articles

img

இயற்கைக் கொடை! - முனைவர் கடவூர் மணிமாறன்

இயற்கைக் கொடை!

நீல  வானின் எழிலைப்பார்!     நீண்டு பரந்த கடலைப்பார்! கோல விண்மீன் கூட்டம்பார்!   குலுங்கும் இயற்கை விருந்தைப்பார்!  விண்ணில் பறக்கும் புள்ளினம்பார்!      வெள்ளி நிலவின் ஊர்வலம்பார்! மண்ணில் ஒளிதரும் கதிரோன்பார்!        மாறா இயற்கை வளத்தைப்பார்!           குளங்கள் ஆறுகள் சோலைகள்பார்!     குன்றுகள் நிமிர்ந்தே நிற்கும்பார்! வளங்கள் நல்கும் ஏரிகள்பார்!   வயல்கள் தோப்புகள்வனப்பைப்பார்!  பற்பல வண்ண மலர்கள்பார்!       பகட்டாய் வீழும் அருவிகள்பார்! அற்புத வான வில்லைப்பார்!         அடர்ந்த கானக விலங்கினம்பார்!     கரிய முகில்கள் நகரும்பார்!      கனிவாய்த் தென்றல் வீசும்பார்! பெருமழைக் கொடையாம் வெள்ளம்பார்!      பெருமை ஓங்கும் உலகைப்பார்!  செடிகள் கொடிகள் சிரிக்கும்பார்!       சிந்தனை சிலிர்க்கும் வியப்பைப்பார்! நடிக்கத் தெரியா இயற்கையதன்       நானிலம் போற்றும் சிறப்பைப்பார்!