articles

img

ஜனநாயகப்படுத்தப்படும் பள்ளிக்கூடங்கள் - கவின் மலர்

எந்த ஓர் அமைப்பிலும் மக்களின் பங்கேற்பு இருக்கிறதெனில் அந்த அமைப்பு ஜனநாய கப்பூர்வமாக செயல்படமுடியும். தமிழ்நாட்டி லுள்ள அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மேலும் வலுப் படுத்தும் முயற்சிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதற்காக மார்ச் 20 ஆம் தேதி ஒரே நாளில் பெற்றோருக்கான கூட்டம் அனைத்துப் பள்ளிக ளிலும் நடந்தது. ஏறத்தாழ 52,00,000 மாணவர்களின் பெற்றோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 23,00,000 பெற்றோர்கள் அன்று கூடினார்கள். தமிழக பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் இப்படி முன்னெப் போதும் நிகழ்ந்ததில்லை. பள்ளி மேலாண்மைக் குழு என்றால் என்ன, அதில் ஏன் இணையவேண்டும் என்பது குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே பெற்றோர்களுக் கான இந்தக் கூட்டம் நடைபெற்றது. விரைவில் பள்ளி மேலாண்மைக் குழுவின் உறுப்பினர்களை தேர்ந் தெடுக்கும் பணி நடக்கவிருக்கிறது. புதிய பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்படும்.

பள்ளி மேலாண்மைக் குழு என்றால் என்ன?

பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்யவும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி ஏற்படுத்தப்பட்ட குழுவே பள்ளி மேலாண்மைக் குழு. பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் போன்றோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குழு மாற்றி அமைக்கப்படும். பள்ளி அமைந்திருக்கும் ஊர் மக்களின் பங்களிப்போடு, பள்ளியின் தேவைகளை நிறைவேற்றி குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை இக்குழுவின் உறுப்பினர்கள் உறுதி செய்வார்கள். மாதமொரு முறை குழுவின் கூட்டம் கூட்டப்படவேண்டும். தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் சிறப்புக் கூட்டமாகவும் நடத்தலாம். பெற்றோர்- ஆசிரியர் கழகத்திற்கும் பள்ளி மேலாண்மைக் குழுவுக்கும் வேறுபாடு உண்டு. பெற்றோர்- ஆசிரியர் கழகம் என்பது பள்ளிகளின் வளர்ச்சிக்காக பள்ளி, மாவட்ட, மாநில அளவில் உரு வாக்கப்பட்டுள்ள ஒரு ஜனநாயக அமைப்பு. பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுவார்கள். பள்ளி மேலாண்மைக் குழு என்பது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி ஒட்டுமொத்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக இயங்கும் குழு.

யாரெல்லாம் உறுப்பினராகலாம்?

  •  குழுவின் தலைவராக பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் பெற்றோர்தான் இருக்கவேண்டும்.
  •  அப்பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தையின் பெற்றோர், அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோராக உள்ள தூய்மைப் பணியாளர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும்  திருநங்கைகள் அல்லது எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் பெற்றோர்ஆகியோரில் ஒருவரே துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.
  •  தலைமையாசிரியர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.
  •  ஆசிரியர் ஒருவர் உறுப்பினராக இருப்பார்.
  •  எஸ்.சி, எஸ்.டி, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர் 12 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். (12- உறுப்பினர்களில் பெண்கள் 7 பேர்  இருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது)
  •  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் உறுப்பினர்கள் 2 பேர் (பெண்களுக்கே முன்னுரிமை).
  •  கல்வி ஆர்வலர் / அரசு சாரா அமைப்பினர்/ ஓய்வு பெற்ற ஆசிரியர் – இவர்களில் யாரேனும் ஒருவர்.
  •  சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும்பெற்றோர் ஒருவர்.இப்படி மொத்தம் 20 உறுப்பினர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருப்பார்கள்.

பள்ளி மேலாண்மைக்  குழுவின் பணிகள்

பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர வைப்பது; பள்ளியில் இருந்து இடையில் நின்றுவிட்ட குழந்தைகளின் பெற்றோரிடம் பேசி மீண்டும் குழந்தை களை கல்வி கற்க வைப்பது; மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான வசதிகள் பள்ளிகளில் இருப்பதை உறுதி செய்வது; (அனைத்து வகுப்பறைகளிலும் கட்டி டங்களிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்தளம், சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவி, கண்ணாடி, பள்ளிக்கு  வந்து செல்ல போக்குவரத்து பயணப்படி மற்றும் அவரது பாதுகாவலருக்கு பயணப்படி, சிறப்புப் பயிற்று நர்கள் மூலம் சிறப்புப்பயிற்சி); சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து அவர்க ளை பள்ளியில் சேர வைக்கவேண்டும்; மாணவர்க ளின் கற்றல் திறனை கவனித்து அதற்கேற்ற கற்றல் சூழல் பள்ளியில் இருப்பதை உறுதி செய்வது;

