் பாஜக-வின் நலன்களுடன் ஒத்துப்போய்க்கொண்டிருப்பதாகவும் உணரப்படுவதற்கு இட்டுச் சென்றுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு எதிராக, பாஜக அரசு பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவைத் தேர்ந்தெடுத்தது இந்தக் கருத்தை மேலும் வலுவாக்குகிறது. ஆணையத்தின் மீதான இந்த நம்பிக்கை சரிவு, அதன் நம்பகத்தன்மை இழப்பு மற்றும் அதன் சமரசம் செய்யப்பட்ட சுயாட்சி ஆகியவை நிறுவனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல. பீப்பிள்ஸ் டெமாக்ரசி (அக். 19, 2025) தமிழில் : ச.வீரமணி