1987ஆம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி தோழர் பி.ராமமூர்த்தி கால மானார். டிசம்பர் 16ஆம் தேதி அவருடைய இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ஓட்டேரி மைதானத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பேசிய தோழர் பி.ராமமூர்த்தியின் உற்ற தோழர் பி.டி.ரணதிவே தனது இரங்கல் உரையில் இப்படி முடித்தார்: “இத்தோடு நான் உன்னைப்பற்றிச் சொல்வதை நிறுத்திக்கொள்கிறேன். அதன் பொருள் உன்னைப் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை என அர்த்தமல்ல. ஆனால் அதைச் சொல்வதற்கு என்னிடம் போதுமான வார்த்தைகள் இல்லை”.
மகாகவி காளிதாசனின் கவிதைகளிலிருந்து இந்த மேற்கோளை தோழர் பி.டி.ஆர். எடுத்துக்கூறினார். தோழர் பி.ராமமூர்த்தி அவர்களைப் பற்றி எவ்வளவு எழுதினாலும், எவ்வளவு பேசினாலும் அது முழுமை பெறாது. அந்தளவிற்கு நீண்ட நெடிய புரட்சிகர வாழ்க்கைக்கு அவர் சொந்தக்காரர்.
தோழர் பி.ராமமூர்த்தி 60 ஆண்டுகளுக்கும் மேலாக தூய பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். இந்தியா வின் விடுதலைக்காகவும், உழைப்பாளி மக்களின் மேம்பாட்டிற்காகவும், விவசாயிகளுக்காகவும், தொழி லாளர்களுக்காகவும், பல்வேறு போராட்டக்களங்க ளுக்கு தலைமை தாங்கிய கள நாயகன்.
கங்கை நதியில்...
அவரது மாணவப் பருவத்தில் காசியில் படித்துக் கொண்டிருந்தபோது சைமன் கமிஷனே திரும்பிப்போ என்ற போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது. காசி யில் படித்துக்கொண்டிருந்த பி.ராமமூர்த்தி கங்கை நதியில் படகில் சென்று சைமன் கமிஷனைச் சேர்ந்த வர்களுக்கு கருப்புக்கொடி காட்டினார் என்பது வரலாறு. உண்மையில் மாணவப்பருவத்தில் உயர்த்திப் பிடித்த புரட்சிக் கொடியை அவர் ஒரு போதும் தாழ விட்டதேயில்லை.
தடையைத் தகர்த்து வெண்மணி மண்ணில்...
1969-ஆம் ஆண்டு உலகத்தையே அதிர்ச்சியில் உறையச் செய்த வெண்மணி படுகொலை நடந்தது. அந்தக் கிராமத்திற்குள் நுழைய போலீசார் தடை விதித்தபோது தடைகளைத் தகர்த்து தோழர் பி.ஆர். வெண்மணிக்கு சென்று மக்களைச் சந்தித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோடு இணைந்து அங்கு நடந்த கொடுமையை உலகின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். அப்போது முதல்வ ராக இருந்த அண்ணாவோடு பேச்சுவார்த்தை நடத்தி யதன் அடிப்படையில்தான் கணபதியாபிள்ளை கமிஷன் அமைக்கப்பட்டு விவசாயத் தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச கூலி என்பது உறுதி செய்யப் பட்டது.
பஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலை களைச் சேர்ந்த தொழிலாளர்களை அணிதிரட்டும் வல்லமை மட்டுமல்ல, ஒவ்வொரு தொழில் குறித்தும் மிக நுணுக்கமாக அவர் அறிந்து வைத்திருப்பார். உதார ணமாக, பஞ்சாலையில் ஒரு தொழிலாளி பணியாற்று கிறார் என்று சொன்னால், அவர் தனது பணி நேரத் தில் எத்தனை கிலோ மீட்டர் ஆலைக்குள் நடக்கிறார் என்பது துவங்கி, ஒரு ஆலையின் உற்பத்தித் திறன் என்ன? அதன் மூலம் முதலாளிக்குக் கிடைக்கும் லாபம் என்ன? என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு சாதகமான முடிவினை எட்டச் செய்வார்.
