articles

img

மாதர் சங்கத் தலைவர் - உ.ரா. வரதராசன் இணையர் தோழர் சரஸ்வதி காலமானார்: தலைவர்கள் அஞ்சலி

மாதர் சங்கத் தலைவர் - உ.ரா. வரதராசன் இணையர் தோழர் சரஸ்வதி காலமானார்: தலைவர்கள் அஞ்சலி

சென்னை, ஆக. 14 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொருளா ளர், மகளிர் சட்ட உதவி மையத்தின் செய லாளர் தோழர் உ.ரா. வரதராசனின் இணை யருமான தோழர் டி. சரஸ்வதி வியாழக் கிழமை காலமானார். அவருக்கு வயது 84. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த தோழர் டி. சரஸ்வதி, சிகிச்சை பலனின்றி காலமானார்.  அவரது உடல் அஞ்சலிக்காக, ‘ஏஇ-113, 10-ஆவது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40’ என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர்கள் கே. பால கிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயற் குழு உறுப்பினர் க. கனகராஜ், மாநி லக்குழு உறுப்பினர் வெ. ராஜசேகரன் உள் ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்ட பலரும் சரஸ்வதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள னர். இறுதி நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழ மை (ஆக.15) காலை நடைபெறுகின்றன.  மாதர் சங்கம் இரங்கல் மாதர் சங்கத்தின் மாநிலக்குழு வெளி யிட்ட இரங்கல் அறிக்கையில்,  “வங்கி ஊழியரான தோழர் சரஸ்வதி வங்கியில் பணிபுரிந்த பெண்களையும் மாதர் சங்க இயக்கத்திற்குள் இணைத்தவர். 1990-ஆம் ஆண்டில் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் சென்னையில் பெண்களு க்கான இலவச மகளிர் சட்ட உதவி மை யத்தைத் துவக்கியபோது அதன் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவுன்சிலிங் மற்றும் சட்ட ஆலோசனைகள் கொடுத்து பேருதவி புரிந்தார். தமிழகம் முழுவதும் உள்ள மாதர் சங்க முன்னணி ஊழியர்களுக்கு சட்ட விழிப்புணர்வு கொடுப்பதில் வழி காட்டியாக இருந்தார். 60 ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த தொழிற்சங்கத் தலைவர் தோழர் உ.ரா. வரதராசனை சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். அவரது இறப்பு பெண்கள் இயக்கத்திற்கு ஒரு  பேரிழப்பு” என்று மாதர் சங்க அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.