articles

img

இரவிலும் படம் பிடிக்கும் நிசார்

இரவிலும் படம் பிடிக்கும் நிசார்

பூமியை படம் பிடிக்கும் செயற்கைக்கோள்கள் பல காலமாக ஒப்பற்ற அறிவியல் கருவியாக விளங்கி  வருகிறது. ஆனால் இவற்றில் பெரும்பான்மையானவை பிரதிபலித்து வரும் சூரிய ஒளியை சார்ந்து உள்ளன. எனவே பகலிலும் மேகம் இல்லாநிலைமைகளில் மட்டுமே படம் பிடிக்கும். தற்போது செயற்கை துளை ராடார்(synthetic aperture radar (SAR) தொழில்நுட்பத்தின் அடிப்ப டையில் இந்தியாவின் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து நிசார்(NISAR) எனும் செயற்கைக்  கோளை ஏவியுள்ளன. 3டன்எடையும் 12 மீட்டர் நீள ஆன்டென்னாவும் கொண்ட இது 1.5 பில்லியன் டாலர்  செலவில் கட்டப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு, பருவ நிலை அறிவியலுக்கு மற்றும் இயற்கைப் பேரிடர் நிவா ரணங்களுக்கு தேவையான தகவல்களை இது அளிக்கும்.  சார் தொழில்நுட்பம் 1951களிலேயே ராணுவப் பயன் பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய ஒளியை சார்ந்து இல்லாமல், இது ராடார் ஒளிக்கற்றையை பூமி யின் மீது செலுத்தி அதன் பிரதிபலிப்பின் மூலம் தக வல்களை சேகரிக்கிறது. புகைப்படம் எடுக்க பிளாஷ்  லைட்டை பயன்படுத்துவதை ஒத்தது இது. எனவே  இரவிலும் பூமியின் மேற்பரப்பை படம் பிடிக்க இய லும். மேலும் ராடார் ஒளியானது பெரும்பான்மையான மேகம், புகை ஆகியவற்றை ஊடுருவும் என்பதால் பூமியை மேகமோ, புகையோ, சாம்பலோ சூழ்ந்திருந்தா லும் படம் பிடிக்கும். இது வெள்ளம், காட்டுத் தீ மற்றும்  எரிமலை வெடிப்பு ஆகியவற்றின் போதுமிகவும் பய னுள்ளதாக இருக்கும்.  அடர்த்தியான தாவரக் கூட்டத்தையும் ராடார் ஊடுரு வும் என்பதால், தண்ணீர் இருப்பையும் கண்டுபிடிக்க முடியும். காடுகளின் முப்பரிமாணத்தை படம் பிடிக்க லாம். காடுகளில் சேகரமாயுள்ள உயிரி பொருண்மை யையும் கார்பன் அளவுகளையும் அளவிட இயலும். சிங்கப்பூர் ரிமோட் சென்சிங் சோதனைச் சாலையை  சேர்ந்த புவி அவதானிப்பு பிரிவு இயக்குநர் சாங் - ஹோ - யான் இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய கருத்தாளர் ஆவார். அவர் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடந்த 15 ஆண்டுகளாக நூற்றுக்கனக்கான இயற்கைப்  பேரிடர்களுக்கு உள்ளான பகுதிகளை மேப் செய்துள்ளார். இந்த செயற்கைக்கோள் மூலம் படம் பிடிக்கப்படும் தரவுகள் உலகெங்கும் இலவசமாக அளிக்கப்படும். உலகிலுள்ள பெரும்பான்மையானநிலப்பகுதிகள், பனிப் பகுதிகள் ஆகியவற்றின் தெளிவான பிம்பங்களை 12 நாட்களுக்கு இரு முறை அளிக்கும்.  பூமியின் மேற்பரப்பு சில மில்லிமீட்டர்கள் உயர்ந்தா லும் தாழ்ந்தாலும் இது கண்டுபிடிக்கும். இதன் மூலம்  அணைகள் தாழ்வது, நிலத்தடி நீர் மட்டம் மற்றும் பூகம்பங்கள், நிலச்சரிவு எரிமலை வெடிப்பு ஆகிய வற்றினால் ஏற்படும் நில பெயர்ச்சி ஆகியவற்றை கண்ட றியலாம்.  மண்ணில் உள்ள ஈரப்பதத்தை மதிப்பீடு செய்ய  முடியும் என்பதால் விவசாயத்திற்கும் இது முக்கியமா னது. பனித்தகடுகள், பனிப்பாறைகள் ஆகியவற்றின் ஒழுக்கு, கடலரிப்பு, எண்ணெய்க் கசிவுகள் ஆகிய வற்றிலும் இதன் பயன்பாடு முக்கியமானது. சுவின்பார்ன்  பல்கலைக்கழகத்தை சேர்ந்த புவி அவதானிப்பு ஆய்வா ளர் ஸ்டீவ் பெட்ரி அவர்களின் பதிவு. ‘சயின்ஸ் அலர்ட்’டில் வந்துள்ளது

சைக்கிள் ஓட்டுங்க!  மறதியை வெல்லுங்க!

ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சைக்கி ளில் அடிக்கடி பயணிப்பதால் மறதி நோய் வரும் அபாயம் குறைகிறது என ஒரு ஆய்வு காட்டுகிறது. சீனா விலுள்ள ஹுவோஷங் பல்கலைக்கழகமும் ஆஸ்திரேலி யாவின் சிட்னி பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய  ஆய்வில் மத்திமமான உடற்பயிற்சியில் அடிக்கடி ஈடுபடு வது மூளையை சுறுசுறுப்பாக வைத்து, நரம்பு சிதைவு களிலிருந்து பாதுகாக்கிறது எனும் கருத்தை வலுவாக்கி யுள்ளது. 56 வயதானகிட்டத்தட்ட ஐந்து இலட்சம் பிரிட்டன்  மக்களின் உடல்நல ஆவணங்களையும் அவர்கள் பயன்  படுத்திய போக்குவரத்தையும் இணைத்து மறதி நோய் யாருக்கு ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்தார்கள்.போக்குவரத்து நான்காக பிரிக்கப்பட்டது. செயல்பாடு இல்லாதவை (கார் மற்றும் பொதுப் போக்குவரத்து), நடை, நடையும் முதல்வகையும் இணைந்தவை, இறுதி யாக பெரும்பான்மை சைக்கிள் பயணம் அல்லது சைக்கிள் பயணத்துடன் மற்ற வகைகளில் பயணிப்ப வர்கள். வேலைக்கு சென்று வருவது இதிலிருந்து விலக்கப்பட்டது. செயல்பாடில்லாத (passive) பயணிகளுடன் ஒப்பி டும்போது சைக்கிள் பயணிகளுக்கு எல்லாவிதமான மறதி நோய்கள் வருவது 19% குறைவாகவும்; அல்சைமர்  நோய் வருவது 22% குறைவு; 65 வயதுக்கு முன் வரும் இளம் மறதி நோய் 40% குறைவாகவும் தாமதமாக வரும் மறதிநோய் 17% குறைவாகவும் காணப்பட்டது. சாலைகளில்போக்குவரத்தை சமாளிக்கும் திறமைக்கும்  மூளையின் கொள்ளளவிற்கும் தொடர்புகள் இருப்பது  இதற்கு முந்தய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போதைய ஆய்வில் சைக்கிள் பயணிப்ப வர்களின்ஹிப்போகேமல் எனப்படும் மூளையின் பகுதி பெரிதாக இருப்பது இதனுடன் பொருந்துகிறது. சைக்கிளில் பயணிக்கும்போது தேவைப்படும் உடல் இயக்கங்களே - பாதைகளையும் திசைகளையும் சமா ளிப்பது, எச்சரிக்கையாக இருப்பது, அல்லது நல்ல காற்று சுவாசிப்பது ஆகியவையே பிரதானமாக மறதி நோய் குறைவதற்கு காரணமாக இருக்கும். ஆனால் மர பணு கோளாறினால் வரும் அல்சைமர் நோய்க்கு சைக்கிள் சவாரி அவ்வளவாக பலனளிக்காது. சைக்கிள் சவாரிக்கும் மறதி நோய்க்கும் நேரடி யான காரண காரிய தொடர்பைஇந்த ஆய்வு காட்ட வில்லை. மறதிக்கு பல்வேறு காரணிகள் உள்ளன. ஆனால் உடற்பயிற்சிக்கும் மறதிநோய்க்கும் உள்ள தொடர்புகள் குறித்தான மற்ற ஆய்வுகளுடன் இது பொருந்துகிறது. உலகளவில் மறதிநோயினால் பாதிக்கப்பட்டவர்கள்5.5 கோடியிலிருந்து 13.9 கோடி யாகஅதிகரித்து வரும் நிலையில் அதற்கு சைக்கிள் சவாரி ஒரு எளிய செலவில்லாத வழி என்று மட்டும் சொல்ல முடியும். இந்த ஆய்வு ஜாமா நெட்வொர்க் ஓபன்  (JAMA Network Open) என்கிற இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் கூறுகிறது.