வழக்கு மன்றங்களில்
தோழர் பி.ராமமூர்த்தி மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் அவரே நேரடியாக வழக்காடுவார். அது மட்டுமின்றி பல்வேறு தொழில் தாவாக்களின் நீதி மன்றத்தில் அவர் வாதங்களை எடுத்து வைக்கும் விதம் வழக்கறிஞர்களையே வியக்க வைப்பதாக இருக்கும்.
உதாரணமாக ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டது, தொ டர்பான வழக்கில் தோழர். பி.ராமமூர்த்தி களத்தில் போராடியதோடு வழக்காடு மன்றத்திலும் போராடி அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்தார்.ஜனதா ஆட்சிக்காலத்தில் திருச்சி பெல் தொழிற்
சாலையை பன்னாட்டு நிறுவனமான சீமன்ஸ் நிறுவ
னத்திற்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெற்றது. அப்போது ஜார்ஜ் பெர்னாண்டஸ் தொழில்துறை அமைச்சராக இருந்தார். ஜெர்மனியில் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பில்பி பெர்னார்ட் ஆட்சி நடந்து
கொண்டிருந்தது. இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்ப டையில் ஜெர்மனியின் சீமன்ஸ் நிறுவனத்திற்கு பெல் நிறுவனத்தை தாரைவார்க்க முயற்சி நடந்தது. அப்போது எஸ்.வி.எஸ்.ராகவன் பெல் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இந்த ஆலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவரும் விரும்பினார். ஆனால் தொழில்துறை செயலாளராக இருந்த கிருஷ்ண மூர்த்தி என்பவர் இந்த ஒப்பந்தத்தின் பின்னால் இருந்தார்.
ஜனதா ஆட்சிக்காலத்தில் திருச்சி பெல் தொழிற் சாலையை பன்னாட்டு நிறுவனமான சீமன்ஸ் நிறுவ னத்திற்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெற்றது. அப்போது ஜார்ஜ் பெர்னாண்டஸ் தொழில்துறை அமைச்சராக இருந்தார். ஜெர்மனியில் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பில்பி பெர்னார்ட் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்ப டையில் ஜெர்மனியின் சீமன்ஸ் நிறுவனத்திற்கு பெல் நிறுவனத்தை தாரைவார்க்க முயற்சி நடந்தது. அப்போது எஸ்.வி.எஸ்.ராகவன் பெல் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இந்த ஆலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவரும் விரும்பினார். ஆனால் தொழில்துறை செயலாளராக இருந்த கிருஷ்ண மூர்த்தி என்பவர் இந்த ஒப்பந்தத்தின் பின்னால் இருந்தார்.
பொதுத்துறை பாதுகாப்பும் என்எல்சி உருவாக்கமும்
திருச்சியில் பெல் தொழிற்சாலை அமைந்ததில் தோழர்கள் பி.ராமமூர்த்தி, அனந்த நம்பியார், ஆர்.உமாநாத், எம்.கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு முக்கியப் பங்கு உண்டு. பெல் தொழிற்சாலை பொ துத்துறையாக நீடிக்க வேண்டும் என்பதற்கான போராட்டத்தை தோழர் பி.ராமமூர்த்தி நடத்தினார். இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் 90 நிமிடம் அவர் உரையாற்றினார். சீமன்ஸ் நிறுவனத்து டனான ஒப்பந்தத்தை விளக்கி சிறப்பான ஆய்வு நூல் ஒன்றையும் எழுதினார். இதனால் தொழிலாளர்கள் போராட்டமும் வெடித்து, திருச்சி பெல் ஆலை மட்டுமல்ல. இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்த பெல் ஆலைகளும் பாதுகாக்கப்பட்டன. ஒப்பந் தத்தில் முக்கியமானவராக இருந்த கிருஷ்ணமூர்த்தி பின்னர் பங்கு பத்திர ஊழலில் சிக்கி சிறை சென்றார்.
நெய்வேலியில் நிலக்கரி சுரங்கமும் மின் உற்பத்தி நிலையமும் அமைந்ததில் தோழர் பி.ராமமூர்த்தியின் பங்கு மகத்தானது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் சிற்பி தோழர் பி.ராமமூர்த்தி அவர்களே ஆவார்.
