வலசைப் பறவைகளை கொல்லும் கட்டடக் கண்ணாடிகள்
வானளாவ உயர்ந்து நிற்கும் நியூயார்க் நகரின் அடுக்கு மாடிக் கட்டடங்களின் கண்ணாடிகளில் மோதுவதால் கொல்லப்படும் வலசைப் பறவைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. வருடாந்திர இலையுதிர் கால வலசைப் பறவைகள் கணக்கெடுப்பின் மூலம் இந்த விவரம் அறியப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு கடந்து செல்லும்போதும் அதற்கு முந்தைய ஆண்டை விட அதிக பறவைகள் கொல்லப்படுகின்றன. பறவைகளின் வலசைப் பாதையில் நியூயார்க் நகரம் ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலம் வலசைப் பறவைகளுக்கு மோசமானதாக உள் ளது என்று நியூயார்க் நகர பறவை கூட்ட மைப்பு (NYC Bird Alliance) கூறுகிறது. 2023 வசந்த காலத்தில் நிகழ்ந்ததை விட 2024 இல் அதிக விபத்துகள் நிகழ்ந்தன. “2024 அக்டோப ரில் அன்றாடம் சராசரியாக நடந்த 60-70 விபத்துகள் மூலம் காயமடைந்த பறவைகளை தன்னார்வலர்கள், மீட்பு அமைப்புகளுக்கு கொண்டுவந்து சேர்த்தனர். இலையுதிர் காலம் போல வசந்த காலத்தில் பறவைகள் வலசை செல்வ தில்லை. எல்லா பறவைகளும் இனச்சேர்க்கை, குஞ்சுகளைப் பொரிப்பது, பூச்சிகளைப் பின்பற்றுவதற்காக வலசை செல்கின்றன. வளர்ந்த மற்றும் புதிதாகப் பிறந்தவை வலசை முடிந்து திரும்பிச் செல்கின்றன. இதனால் வசந்தகாலத்தை விட இலையுதிர்காலத்தில் வலசையின் அளவு அதிகமாக உள்ளது. இப்பருவத்தில் இளம் பறவைகள் முதல்முறை யாக பயணிப்பதால் அதிகமான விபத்து களுக்கு உள்ளாகின்றன. சிறு பறவைகளுக்கு நியூயார்க் நகரம் பற்றியும் கட்டடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் பற்றியும் தெரியாது. குழந்தைப் பருவத்திலேயே நாம் கண்ணாடி யை அறிகிறோம். கடினமான பாடத்தை கற்கிறோம்” என்று வனப் பறவைகளுக்கான நிதியத்தின் (Wild Bird Fund) இயக்குநர் ரீட்டா மக்மஹான் (Rita McMahon) கூறுகிறார். உயரமான கட்டடங்களில் பொருத்தப்பட்டுள்ள பிரதிபலிக்கும் கண்ணாடிகளால் விபத்துகள் ஏற்படுவதால் வலசைப் பறவைகளுக்கு நியூ யார்க் உட்பட உலகில் உள்ள மாநகரங்கள் ஆபத்தானவையாக உள்ளன. பல அடுக்குகள் கொண்ட உயரமான கட்ட டங்கள் நிறைந்த நியூயார்க் நகரம் பறவை களின் அட்லாண்டிக் வலசைப் பாதையில் அமைந்துள்ளது. வடக்கில் ஆர்ட்டிக் முதல் தெற்கில் இலத்தீன் அமெரிக்கா வரை பாடும் பறவைகள் உட்பட பல இனப் பறவைகள் பெரும்பாலும் இரவில் வலசை செல்லும் பாதையில் இந்த நகரம் உள்ளது. இருளில் பறவைகள் கட்டட கண்ணாடியின் பிரகாசமான ஒளி மற்றும் பிரதிபலிக்கும் தன்மையால் கவரப்பட்டு மோதி விபத்துக்குள்ளாகின்றன. ஒரு பறவை வானம் அல்லது தாவ ரங்களின் பிரதிபலிப்பை கண்டு முழு வேகத்து டன் கட்டடக் கண்ணாடியின் மீது மோதி நினை விழக்கிறது. தரையை நோக்கி சரிந்து விழுகிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் ஆர்வலர்கள் பளபளக்கும் வானுயரக் கட்ட டங்களின் நடைபாதை வழியாக நடந்து சென்று உற்றுநோக்கி காயமடைந்த, உயிரி