articles

img

சந்திராயன்-3இன் பயணம்

     ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் -3 40 நாட்கள் கழித்து ஆகஸ்ட் 23-24இல் நிலவில் இறங்கும். பூமியின் சுற்றுவட்டப் பாதைகளில் உயர்த்தப்பட்டு விடுபடு விசையை அடைந்து பூமியின் புவி ஈர்ப்பிலிருந்து விடுபட்டு நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும். அதை தொடர்ந்து  நிலவின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்படும். 100கிமீ நிலவு சுற்றுவட்டப்பாதையை அடைந்தவுடன் லேண்டர் வாகனமும் ரோவர் வாகனமும் உந்துகருவியிலிருந்து பிரிந்துவிடும்.