அதிமுக ஆட்சியின் மூச்சுத் திணறும் காலம் முடிந்து முன்னேற்றம் துளிர்விட்டு வருகிறது. அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை துவங்கவிருப்பதன் அடையாளமாக அனைத்து அரசுக் கல்லூரி களிலும் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இருபது புதிய கல்லூரிகள் துவக்கப் பட்டுள்ளன. இரண்டு லட்சத்திற்கும்மேல் இளங் கலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்துள் ளனர் என்ற மகிழ்ச்சிகரமான தகவலோடு நடப்பு கல்வியாண்டு துவங்கியிருக்கிறது. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நிறைவடையும் நிலையில் கல்லூரி வளாகங்கள் பழைய, புதிய மாண வர்களால் களைகட்டத் துவங்கியுள்ளன. அரசுக்கல்லூரிகளில் பயிலும் கல்வியும் கல்வியியல் வாழ்க்கையும் காவியமானது என்பதில் சந்தேகமில்லை.
மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர் கள், கல்லூரி கட்டிடங்கள் மரங்கள் அடர்ந்த பரந்து விரிந்த வளாகங்கள், மைதானங்கள், விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், போராட்டங்கள், தவறுகள், வெற்றிகள், பிரியும் நாள் கண்ணீர் என பின்னாட்களில் மனதிற்குள் அசைபோடத் தோன்றும் அனுபவங்கள் அரசுக் கல்லூரிக ளில் அன்றி தனியார் கல்லூரிகளில் நிச்சய மாய் கிடைக்க முடியாதவை. பன்முகத் தன்மை கொண்ட மதச்சார்பற்ற நமது நாட்டிற்கு தேவையான சிறந்த எதிர்காலத் திற்கு அடித்தளமிடுபவை அரசுக்கல்லூரி கள் தான். அதில் பணிபுரியும் ஆசிரியர்க ளும் அவர்களது பணியும் தொழில் அல்ல, சேவை என்றுதான் கூறவேண்டும். கல்லூரி ஆசிரியர்கள் உள்பட அனைவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல் முன்னதாக மாணவர் சேர்க்கை துவங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்பட கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் நீண்ட காலமாக சில அடிப்படையான கோரிக்கை களும் ஆதங்கங்களும் மனதை அழுத்திக் கொண்டிருக்கின்றன.
2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 957 கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டனர். 2016ஆம் ஆண்டு இவர்கள் அனைவரின் பணிகள் பணி வரன்முறை (Service Regulari sation) செய்யப்பட்டிருக்க வேண்டும். 2017 ஆம் ஆண்டு அவர்களது தகுதி காண் காலம் (Probation Period) முடிந்த தாக அறிவிக்கப்பட்டு 2019-2020 ஆண்டில் அவர்களுக்கு பணி மேம்பாடு (Career Advancement) வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவருடைய பணிகள் வரன்முறை செய்யப்படாததன் காரணத்தால் அவர்களுக்கு உரிய காலத்தில் கிடைக்க வேண்டிய பணி மேம் பாடு மற்றும் தொடர்ச்சியான நிறுவன தகுதி நிலை பயன்கள் கிடைக்கவில்லை. பணி வரன்முறை செய்யப்படாமல் நீண்ட காலமாக தற்காலிக நிலையிலேயே பணிபுரிவது ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மனதளவில் நிம்மதி யின்மை மற்றும் மன அழுத்தத்தையும் உருவாக்கும். மேலும் அடிப்படையான இக்குறைகள் மனச்சோர்வை உருவாக்கி அவர்களது கற்பிக்கும் திறமையைப் பாதிக்கும் என்பதை பணி இயல் கோட்பாடு கள் தெரிந்த அனைவரும் நன்கறிவர். இதுபற்றி தமிழ்நாடு கல்லூரி ஆசிரி யர்கள் கழகத்தின் மாநில நிர்வாகிகளில் ஒருவரான பேராசிரியர் சோ.சுரேஷ் கூறிய தாவது:
2006 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளில் அப்போ தைய திமுக ஆட்சியில் 3500 கல்லூரி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப் பட்டனர். அவர்கள் அனைவருக்கும் விதி களின்படி உரிய காலத்தில் திமுக ஆட்சியில் பணிவரன்முறை செய்யப்பட்டுவிட்டது. 2011 இல் இருந்து 2021-வரை 10 ஆண்டுகளில் அ தி மு க ஆட்சியில் 957 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டனர். இரு ஆட்சிகளின் ஒப்பீட்டளவில் இந்த எண்ணிக்கை குறைவே. இவர்களது பணி யைகூட உரிய காலத்தில் அதிமுக ஆட்சி யில் பணிவரன்முறை செய்யவில்லை. தொடர்ச்சியாக அப்போதைய ஆட்சியில் அமைச்சரிடமும் உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் கடிதங்கள் மூலம் முறை யிட்டும் இதை நிறைவேற்றாமல் ஆட்சியிலி ருந்து அதிமுக நீங்கியது. இந்தக் குறையை, கோரிக்கையை இப்போது அரசு நிறை வேற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்று பேரா சோ. சுரேஷ் கூறினார். உயர் கல்வித்துறையில் அதிமுக அரசு காட்டிய அக்கறையின்மைக்கு இதுவும் ஒரு உதாரணமாகும். இந்த கல்வியாண்டில் கல்லூரிக்கல்வியின் கற்பித்தல் திறனை மேலும் மேம்படுத்த அடிப்படையான இ க்குறைபாட்டை நீக்குவதற்கும் வெகு விரைவில் 957 ஆசிரியர்களது பணி வரன் முறைப்படுத்தப்படுவதற்கும் இனியும் தாம தமின்றி அரசும் உயர்கல்வித்துறையும் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். இதையே அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
புதிய கல்லூரிகளில் ஆசிரியர் நியமனம்
பதவியேற்ற முதலாண்டிலேயே இருபது புதிய கலைக் கல்லூரிகளை திமுக அரசு துவக்கியது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கல்வி யில் அரசின் அக்கறையை இது புலப்படுத்து கிறது. ஆனால் இந்த இருபது கல்லூரிகளில் தலா நான்கு ஆசிரியர்கள் மட்டுமே நியமிக் கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறு கின்றன. இப்புதிய கல்லூரிகளுக்கு பிற கல்லூரி களில் இருந்து கூடுதல் பொறுப்பாக (Deputation) மூத்த இணைப் பேராசிரியர் கள், துறைத் தலைவர்கள் பொறுப்பு முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான கல்லூரிகளில் இவர்கள் முதல்வர் பொறுப்பையும் துறைத் தலைமை பொறுப்பையும் ஆசிரியர் பொறுப்பையும் ஒருசேர கவனிக்கவேண்டிய சிக்கலான சிரமமான நிலை உள்ளது. இம்மோசமான நிலையை களைய இக்கல்லூரிகளில் கூடுதல் ஆசிரியர் நியமனம் உடனடியாக செய்யப்பட வேண்டும். முழுநேர முதல்வர்க ளையும் துறைத் தலைவர்களையும் நியமிக்க வேண்டும். கல்லூரிகளுக்குத் தேவையான சோதனை கூடம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமானத் தேவைகளை தாமதமின்றி உருவாக்க கூடுதல் நிதி ஒதுக்கீடுகளை மாநில அரசு செய்ய வேண்டும். இதற்கான அறிவிப்புகள் வெகு விரைவில் வரும் என நம்பிக்கையோடு அனைவரும் எதிர்பார்க் கின்றனர்.