articles

img

ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

இரவுப் பணி  “ஏன் அவரு நைட் 2 மணிக்கு வேலை செஞ்சு கிட்டு இருந்தாரு..” என்ற கேள்வியைத் தான் துளைத்துத் துளைத்து ஒவ்வொருவரும் கேட்டார்கள். குஜராத் மாநிலம், மெஹ்சனா  மாவட்டத்தில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியின் முதல்வர் தினேஷ் குமார் ராவல், வயது 50, மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். வாக்காளர் விபரங்களை ஆன்லைனில் பதி வேற்றிக் கொண்டிருந்தபோது, அவர் உயிரிழந்திருக்கிறார். அந்த நேரத்தில் வேலை செய்யலாமா என்ற கேள்விக்கு, வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள மற்றவர்கள் பதில் அளித்துள்ளனர். இரவு நேரத்தில் மட்டும்தான் விபரங்களை ஏற்று வதற்கான சர்வர் வேலை செய்யுமாம். குஜராத்தில் மட்டும் கடந்த சில நாட்களில் மட்டும் ஐந்து பேர் மாரடைப்பால் மரணமடைந் துள்ளனர். ஒரு வார கால நீட்டிப்பு என்பது பலன் தராது என்றும் சொல்கிறார்கள்.  பொறுப்பு  மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை முடக்கி வைத்திருப்பது எவ்வளவு பெரிய  ஆபத்து என்பதை ஜம்மு-காஷ்மீர் நிகழ்வுகள் காட்டுகின்றன. ஜம்முவில் உள்ள ஊடகவிய லாளர் குலாம் காதிரின் வீட்டை இடித்துத் தகர்த்திருக்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலான வீடுகள் பலவற்றை இடித்துள்ளனர். நிர்வாக அதிகாரங்கள் பெரும்பாலும் ஒன்றிய அரசின் வசம் உள்ளன. காவல்துறையின் ஆத ரவுடன்தான் ஜம்மு மேம்பாட்டு ஆணையத்தால் வீடு தகர்க்கப்பட்டிருக்கிறது. காவல்துறை யும், ஆணையமும் ஒன்றிய அரசால்தான் நிர் வகிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் எங்க ளுக்குத் தொடர்பில்லை என்று பாஜகவினர் பேசத் தொடங்கியுள்ளார்கள். “அப்படியானால் விசாரணைக்கு உத்தரவிடலாம். யாருடைய அனுமதியும் இல்லாமல் எப்படி இடித்தார்கள்” என்று மாநில அரசு கோரியுள்ளது.  ஊழல்  விளையாட்டுத்துறையில் ஊழல் புரை யோடிக் கிடப்பது அரியானாவில் அம்பல மாகியுள்ளது. கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டி ருந்த இரண்டு ஆட்டக்காரர்கள் உயிரிழந்தி ருக்கிறார்கள். 16 வயது ஹார்திக் ராடி மற்றும் 15 வயது அமன் ஆகிய இருவரும் ஜூனியர் இந்திய அணிக்காக விளையாடும் நட்சத்திர ஆட்டக்காரர்களாவர். பயிற்சி மைதானத்தில் இருந்த இரும்புக் கூடைகளும், அவற்றைத் தாங்கிக் கொண்டிருந்த கம்பங்களும் துருப் பிடித்திருந்தன. பந்தை அதில் போட முயலும் போது கம்பங்கள் தகர்ந்து, இரண்டு ஆட்டக் காரர்களுக்கு படுகாயத்தை ஏற்படுத்தியது. இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலன் தராமல் இருவரும் உயிரிழந்தனர். துருப்பிடித்த இரும்புக் கம்பங்கள் அரியானாவில் உள்ள பாஜக அரசின் ஊழலையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று முன்னாள் விளை யாட்டு வீரர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.  காதல்  “அவரைக் கொன்று விட்டால் என்ன.. என்னுடைய காதல் சாகாது” என்று 19  வயது ஆஞ்சல் கூறியுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த இவரின் காதலர், தனது பெற்றோர் களால் கொலை செய்யப்பட்ட சூழலில்தான் இப்படித் தெரிவித் திருக்கிறார். அவர் அதோடு நிற்க வில்லை. இறந்த உடலுடன் திரு மணம் செய்திருக் கிறார். “அவரு டைய மரணத் தில் கூட எங்கள் காதல் வென்றுள் ளது. என்னுடைய தந்தையும், சகோதரர்களும் தோற்றுவிட்டார்கள்” என்று மணக்கோலத்தில் நின்றவாறே கூறியுள்ளார். தன்னுடைய தந்தைக்கும், சகோதரர்களுக்கும் கடுமையான தண்டனை தரப்பட வேண்டும். அதில் உறுதியாக நிற்பேன் என்கிறார் அவர். “சாதி மறுப்புத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் கொலைகள் செய்வது நாட்டின் பல  பகுதிகளிலும் அதிகமாகி வரும் நிலையில், அதற்கு எதிரான சட்டத்தின் அவசியமும் அதி கரித்து வருகிறது” என்று சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.