Kerala

img

கேரள தலைமைச் செயலக பணியாளர்  கூட்டுறவு சங்க தேர்தல் ; இடதுசாரி ஆதரவு முன்னணி வெற்றி

திருவனந்தபுரம்:
கே
ரள தலைமைச் செயலகப் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தலில் கேரள தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் தலைமை வகிக்கும் கூட்டுறவு முன்னணியின் கீழ் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். 5000க்கும் அதிகமானோர் வாக்களித்த இத்தேர்தலில் 2500க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இடதுசாரி ஆதரவு கூட்டுறவு முன்னணி வெற்றிபெற்றுள்ளது. கூட்டுறவு சங்கத்தின்  தலைவராக என்.சுபாஷ், துணைத்தலைவராக எஸ்.ஸ்ரீகேஷ், செயலாளராக எஸ்.ரபீக், பொருளாளராக பி.எஸ்.மனு லாலி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
 

;