articles

img

ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த நாகர்கோவில் மாணவி

ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த நாகர்கோவில் மாணவி

ம.சு.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

திருநெல்வேலி, ஆக.13- நெல்லை மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வில், மாணவி ஒருவர் ஆளுநரை புறக்கணித்துவிட்டு துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டம் பெற்றார். நெல்லை மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழகத்தின்  32ஆவது பட்டமளிப்பு விழா புதனன்று பல்க லைக்கழக அரங்கில் நடைபெற்றது.  விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி னார்.  அப்போது நாகர்கோவிலை சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப் ஆளுநரின் கையால் பட்டத்தை பெற மறுத்துவிட்டார். துணைவேந்தரிடம் அவர் பட்டம் பெற்றார். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. தனது இந்த செயல் குறித்து பேட்டி அளித்த மாணவி, “தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல் படும் ஆளநரிடம் பட்டம் வாங்க விரும்ப வில்லை. எனவே அவரை தவிர்த்து விட்டு துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டம்  பெற்றேன்.” என்றார். இவர் மைக்ரோ பைனான்ஸ் பிரிவில் பிஎச்டி முனை வர் பட்டம் பெற்றுள்ளார்.