articles

img

வாடிக்கையாளர்களை சூறையாடும் ஜியோ, ஏர்டெல் -பி.அபிமன்யு

ஜியோவும் ஏர்டெல்லும் தங்கள் கட்டணங்க ளைச் செங்குத்தாக உயர்த்தியிருக்கின்றன. ஜியோ தன்னுடைய கட்டணத்தை 12 விழுக் காட்டிலிருந்து 25 விழுக்காடாகவும், ஏர்டெல் தன்  கட்டணத்தை 11 விழுக்காட்டிலிருந்து 21 விழுக்கா டாகவும் உயர்த்தி இருக்கின்றன. இந்தக் கட்டண உயர்வால் இந்நிறுவனங்கள் அள்ளப் போகிற லாபம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் உயரும் என்று தெரிகிறது. மறுபக்கத்தில் இந்தக் கட்டண உயர்வுகள் குறைந்த ஊதியம் பெறும் மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாக ஏற்கனவே விண்ணை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களைக் கடுமையாகப் பாதித்திடும்.

முற்றிலும் அநியாயமானது

இந்த தொலைத் தொடர்பு கம்பெனிகள் கட்ட ணங்களை உயர்த்தியதை நியாயப்படுத்தி இருக்கின்றன. எனினும் செங்குத்தாக கட்டணங்க ளை உயர்த்தியதற்கு எந்தக் காரணமும் கிடையாது. இவ்விரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே கொள்ளை லாபம் ஈட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. ஜியோ, 2023-24ஆவது நிதியாண்டில் 20,607 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருக்கிறது. ஏர்டெல் இதே காலத்தில் 7,467 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி இருக்கி றது. எனவே, சாமானிய மக்களைக் கொள்ளைய டிக்கும் விதத்தில் கட்டணங்களை செங்குத்தாக உயர்த்தியிருப்பது முற்றிலும் அநியாயமானது.

தனியாருக்கு  சேவகம் செய்யும் ‘டிராய்’

டெலிகாம் (தொலைத்தொடர்புத்) துறையை ஒழுங்குபடுத்திட, ‘டிராய்’ எனப்படும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (TRAI-Telecom Regulatory Authority of India) என்ற அமைப்பு இருக்கிறது. இதன் முக்கியக் கடமை, தனியார் டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கை யாளர்களிடம் கொள்ளை லாபம் ஈட்டாமல் தடுத்தி டுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். ஆனால், நடைமுறையில் இது, தனியார் டெலிகாம் நிறுவனங்களின் நலன்களுக்கே, அவற்றின் லாபங்க ளுக்கு மட்டுமே  சேவகம் செய்கிறது. 

ஜியோ தன் வணிகத்தை 2016இல் தொடங்கிய போது, ‘டிராய்’ கூறியிருந்த அனைத்து விதிகளை யும் மீறியது. ஆயினும், அது குறித்தெல்லாம் எதுவும்  கேட்காமல் ‘டிராய்’ கள்ள மவுனம் சாதித்தது. அந்த  சமயத்தில் டெலிகாம் துறையில் செயலாளராக இருந்த ஜே.எஸ். தீபக் என்பவர், ஜியோ விதிகளை யெல்லாம் மீறி செயல்பட்டுக்கொண்டிருப்பதற்குக் கடும் ஆட்சேபணைகளை எழுப்பி, அதன்மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று ‘டிராய்’க்குக் கடிதம் எழுதினார். ஆயினும் டிராய் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, ஜே.எஸ்.தீபக் அவர்களை இரவோடிரவாக தொலைத் தொடர்புத் துறையிலிருந்து தூக்கி எறிந்தது.

பிஎஸ்என்எஸ்-ஐ  வஞ்சித்த மோடி அரசு

மேலே கூறப்பட்டுள்ள சூழ்நிலைகளின்கீழ், டெலி காம் துறையை உண்மையாகவே  ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக பிஎஸ்என்எல் மட்டுமே செயல்பட்டுக் கொண்டு இருந்திருக்கிறது. இதர தனியார் நிறு வனங்களுக்கு பிஎஸ்என்எல் கடும் போட்டியை  அளித்து வந்ததன் காரணமாகவே, கட்டணங்களை தங்கள் விருப்பப்படி உயர்த்த முடியாமல் தடுக்கப் பட்டு வந்தன.  எனினும், இன்று வரையிலும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றைகளை அமல்படுத்துவதற்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி அளிக்காததன் காரணமாக, நிலைமைகள் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டன. இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தால் ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களுடன் சமமாக நின்று போட்டி போட முடியாதவாறு அது ஊனப்படுத்தப்பட்டிருக்கிறது.

