articles

img

சிங்காரவேலர் சென்னையை உருவாக்குவோம் என்பது அடர்த்தி மிக்க அரசியல் முழக்கம்

சிங்காரவேலர் சென்னையை உருவாக்குவோம் என்பது அடர்த்தி மிக்க அரசியல் முழக்கம்

சிங்காரச் சென்னை அல்ல, சிங்காரவேலர் சென்னையாக மாற்றுவோம் என்று நிகழ்ச்சி யின் தொடக்கத்தில் சிங்காரவேலர் படத்திற்கு மரி யாதை செலுத்தும்போது  தோழர்கள் முழக்கம் எழுப்பினர்.  எத்தனை அரசியல் அடர்த்தி மிக்க முழக்கம் அது....சிந்தனையாளராக, செயல்பாட் டாளராக, அணி திரட்டுபவராக ஒரே நேரத்தில் இயங்கியவர் மட்டுமல்ல, தனது சம காலத்தில் இணையற்ற மனிதராக உயர்ந்து நின்ற சிங்கார வேலரின் கனவுகளின் நீட்சியாக, அவற்றின் செயல் வடிவமாக கம்யூனிஸ்டுகள் இன்று பங் காற்றிக் கொண்டிருப்பதன் எதிரொலி அந்த முழக் கம் என்றார் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சி ஸ்ட் கட்சி தமிழ் மாநில செயற்குழு உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டு வர வேற்புக்குழு செயலாளருமான சு. வெங்கடேசன்.

மக்களிடமிருந்தே நிதி

 செவ்வாய்க்கிழமை அன்று (பிப்ரவரி 18) சென்னை கேரள சமாஜத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டுக்கான மத்திய சென்னை மாவட்ட வரவேற்புக்குழு கூடுகை நிகழ்ச்சியில் மாநாட்டுக் கான நிதியளிப்பு பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றிய வெங்கடேசன், கட்சிக்காகத் தங்களது குடும்பத்திற்கான நேரத்தைச் சிறிது துறந்து, நெருக்கமான உறவினர்களுக்கான நேரத்தைத் துறந்து பல்வேறு பணிகளை ஆற்றும் எளிய தோழர்கள், ஆண்டு தோறும் கட்சிக்குத் தாங்கள் ஈட்டும் ஊதியத்தில் இருந்து பல லட்ச ரூபாய் வழங்குவது அற்புதமான உணர்வு என்று பாராட்டி னார்.  ஆளும் கட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி விட்டு அதற்குப் பதிலாகத் தங்களது பணி ஓய்வு க்குப் பிறகு பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நீதிபதிகள் சிலரைப் பார்க்கிறோம், பூ விற்றுக் கொண்டிருக்கும் ஓர் ஏழை மூதாட்டியிடம் இருந்து  உண்டியலில் எளிய நன்கொடை பெறுவது உன்ன தமானது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.  அண்ணல் காந்திக்கும் கம்யூனிஸ்ட் கட்சி செயலா ளர் பிசி ஜோஷிக்கும் நடந்த கடித போக்குவரத்து பற்றிக் குறிப்பிட்டு, உங்களுக்கு எங்கிருந்து காசு வருகிறது என்ற கேள்விக்கு, சாதாரண மக்களிடமி ருந்து தான் நிதி பெற்றுக் கொள்கிறோம் என்று ஜோஷி பதில் சொன்னதைச் சுட்டிக் காட்டினார்.

சோசலிசமே மாற்று

 1857 முதல் சுதந்திரப் போர் மூண்டபோது இந்தி யர்களை வேட்டையாடிய கர்னல் நீல் என்கிற பிரிட்டிஷ் தளபதிக்கு சென்னை அண்ணா சாலை யில் வைக்கப்பட்டு இருந்த சிலையை அகற்ற  வேண்டும் என்ற போராட்டத்தில் முன்னின்றவர் சிங்காரவேலர் என்று குறிப்பிட்ட சு.வெங்கடேசன், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சமூக சீர்திருத்தம், பொதுவு டைமை தத்துவம் என்ற தனது நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாது செயல்பட்ட அவரின் பெயரால் சொல்கிறோம், சோசலிச மாடல் தான் மக்களுக்கானது என்றார். அண்மையில் 86 ஆயிரம் பேருக்குக் குடி மனை பட்டா வழங்கப்பட்டது. இதற்கான போராட் டங்களை அடிப்படையில் நடத்திக் கொண்டி ருப்பது மார்க்சிஸ்ட் கட்சி தான்.  குடியிருக்கும் இடத்திலிருந்து எளிய மக்களை அப்புறப் படுத்துவதற்கு எதிரான போர்க்குரலை எழுப்பிய வர் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம்.  அதன் எதிரொலியாகக் கொண்டுவரப்பட்ட சட் டத்தை வைத்துத் தான் இன்றும் பாதிப்புக்குள்ளா கும் மக்களைக் காக்க நாம் போராடிக் கொண்டி ருக்கிறோம்.  மொழிக்காகவும் முதல் குரல் எழுப்பி யவர்கள் கம்யூனிஸ்டுகள் என்ற வெங்கடேசன், ஆங்கிலம் கட்டாயம், தமிழ் இரண்டாம் மொழி என்று திமுக ஆட்சி முன்வைத்த போது, தமிழ் மொழி கட்டாயம், ஆங்கிலம் இரண்டாம் மொழி என்று சட்டமன்றத்தில் அந்தத் தீர்மானத்தின் மீது பேசுகையில் குரல் கொடுத்தவர் தோழர் என்.சங்கரய்யா என்றார்.  