முல்லைப்பெரியாறு மின்திட்டம் அமைந்ததிலும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நடைமுறைக்கு வந்ததிலும் தோழர் பி.ராமமூர்த்திக்கு பெரும் பங்குண்டு. கேரள அரசுடன் பேசி இந்தத் திட்டங்க ளினால் தமிழ்நாட்டிற்கு பலன் கிடைப்பதற்கு அவர் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளார்.
தமிழ்நாடு- தமிழ்மொழி...
சென்னை மாகாணம் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்ய வேண்டும் என மாநிலங்க ளவையில் தீர்மானம் கொண்டுவந்தார் தோழர் பி.ராமமூர்த்தி. தீர்மானம் விவாதத்திற்கு வந்தபோது அவர் அவையில் இருக்க முடியாத சூழலில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ்குப்தா முன்மொழிந்து பேசினார். அறிஞர் அண்ணா வழிமொழிந்து பேசினார்.
அதேபோல தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்து முதன்முதலில் தமிழில் உரையாற்றியவர் தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள்தான். அவரது உரையைக் கேட்ட நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் பட்ஜெட் போன்ற சிக்கலான பிரச்சனைகள் குறித்து தாய்மொழியில் பேச முடியும் என்பதை பி.ராமமூர்த்தி நிரூபித்துவிட்டார் என்று பாராட்டினார்.
1966ஆம் ஆண்டு கடலூர் சிறையிலிருந்து 15 நாள் பரோலில் வெளியே வந்த தோழர் பி.ஆர். காஞ்சி புரத்திற்குச் சென்று அண்ணாவைச் சந்தித்தார். 1967 தேர்தலில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி உடன்பாடு கண்டு போட்டியிட்டது. அந்தக் கூட்டணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர்க ளில் தோழர் பி.ராமமூர்த்தியும் ஒருவர்.
பொன்மலைத் திடல், தீக்கதிர்
திருச்சி பொன்மலை திடல் மற்றும் சங்கக்கட்டி டம் டி.ஆர்.இ.யு மற்றும் சிஐடியு வசம் இருப்பதில் தோழர் பி.ஆருக்கு முக்கியப் பங்குண்டு. அதேபோல மதுரை புறவழிச்சாலையில் இயங்கிவரும் தீக்கதிர் அலுவலகக் கட்டிடத்திற்கான இடத்தைப் பெறுவதிலும் அங்கு அலுவலகம் மற்றும் அச்சகம் அமைக்கப் பட்டதிலும் தோழர் பி.ஆர். காத்திரமான பங்கை ஆற்றினார்.
தோழர் பி.ராமமூர்த்தி ஒரு மிகச்சிறந்த சொற் பொழிவாளர், சர்வதேச பிரச்சனை துவங்கி உள்ளூர் பிரச்சனைகள் வரை பல மணி நேரம் அவரால் பேச முடியும். தோழர் பி.ராமமூர்த்தி பேசும் பொதுக் கூட்டங்களுக்கு தொழிலாளர்களும் பொதுமக்களும் பெருமளவில் கூடுவார்கள்.
சமூகநீதிப் பார்வை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நிர்வா கக்குழு தேர்தலில் அருந்ததிய மக்களை வாக்களிக் கச்செய்தது தோழர் பி.ஆரின் சாதுர்யத்திற்கும், சமூக நீதி பார்வைக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.
தோழர் பி.ராமமூர்த்தி பன்முக ஆற்றல் கொண்ட ஒரு தலைவர். விடுதலைப் போராட்ட காலம் துவங்கி தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவிலும் மதிப்பு மிக்க தலைவராக விளங்கியவர். அவர் தன்னுடைய ஆற்றலையும் வல்லமையையும் உழைக்கும் மக்க ளின் நலனுக்காகவே பயன்படுத்தினார். அதனால் தான் அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் அவரது சாதனையும், சரித்திரமும் உழைக் கும் மக்களால் நன்றியோடு நினைவு கூரப்படுகிறது.