1.8 கோடி வாடிக்கையாளர்களை இழந்த பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இதுவரையிலும் 4ஜி, 5ஜி அலைக்கற்றைகள் அளிக்கப்படாததன் காரண மாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு உயர்வேக  சேவையை அதனால் அளிக்க முடியவில்லை. இத னால் வாடிக்கையாளர்கள் வேறு வழியின்றி பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பெரிய அளவில் கைகழுவிவிட்டு, ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற வற்றிற்கு மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கி றார்கள். ‘டிராய்’ வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2023-24இல் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனம் 1.8 கோடி வாடிக்கையாளர்களை இழந்துவிட்டது. 2024 மார்ச்சில் மட்டும் அது 23.54 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதே காலத்தில் ஜியோ நிறுவ னத்திற்கு புதிதாக 21.45 லட்சம் வாடிக்கையா ளர்களும், ஏர்டெல் நிறுவனத்துக்கு 17.5 லட்சம் வாடிக்கையாளர்களும் கிடைத்திருக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான், மேலும் மேலும் கொள் ளையடிக்க வாய்ப்பு என்ற நோக்குடன் இவ்விரு நிறுவனங்களும் கட்டணங்களை செங்குத்தாக உயர்த்தியுள்ளன.

மோடி அரசின் அராஜகம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் இன்றளவும் ஏன் 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றைகளை அளிக்க முடிய வில்லை? ஏனெனில் மோடி அரசாங்கம் கீழ்க்கண்ட தடைக்கற்களை உருவாக்கி இருப்பதுதான் காரணமாகும்.

H 2019இல் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போதைய 3ஜி சேவையை வழங்கும் நிலையிலிருந்து, 4ஜிசேவையை அளிக்கக்கூடிய விதத்தில் மேம்படுத்திக்கொள்ள மோடி அரசாங்கத்தால் அனுமதிக்கப்படவில்லை.

H 2020இல் மீண்டும் பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோமற்றும் ஏர்டெல் நிறுவனத்திற்கு இணையாகபோட்டி போடக்கூடிய விதத்தில், 4ஜி அலைக்கற்றைகளை அளிப்பதற்கான உபகரணங்களை சர்வதேச அளவில் இயங்கும் விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவதற்கும் மோடி அரசாங்கத்தால் அனுமதிக்கப்படவில்லை. மாறாக அது, இந்தியாவில் உற்பத்தி செய்பவர்களிடமிருந்து மட்டுமே 4ஜி உபகரணங்களைப் பெற கட்டாயப்படுத்தப்பட்டது.     

H 2023 மே மாதத்தில், ஒன்றிய அரசாங்கத்தின் தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த அஸ்வினிவைஷ்ணவ், ஒருசில வாரங்களில் பிஎஸ்என்எல்நிறுவனம் தன் 4ஜி சேவையை அமல்படுத்திடும் என்று பீற்றிக்கொண்டார். மேலும் அவர் அதுநவம்பர்/டிசம்பர் வாக்கில் 5ஜி சேவையை அளிக்கக்கூடிய விதத்தில் உயர்த்தப்படும் என்றும் கூறினார். எனினும், இன்றுவரை பிஎஸ்என்எல் நிறுவனத்தால் 4ஜி சேவையை அளிக்கவிடவில்லை.

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு தான், பிஎஸ்என்எல் தன்னுடைய வாடிக்கையாளர்க ளுக்கு 4ஜி சேவையை அளித்திட ‘வோடாபோன் ஐடியா’வின் வலைப்பின்னலைப் பயன்படுத்திக் கொள்ள தற்காலிகமாக அனுமதித்திட வேண்டும் என்று  பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் பிஎஸ் என்எல்இயு (BSNLEU) கோரியிருக்கிறது. வோடா போன் ஐடியாவில் மாபெரும் பங்குதாரராகஇருக்கும் அரசாங்கம் இதனை சரியாக அமல்படுத்திட முடியும். ஆனாலும், இது செய்யப்படவில்லை. இந்தக் கோரிக்கையை அமல்படுத்தக்கோரி, பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் நாடு முழுதும் ஆர்ப்பாட் டங்கள் நடத்திட திட்டமிட்டிருக்கிறது.

ஜியோ நிறுவனமும், ஏர்டெல் நிறுவனமும் செங்குத்தாக கட்டணங்களை உயர்த்தியிருக்கும் பின்னணியில், பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் மீண்டும் ஒருமுறை, ஒன்றிய அரசாங்கத்தின் தகவல் தொடர்பு அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியி ருக்கிறது. அதில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை உட னடியாக அமல்படுத்திடவும், அதனை 5ஜி சேவைக்கு மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கை களை உடனடியாக எடுத்திட வேண்டும் என்று கோரி யிருக்கிறது. எனவே, 4ஜி மற்றும் 5ஜி சேவைகளைத் தொடங்குவதன் மூலமே பிஎஸ்என்எல் நிறுவனம் சாமானிய மக்களுக்கு, கட்டுபடியாகக்கூடிய கட்ட ணத்தில், அதிவேக அலைக்கற்றை சேவைகளை அளித்திட முடியும்.

கட்டுரையாளர் : பிஎஸ்என்எல் 
ஊழியர் சங்க பொதுச் செயலாளர்.  
(பீப்பிள்ஸ் டெமாக்ரசி - 7.7.24) 
தமிழில் : ச.வீரமணி


 

;