பள்ளி யின் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருத்தல்; மதிய உணவுத் திட்டம் சீராக செயல்படுவதை உறுதி செய்து, மாணவர்களுக்கு சுவையான தரமான உணவு கிடைக்க வழிவகை செய்வது (சத்துணவு மையத்தில் உள்ள பாத்திரங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்தல், காய்கறிகள், உணவுப் பொருட்கள், சமைக்கும் இடம் சுத்தமாக இருத்தலை உறுதி செய்தல்). இலவச கட்டாயக் கல்வி பெறுவதை யாரேனும் தடுத்தாலோ, குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுத்தாலோ, அவர்களை உடலளவில் மனதளவில் துன்புறுத்தினாலோ, குழந்தைகளிடையே பாகுபாடு காட்டினாலோ, குழந்தைகளின் உரிமை களை மீறினாலோ அதை உடனடியாக உள்ளூர் அதி கார மையத்தின் (கிராமப் பஞ்சாயத்து/நகராட்சி/மாநகராட்சி)கவனத்திற்குக் கொண்டு செல்வது; ஒவ்வோர் ஆண்டும் பள்ளியில் வரவு செலவுக் கணக்கு விவரங்களை அறிக்கை தயார் செய்து குழுவின் தலை வர், துணைத் தலைவர், தலைமையாசிரியர் கையெ ழுத்துடன் உள்ளூர் அதிகார மையத்திடமும் உரிய துறைகளிடமும் ஒப்படைப்பது; அரசிடமிருந்து இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ் ஏதே னும் நிதியை குழு பெற்றிருந்தால், அதற்கென தனி யாக வங்கிக் கணக்கைத் தொடங்கி நிர்வகித்து, இந்த  நிதிக் கணக்கை ஆண்டுத் தணிக்கைக்கு உட்படுத்தி அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் பார்வை க்கு வைப்பது; அரசிடமிருந்து கிடைக்கும் நிதி, பள்ளி யில் முறையாக செலவு செய்யப்படுகிறதா என உறுதி செய்வது; கிராம சபைக் கூட்டங்களில் பங்குகொண்டு பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கல்வி சார்ந்த தீர்மானங்கள் நிறைவேறுவதை உறுதி செய்வது. 

பள்ளியின் கட்டமைப்பு வசதிகளைப் பெறுவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் குழு தன் கடமையை உறுதி செய்வது; தரமான உணவு, குடிநீர், கழிப் பறை மற்றும் சுற்றுச்சூழல் மாணவர்களுக்குக் கிடைக்க ஆவன செய்வது; பள்ளி வளாகங்கள் முழு மையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப் படுவதை பார்வையிடுதல், அதற்கு உதவி செய்தல், முகக் கவசம் அணிவதையும் சமூக இடைவெளி கடைப் பிடிக்கப்படுவதையும் உறுதி செய்தல் போன்றவை கோவிட் 19 நோய்த் தொற்றுக் காலங்களில் குழுவின் பணிகள். குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்பு ணர்வைப் பெறுதல்; விழிப்புணர்வை அனைத்து பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்துதல்; குழந்தைகள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு பள்ளியில் ஏற்பாடுகள் செய்தல்; பாலின சமத்து வத்தை உறுதி செய்வது, அதாவது குழந்தைகளை சமநோக்குடன் கையாளுதல்; பள்ளி நிகழ்வுகளில் சம வாய்ப்பு வழங்குதல்; அனைத்துக் குழந்தைக ளையும் ஆண்/பெண்/பாலியல் சிறுபான்மையினர் வேறுபாடின்றி பள்ளியில் சேர்த்தல் மற்றும் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்தல்.

- இத்தகைய பணிகளை பள்ளி மேலாண்மைக் குழு செய்யவேண்டும். இக்குழுக்களில் பங்கேற்ப தற்கு பெற்றோர்கள் ஆர்வமுடன் முன்வரவேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இக்குழுவில் பங்கேற்பதன் மூலம் பெண்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். துணைத் தலைவராக மாற்றுத் திறனாளி மாணவரின் பெற்றோரே இருக்கவேண்டும். அப்படி எவரும் இல்லையெனில் பள்ளியில் பயிலும் குழந்தை களின் பெற்றோரில் தூய்மைப் பணியாளர் அல்லது எய்ட்ஸ் நோயாளி அல்லது திருநங்கை இருந்தால் அவரே துணைத் தலைவராக இருப்பார் என்கிற வரையறை வரவேற்கத்தக்கது. அதுபோலவே எஸ்.சி, எஸ்.டி; மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைக ளின் பெற்றோர் 12 பேர் உறுப்பினர்களாக இருப்பார் கள். அந்த 12 பேர்களில் பெண்கள் 7 பேர் இருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதும் இதன் சிறப்பம் சம். அரசுப் பள்ளிகளில் பயிலும் விளிம்புநிலை மாண வர்களின் பெற்றோர் பலர் இதில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண் மைக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கு மக்களின் ஜனநாய கப்பூர்வமான பங்களிப்பும் இருக்கவேண்டும் என்ப தற்காகவே இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009ன் படி இந்தக் குழுக்களை சட்டப்பூர்வ மாக மாற்றுவதற்காக மறுகட்டமைப்பு செய்கிறது தமிழ்நாடு அரசு. இந்தக் குழுக்களில் பங்கேற்று அவற்றை மேலும் ஜனநாயகப்படுத்தும் முயற்சியில் பெற்றோர் இணைய வேண்டியது அவசியம்.