மாசில்லா குளிர்பதன முறை  

கட்டடங்களை மின்சாரம், மின் விசிறி மற்றும் குளிர்  சாதனம் எதுவும் இல்லாமல் 8டிகிரிc வரை குளிர் விக்கும் பொருள் ஒன்றை அமெரிக்க மற்றும் சீன அறி வியலாளர்கள் கூட்டாக உருவாக்கியுள்ளார்கள். பாலி மீதைல் மெத்தாக்ரிலேட்(polymethyl methacrylate (PMMA) எனும் வேதிப்பொருளிலிருந்து இது உண்டாக்  கப்பட்டுள்ளது. இது மின்சாரம் இல்லாமல் பேசிவ் (passive) எனும் முறையில் வெப்பத்தை வெளியிடு கிறது. மேலும் வழக்கமான குளிர் சாதனங்களில் பயன்  படுத்தப்படும் ஹைட்ரோ புளோரோ கார்பனோ, குளோரோ புளோரோ கார்பனோ இதற்கு தேவை யில்லை. இந்த வேதிப்பொருட்கள் பசுமைக் குடில்  வாயுக்களை வெளியிட்டு வளிமண்டலத்தை மாசு படுத்தும். இந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய 2.1மி.மீ கன முள்ள பிஎம்எம்ஏ தகடுகளை கட்டடங்களின் மேல் பதிக்க லாம். குறுகிய அலைவரிசை அகச்சிவப்பு கதிர்கள்உள்  ளிட்ட சூரிய ஒளியை 96% இவை பிரதிபலித்து விடு கின்றன. ஆகவே பகலில் கட்டடங்கள் உள்வாங்கும் வெப்பத்தை கணிசமாக குறைக்கின்றன. இதிலுள்ள துளைகளினால் இரவில் மத்திம அகச்சிவப்பு கதிர்களை யும் வெளியிடுகின்றன. நுண்ணிய இந்த துளைகளினால்  பல கோணங்களிலும் வெப்பக்கதிர்கள் வெளியிடப்படு கின்றன. இந்த தகடுகள் செய்வதும் எளிமையானதே. உறுதியானதும்துளைகள் கொண்டதுமான அமைப்பில்  பாலிமர் துகள்கள்ஒற்றை முறை சின்டரிங் முறையில் பரப்பப்படுகின்றன. இதற்கு சிக்கலான எந்திரங்களோ பல்வேறு கூட்டுப்பொருட்களோ தேவையில்லை. கூரை கள், சுவர்கள், தற்காலிக கூடாரங்கள், மின்னணுப் பொருட்கள் அல்லது உணவுப் பொருட்களை பாது காக்கும் கலன்கள் போன்றவற்றில் இவை பயன்படலாம்.  குளிர்சாதனங்கள் பயன்படுத்துவது சாத்தியமில்லாத அல்லது கட்டுப்படியாகாத வெப்ப பகுதிகளில் கட்ட டங்களில் இவை பயன்படும்.  இது குளிர்சாதனத்திற்கு மாற்று அல்ல; அதோடு இணைந்து பணிபுரியும் ஒன்றாகும் என்கிறார் இந்த  ஆய்வின் உறுப்பினரும் பெனிசில்வேனியா பல்கலைக்  கழக பொறியியல் விஞ்ஞானியான அக்லேஷ் லஹட்கியா.இந்த சாதனம் வெவ்வேறு நிலைமை களில், பல்வேறு பரப்புகளில், நீடித்த காலத்திற்கு எவ்வாறு செயல்படுகிறது என்பதை சோதிக்க உள்ளார் கள். மேலும் உறுதித்தன்மை, மாசுபடுதலுக்கு தாக்குப்  பிடிப்பது, புற ஊதாக்கதிர்களினால் சேதமடைவது, வணிக ரீதியில் செலவு-திறன் விகிதங்கள் ஆகிய வற்றையும் மதிப்பிட வேண்டும். இந்தியா, மத்திய கிழக்கு, தெற்கு ஐரோப்பா ஆகிய நாடுகள் உள்ளிட்ட ஆய்வுக்கு குழுவினர் இந்த ஆய்வில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளனராம். செயற்படு தலில்லா( passive) கட்டட கலை மற்றும் அதிக தாக்கம்  இல்லா நகர் வடிவமைப்பு ஆகிய இயக்கங்களுடன் இந்த தொழில்நுணுக்கம் இயைந்து போகிறது.