ழந்த பறவைகளை கண்டுபிடித்து பறவை நிதி யத்தின் காகிதப்பையில் வைத்து மீட்பு மையத்திற்கு எடுத்துச்செல்கின்றனர். “இது பற்றிய சரியான விவரங்கள் விஞ்ஞானி களுக்கு கிடைப்பதில்லை. விளக்குகளை அணைத்தால் பறவைகளை காப்பாற்றலாம் இலையுதிர்காலத்தின் ஆரம்பத்தில் விபத்துகளின் எண்ணிக்கை 20% அதிகமா கிறது. இம்மோதல்களால் ஒவ்வொரு ஆண்டும் நியூயார்க் நகரில் மட்டும் 250,000 பறவைகள் உயிரிழக்கின்றன என்றாலும் இது குறைந்த மதிப்பீடே” என்று கோர்னெல் (Cornell) பறவை யியல் ஆய்வகத்தின் வருகை விஞ்ஞானியும் பேர்டுகாஸ்ட் (BirdCast) அமைப்பின் நிறு வனருமான ஆண்ட்ரூ ஃபார்ன்ஸ்வொர்த் (Andrew Farnsworth) கூறுகிறார். “இவ்விபத்துகள் பற்றி உறுதியான விவரங்களை வெளியிடுவதில் பல சிர மங்கள் உள்ளன. மோதல்களின் போக்கில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. பாதிக்கப் படும் பறவைகள் பற்றிய எண்ணிக்கை ஆர்வ லர்கள் அளிக்கும் விவரங்களில் இருந்தே சேக ரிக்கப்படுகிறது. வலசை செல்லும் பறவைகள் மற்றும் உயிரிழப்பவற்றின் சராசரியை கணக்கிட்டு பாதிக்கப்படும் பறவைகளின் எண்ணிக்கை ஊகிக்கப்படுகிறது. வலசைப் பருவத்தில் வானில் பறக்கும் பறவைகளின் எண்ணிக்கையை துல்லிய மாகக் கணக்கிடுவது கடினம்” என்று நியூ யார்க் பறவை கூட்டமைப்பின் சமூக அறி வியல் மற்றும் மோதல் குறைப்புப் பிரிவின் மேலாளர் கேத்தரின் சென் (Katherine Chen) கூறுகிறார். 2024 இல் நியூயார்க் மன்ஹாட்டன் வழியாக மட்டும் 9.7 மில்லியன் பறவைகள் பறந்துசென்றன. இது 2023 இல் 9.5 மில்லியனாக இருந்தது. இந்த விவரம் இரவில் பறக்கும் பறவை கள் பற்றிய யு எஸ் வானிலை கண்கானிப்பு ரேடார் வசதி மூலம் பெறப்பட்டது. ஒவ்வொரு பருவத்திலும் வலசைப் பறவைகளின் எண் ணிக்கை வேறுபடுவது இயல்பு. “அமெரிக்கா வில் ஒவ்வொரு ஆண்டும் கட்டடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகளில் மோது வதால் மட்டும் சராசரியாக ஒரு பில்லிய னுக்கும் (100 கோடி) கூடுதலான பறவைகள் உயிரிழக்கின்றன. நிரந்தரமான, பெருமளவில் நிகழும் இந்த உயிரிழப்புகளை எளிய, பொது அறிவு செயல்கள் மூலம் தடுத்து நிறுத்தலாம். சில நகர கட்டிடங்கள் தாமாகவே முன்வந்து பறவைகளை குழப்பத்தில் ஆழ்த்தும் பிரகாச மான இரவு விளக்குகளை அணைக்கின்றன. வேறு சில கட்டிடங்கள் பறவைகளுக்கு பாது காப்பான கண்ணாடிகளை பொருத்தியுள்ளன. ஆனால் இது போன்ற தன்னார்வச் செயல்கள் மட்டும் போதாது. செயற்கை ஒளி, பாது காப்பற்ற கண்ணாடிகளால் இன்னமும் எண் ணற்ற பறவைகளின் நிலை ஆபத்தில் உள்ளது” என்று நியூயார்க் பறவை கூட்ட மைப்பின் செயல் இயக்குநர் ஜெஸ்ஸிகா வில்சன் (Jessica Wilson) கூறுகிறார். நியூயார்க் நகர நிர்வாகத்தால் மோதல்கள் மூலம் பறவைகள் உயிரிழப்பதை தடுக்க வகை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இது போல உலகில் உள்ள மற்ற மாநகரங்களும் சட்டம் இயற்றவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.