சங் பரிவாரத்தின் இரட்டை வேடம்

 தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் ஒன்றிய அரசு, பல மாநிலங்களில் ஒன்றுக்கு மேற் பட்ட நகரங்களில் மெட்ரோ திட்டத்தை நடை முறைப்படுத்தப் பட்டிருக்க, தமிழ் நாட்டில் சென்னை மாநகரத்திலேயே இரண்டாம் மெட்ரோ  திட்டத்தை எளிதில் நடைமுறைப்படுத்த விடாது செய்து கொண்டிருக்கிறது என்று சாடினார். பாம்பன் பாலத்தைத் திறக்க இருக்கிறோம் என்கின் றனர். ஆனால், ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்புத் துறையே பாம்பன் பாலத் தின் 33 சதவீதம் தனது வலுவில் நிற்கவில்லை என்ற எச்சரிக்கையை அறிவித்துள்ளது.  திருப்ப ரங்குன்ற மலையைக் காப்போம் என்று இந்து  மதவெறியைத் தூண்டும் பாஜக தான், அழகர் மலையின் ஒரு பகுதியை டங்ஸ்டன் உலகத்திற் காக இல்லாமல் செய்ய உரிமம் வழங்கியவர்கள் என்று அவர்களது இரட்டை வேடத்தைச் சுட்டிக் காட்டினார். முருகனை  வழிபடுபவர்களும்  சிக் கந்தர் தர்காவில் வழிபாடு செய்பவர்களும் ஒற்று மையாகத் தான் வாழ்கின்றனர். பக்தியின் பெய ரால் மக்களைப் பிரிப்பது, புனிதத்தின் பெயரால் சிதைப்பதுதான் பாஜகவின் நோக்கம் என்றார்.  

கருத்தியலிலும் களத்திலும் கம்யூனிஸ்டுகளே!

 கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்கள் வழிபாடு நடத்த எந்த முன்னேற்பாடும் செய்யாத வர்கள், தலைநகர் தில்லி நடைமேடையில் நெரிச லில் 18 பேர் மடிந்து போயிருப்பதை அறியாத வர் மாதிரி இருக்கிறார் ரயில்வே அமைச்சர், நிலைய அதிகாரியிடம் கேட்டால், எப்படி கூட்டத்தை சமாளிப்பது என்றே புரியவில்லை என்றார். கும்ப மேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரில் ரயில் நிலையம் மூடப்பட்டு இன்றோடு 12 நாட்கள் ஆகிறது. தங்களால் மேலாண்மை செய்ய முடிய வில்லை என்று ஓசைப்படாமல் மூடிவிட்டனர். மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். நாம் நம்பிக்கையாளர்களைக் கொச்சை செய்வ தில்லை. இதயமற்ற உலகின் இதயம், ஏக்கப் பெரு மூச்சு மதம் என்றார் மார்க்ஸ். ஆனால் எந்தப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளாத ஒன்றிய அரசு இது என்றார்.  கருத்தியல் ரீதியாகவும், களத்திலும் கம்யூனிஸ்டுகள் அவர்களை எதிர்கொண்டு நிற்கிறோம் என்றார். மாவட்டத்தில் நடைபெற்று வரும் மாநாட்டுப் பணிகள் பற்றிய தனது உரையில், மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா, மத்திய சென்னையின் எளிய மக்கள் உள்ளன்போடு மாநாட்டு நிதி வழங்கி வருவதையும் பெருமிதத்தோடு சுட்டிக் காட்டினார்.  மாவட்ட வரவேற்புக்குழுத் தலைவர் எம்.வி.கிருஷ்ணன் தலைமையேற்க, மாவட்ட செயற் குழு உறுப்பினர் வெ.தனலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். பகுதிக்குழுக்கள், அரங்க கமிட்டிகள் சார்பில் நிதியளிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா. முரளி, சி.திரு வேட்டை, இ.சர்வேசன், எஸ்.கே. முருகேஷ்,  கே.முருகன், வே.ஆறுமுகம், எஸ்.வி.வேணு கோபாலன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளி ட்டு ஏராளமானோர்  பங்கேற்ற நிகழ்வில் நிறை வாக வரவேற்புக்குழு பொருளாளர் வி.சீனிவாசன் நன்றி நவின்றார்.