articles

img

சட்டபூர்வமாக சர்வாதிகார ஆட்சி நடத்திய பாஜக-ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

தருமபுரி, ஜூன் 12- சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை உள்ளிட்ட முகமைகளை வைத்துக்கொண்டு, சட்டபூர்வமாக சர்வாதிகார ஆட்சி நடத்தியது தான் பாஜக என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரசியல் விளக்க பேர வைக்கூட்டம் தருமபுரி முத்து நினைவு அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து தலைமை  வகித்தார். இக்கூட்டத்தில் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு  உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப் புரையாற்றுகையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது, இந்துக்க ளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மதமோதலை ஏற்படுத் தும் வகையில் பிரதமர் மோடி பேசி  வந்தார். இதுகுறித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தேர்தல் ஆணையத்திடம் புகாரளித் தார். ஆனால், சில ஊடகங்கள் ‘மோடியின் பேச்சுரிமை’ என எழுதி னர். தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களை பெறும் என தேர்த லுக்கு முன்பாகவே, பிரச்சாரம் தொடங்கிவிட்டது. இதனை சில  ஊடகத்தில் விளம்பரமும் செய்த னர். மக்களின் மனநிலையை மாற் றவே இதுபோன்ற பிரச்சாரங்களில் பாஜகவினர் ஈடுபட்டனர். ஒரு கட் டத்தில் பாஜக தலைவர்கள் 400 இடங்களில் வென்றால்தான், இந் திய அரசியலமைப்பு சட்டத்தை  மாற்ற முடியும் என வெளிப்படையா கவே பிரச்சாரம் செய்தனர். இதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பிரச்சாரத்தை பாஜக கைவிட்டது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்று சொல்லும் மோடி, ஒரே கட்ட தேர் தல் நடத்த தைரியம் இல்லை. தேர் தல் நடந்து முடிந்தபிறகு, பாஜக  தனி பெரும்பான்மை பெறும் என அனைத்து ஊடகங்களும் கருத்துக் கணிப்பு வெளியிட்டன. ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது, சில சுற்றுகளில் வாரணாசி தொகுதி யில் மோடி பின்னடைவு என்று ஊட கங்களில் செய்தி வந்தன. மேலும், பாஜக தனி பெரும்பான்மையை இழந்தது. மேலும், தேசிய ஜனநா யக கூட்டணி 43.1 சதவிகிதம், இந் தியா கூட்டணி 41.69 சதவிகித வாக் குகளை பெற்றன. வெறும் 1.62 சத விகித வாக்குகள் அதிகம் பெற்ற பாஜக கூட்டணி, ராஜஸ்தான், மகா ராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பஞ் சாப், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தோல்வியடைந் துள்ளது.

நாடு சுதந்திரமடைந்து 76  ஆண்டுகள் கடந்த நிலையில், உல களவில் வறுமைக்கோட்டிற்கு கீழ்  அதிகமக்கள் வாழும் பட்டியலில் இந்தியா உள்ளது. ஆனால், பாஜக அரசு புதிய நாடாளுமன்றம் கட்டி யுள்ளனர். மக்கள் தொகை அடிப்ப டையில் நாடாளுமன்ற தொகுதிக ளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று பாஜக முடிவெடுத் துள்ளது. அப்படி மக்கள் தொகை அடிப்படையில் உறுப்பினர் எண் ணிக்கையை உயர்த்தினால், தென் னிந்தியாவுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காது. இந்த நடைமுறைக்கு கூட்டணியில் இருக்கும் பாஜக கூட் டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு ஒப்புகொள்ளமாட்டார். இந்தியா கூட்டணி, சமூக ரீதியான, கல்வி ரீதியான, பொருளாதார ரீதியாக  கணக்கெடுப்பு நடத்த வேண்டும்  என தேர்தல் அறிக்கையில் தெரி வித்துள்ளது. பொருளாதார ரீதி யான கணக்கெடுப்பு நடத்தினால் தான், சமூகத்தில் எவ்வளவு மக்கள் பின்னுக்குதள்ளப்பட்டனர் என்பது தெரியவரும். நிதிஷ்குமார் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த  வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால், பாஜக நடத்த மறுக்கிறது. தேர்தல் அறிக்கையில் கூறியது போல் சமூகம், கல்வி, பொருளா தார ரீதியான கணக்கெடுப்பு நடத் தப்படும் வரை மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.

பாஜக தேர்தலில் தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல என்பதை மக் கள் நிரூபித்துள்ளனர். ராமர்  கோவில் அரசியலை முன்னெடுத்த பாஜக, அயோத்தி தொகுதியி லேயே படுதோல்வி அடைந்துள் ளது. ஊழல்வாதிகளை தூய்மைப் படுத்தும் ‘வாசிங் மெசின்’ ஆக  பாஜக செயல்பட்டது. கட்சிகளை  உடைப்பது பாஜகவுக்கு கைவந்த கலை. மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் கட் சிகளை பிளவுபடுத்தினர். இரண்டு மாநில முதலமைச்சர்களை சிறை யில் தள்ளினர். சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை  ஆகியவற்றைக் கையில் வைத்துக் கொண்டு, சட்டபூர்வமாக சர்வாதி கார ஆட்சி நடத்தியது பாஜக.  பெரும்பான்மையை இழந்த பாஜக, மீண்டும் தனது மேலாதிக்க நிலையை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. பாஜகவின் இந் துத்துவா -  கார்ப்பரேட் அரசிய லுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட வேண்டும், என அழைப்பு விடுத்தார்.

இக்கூட்டத்தில், சிபிஎம் மாநில  செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்தி ரன், மாவட்டச் செயலாளர் ஏ. குமார், மாநிலக்குழு உறுப்பினர் ரா. சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வே.விஸ்வநாதன், எஸ்.கிரைஸாமேரி, மாவட்டக்குழு  உறுப்பினர் கே.என்.மல்லையன், ஒன்றியச் செயலாளர்கள் என்.கந்த சாமி, எஸ்.எஸ்.சின்னராசு, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.