மாணவர் இயக்க முன்னோடி தோழர் பி.ராமச்சந்திரன் நூற்றாண்டு நினைவுச் சொற்பொழிவு புதனன்று (நவ.5) சென்னையில் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் நடத்திய இந்நிகழ்வில் தோழர் பி.ராமச்சந்திரன் எழுதிய ‘ஒரு கம்யூனிஸ்டின் நினைவுக் குறிப்புகள்‘ எனும் நூலின் மறுபதிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட, மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் கு.தமிழ் பெற்றுக் கொண்டார். மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், ஆர்.விஜயசங்கர், மூட்டா பொதுச்செயலாளர் ஏ.டி.செந்தாமரைகண்ணன், சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.மிருதுளா, செயலாளர் தௌ.சம்சீர்அகமது உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
