articles

img

மோடியின் பொருத்தமற்ற தீபாவளி பரிசு - பேரா.பிரபாத் பட்நாயக்

மோடியின் பொருத்தமற்ற தீபாவளி பரிசு -  பேரா.பிரபாத் பட்நாயக்

மோடியின் சுதந்திர தின உரை எப்போதும் போல் அப்பட்டமான பொய்களால் நிறைந்திருந்தது. பாஜகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் உற்பத்தி துறை வீறுநடை போட்டிருந்ததாக தெரிவித்திருந்தார். உண்மையில் கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தி துறை பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஜி.டி.பி.யின் பங்கு தொழில் உற்பத்தி துறையில் 17.5 சதவீதத்திலி ருந்து 12.6 சதவீதமாக வீழ்ந்துள்ளது. பொருளாதார அறிஞர்கள் இதனை ‘தொழில்மயம் அழிதல்’ காலம் என குறிப்பிடுகின்றனர். ஜிஎஸ்டி வரி ‘சலுகை’  - உண்மையான பகுப்பாய்வு இந்த நிலையில், ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்கள் ரத்து செய்யப்பட்டு 5 மற்றும் 18 சதவீத வரி விகிதங்கள் மட்டும் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த வரி விகிதங்கள் மாறு தலைத்தான், அருவருக்கத்தக்க நிலப்பிரபுத்துவ மன நிலையில் “சலுகை” என அறிவிக்கிறார். மக்களால் செலுத்தப்படும் மக்களுடைய பணம் அரசுக்கு வரு மானமாக வருகிறது. மக்கள் செலுத்தக்கூடிய வரி வருமான சிறு குறைப்பை ஏதோ அரசு தனிப்பட்ட தனது வருமானத்திலிருந்து கொடுப்பது போல சலுகை என அழைக்கிறார். இந்த தலைகீழ் பார்வை பிரெஞ்சு தேசத்தின் 14ஆம் லூயி அரசின் கூற்று போல உள்ளது. தி இந்து ஆங்கில பத்திரிகை செய்தியின்படி, 28 சதவிகித வரி என்பது மொத்த ஜிஎஸ்டியில் 11 சதவிகிதமாகும். இது 18 சதவீதமாக குறைந்தால் மொத்த வருமானத்தில் 1.1 சதவிகிதம் மட்டுமே இழப்பா கும். 12 சதவீதம் 5 சதவீதமாக குறைந்தால் மொத்த  இழப்பு 0.35 சதவீதமாக மட்டுமே இருக்கும்.

இரண்டு விகிதங்களிலிருந்து மொத்த வரி இழப்பு 1.45 சதவீதம் மட்டுமே. 2024-25இல் மொத்த ஜிஎஸ்டி வரி வருமானம் ரூ.22.08 லட்சம் கோடியாகும். இந்த அடிப்படையில் மொத்த இழப்பு தற்போது ரூ. 32,016 கோடியாகும் - அதாவது 0.1% மட்டுமே. இந்த அற்ப மதிப்பான 0.1 சதவீத சலுகைகளை தனது சொந்த செயல்திறன்களை அதி கப்படுத்தி காட்டுவதற்காக “தீபாவளி பரிசு” என இந்த  அரசால் மட்டுமே சொல்லிக்கொள்ள முடியும். இந்த வரிச்சலுகைக்கு ஒத்த நிதி சார்ந்த மக்க ளுக்கான செலவினத்தில் குறைவு ஏற்படுமானால் நிதி பற்றாக்குறை அதிகரிக்காது. ஆனால் அரசின் செல வினம் குறைக்கப்பட்டதால், பணப்புழக்கம் சுருங்கி வரிச்சலுகைகளால் கிடைக்கப்பெறும் பயன்விளைவு கள் கிட்டாமல் ரத்தாகி விடும். கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு துறைகளில் அரசு செலவினம் குறைக்கப் படும் போது வரிச்சலுகை என்ற பெயரில் அறிவிக்கப் பட்ட “பரிசின்” பயன்விளைவுகள் பூஜ்யமாகிப் போகும். உண்மையான பொருளாதார  உயிர்ப்பு தேவை பொருளாதார உயிர்ப்பில் உண்மையிலேயே அரசு தீவிரமாக இருப்பின், கணிசமாக அரசு செல வினத்தை, அரசின் அனைத்து நிலைகளிலும் உள்ள  காலிப்பணியிடங்களை நிறைவு செய்து, பொது சுகா தாரத்துறை நிறுவனங்களை முறையாக செயல்பட வைக்க வேண்டும். சொத்துவரி மற்றும் பரம்பரை சொத்துக்கள் வாரிசுரிமை மாற்ற வரி போன்ற வரிகளை வசூலிப்பதன் மூலம் நிதித்தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

பெர்ன்ஸ்டைன் நிறுவனத்தின் அறிக்கையின்படி, 1 சதவீத பெரும் பணக்காரர்கள் தேசத்தின் 60 சதவீத சொத்துக்களுக்கு உடைமையாளராக உள்ளனர். செல்வ சமத்துவமின்மையின் உண்மையான அளவு மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே போகிறது. மூலதன லாபங்களை குவிக்கும் உலகமயமாக்கலை வேகப்படுத்தி செல்வந்த அரசியலை வளர்த்து சமூக, கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய சமூக இயங்குதிறன்களை மறுக்கும் கொள்கைகளே பின்பற்றப்படுகிறது. சமூகத்தின் அடிப்படை ஜனநாய கப் பண்புகளுக்கு எதிரான செல்வ சமத்துவமின்மை க்கு எதிராக பொருளாதார உயிர்ப்பு நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டும்.  கல்வி-சுகாதார சிதைவு சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கல்வியும் உடல்நலனும் வர்த்தகமயமாக்கப்பட்டு சாதாரண மக்களுக்கு அதீத செலவுமிக்கதாக ஆகி யுள்ளது என ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால் பல் கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பு சுதந்திரமான கருத்துவிவாதங்கள் நடத்தவிடா மல் தடுக்கிறது. தரமற்ற நபர்கள் ஆசிரியர்களாகவும், ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட கைத்தடிகள் வேந்தர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள். இந்த 79வது சுதந்திர தினத்தில், நவீன தாராளமய மாக்கலின் காரணமாக ஒருங்கிணைந்த விளைவுக ளாக ஒழுங்கற்ற குழப்பமான போக்குகள் உருவாகி யதுடன், அதன் தொடர்ச்சியாக மோசமான பாசிச சக்திகளின் அதிகாரமும் வளர்ந்தோங்கியுள்ளது.

பொருளாதார மீட்புக்கு மதிப்புவாய்ந்த சிறு முயற்சி கூட இல்லை. மக்களுக்கான நிவாரண அறிவிப்பும் இல்லை. முன்னெப்போதையும் விட கல்வியும் உடல் நலனும் வர்த்தகமயமாக்கப்பட்டு மக்களிடம் சென்று சேர முடியாத வகையில் சாதாரண மக்களுக்கு அதீத செலவுமிக்கதாக ஆகியுள்ளது. எதிர்காலத்தில் இதற்கான பரிகார நடவடிக்கைகள் ஏதாவது இருக்கும் என்ற அனுமானம் கூட செய்ய இயலாத அளவில் தான் பிரதமரின் சுதந்திர உரை இருந்தது!