articles

img

ஏங்கெல்ஸ் 200 : பேராசானை கொண்டாடுவோம்... சீத்தாராம் யெச்சூரி...

இன்று தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் அவர்களின் 200ஆவது ஆண்டு தினம் ஆகும். இயல்பான சூழ்நிலைகளாக இருப்பின், கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், அதனையொட்டி அறிவிக்கப்பட்ட சமூக முடக்கத்தின் காரணமாகவும்,  அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களும், கட்டுப்பாடுகளும் இல்லாதிருக்கும் பட்சத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த நிகழ்வை,  2018-19இல் மார்க்ஸ் 200ஆவது ஆண்டு தினத்தை அனுசரித்தது போல அப்படிப் பொருத்தமான முறையில் கொண்டாடி இருக்கும்.

மார்க்சிஸ்ட் உலகக் கண்ணோட்டத்தின் பரிணாம  வளர்ச்சியிலும், அதன் விரிவாக்கத்திலும், இந்தப்பிரபஞ்சத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் மற்றும் மனித சமூகம் குறித்தும், அதன் பரிணாம
வளர்ச்சி குறித்தும், இயக்கவியலின் கண்டுபிடிப்புகளையும், இயக்கவியல் முறையையும் வெளிக்கொணர்ந்து புரிந்து கொள்வதற்கு வளமான ஆதாரங்களை முன்வைத்ததிலும், ஏங்கெல்சின் தத்துவார்த்த பங்களிப்புகள் மகத்தானவகையில் குறிப்பிடத்தக்கவைகளாகும். அவருடைய வாழ்வையும் பணியையும் கொண்டாடுவது என்பது, அவருடைய பங்களிப்புகள் அனைத்தையும் மீண்டும் மறுஆய்வுக்கு உட்படுத்துவதும், மனிதனின் சிந்தனை, அறிவு மற்றும் மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள மகத்தான தாக்கத்தையும் இயல்பாகவே வெளிக்கொணர்ந்திடும்.

இவ்வாறு அவருடைய பங்களிப்புகள் அனைத்தையும் மறுஆய்வுக்கு உட்படுத்துவது என்பது ஒரு மாபெரும் பணியாகும். அவை அனைத்தையும் உள்ளடக்கிவிடமுடியாது.  கட்சி, தனக்கிருக்கிற வரையறைகளுடன், இந்த அம்சங்கள் அனைத்திலும் ஓராண்டு காலத்திற்கு தன்னுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடரும்.எனவே, இப்போது ஒரு முக்கிய அம்சத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். காரல் மார்க்சின் பெயரில் கூறப்படும் மார்க்சியம், தத்துவத்தையும் நடைமுறையையும் இயக்கவியல் ரீதியாக இணைத்து. இவ்வாறு மார்க்சியத் தத்துவத்தை வளர்த்தெடுத்ததில், ஏங்கெல்ஸ் ஆற்றிய பங்களிப்புகள் இரண்டாம் நிலை வகித்ததுபோல்  கருதப்படுகிறது. இது மிகவும் பிழையான ஒரு முடிவாகும். இதற்கு மாறாக, ஏங்கெல்ஸ், உலகின் பொருளியல் மற்றும் சமூகத்தின் அனைத்துஅம்சங்கள் மீதும் தன் பணிகள் மூலமாக இயக்கவியலை வெளிக்கொணர்ந்திருப்ப தை நாம் நன்கு காண முடியும். இன்றைய மனிதகுல நாகரிக முன்னேற்றம் மற்றும் புதிய அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் நடப்புப் பின்னணியில் இவற்றை நாம் ஒவ்வொருவரும்  முறையாக மறுபடியும் படித்திட வேண்டும்.

மார்க்சியத்தைக் கூட்டாகவே உருவாக்கினார்கள்
பிரடெரிக் ஏங்கெல்ஸ், அடிக்கடி, உலகத்தின் முதல் மார்க்சிஸ்ட் என்று குறிப்பிடப்படுகிறார். அவரும் தனக்கேயுரிய இயல்பான தன்னடக்கத்துடன், இந்த அந்தஸ்தை பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டிருந்திருக்கலாம். ஒருசமயம் அவர் கூறினார்: “மார்க்ஸ் என்ன சாதித்தாரோ அதனை, நான் அடைந்திருக்க முடியாது. மார்க்ஸ் நம்மையெல்லாம்விட உயரத்தில் நின்றார், விஷயங்களை மேலும் கூர்மையாகப் பார்த்தார், நம்மையெல்லாம்விட அவர் அவற்றை மிகவும் விரிவான அளவிலும், வேகமாகவும் பார்க்கும் திறனைப் பெற்றிருந்தார். மார்க்ஸ் ஒரு மாமேதை. நாமெல்லாம் மிகச் சிறந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் இருக்கிறவர்கள். அவரில்லையேல், இந்தக் கோட்பாடு இன்றுள்ள நிலையிலிருந்து வெகுதொலைவிலேயே இருந்திருக்கும். எனவேதான், இது மிகச் சரியானமுறையில் அவர் பெயரைத் தாங்கி இருக்கிறது.”

ஏங்கெல்ஸ் அவர்களால் மார்க்ஸ் இவ்வாறு பாராட்டப்பட்டிருந்த போதிலும் கூட, ஏங்கெல்சின் மார்க்ஸ் குறித்த மதிப்பீடும், மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் சித்தாந்த அடித்தளங்களை வெளிக்கொணர்ந்தில் மார்க்சுக்கு சிறப்பு    இடத்தைக் கொடுத்திருப்பதும், வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியதும் அவசியமாகும்.

மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கூட்டுச் செயல்பாடு
மார்க்ஸ், ‘ரெய்னிஷ் செய்துங்’ (‘Rheinsche Zeitung’) என்னும் இதழுக்கு ஆசிரியராக இருந்து செயல்பட்டுக்கொண்டிருந்தார்.  பிற்போக்குவாத பிரஷ்ய அரசாங்கத்தால், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு சக்திகளுக்கும், அரசாங்கத்தைத் தூக்கிப்பிடித்த 

==சீத்தாராம் யெச்சூரி==
பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

===தொடர்ச்சி 4ம் பக்கம்===