வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தமிழகம்

img

மீன்பிடி நிவாரணம் வழங்குவதில் சிக்கல்: புதுவையில் ஆலோசனை

புதுச்சேரி:
மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்க்க கடலோர சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் மீன்வளத்துறை அமைச்சர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 23 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தடைக்கால உதவியில் பயன் பெற்ற நிலையில், அரசு ஊழியர், மீன்பிடித் தொழிலுக்கு சம்பந்தப்படாதவர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, கடந்த ஆண்டு 19 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு புதுச்சேரி அரசு மீன் பிடித் தடைக்கால நிவாரண உதவியை வழங்கியது.இதனிடையே, கடந்த ஆண்டு தடைக்கால நிவாரண உதவியைப் பெற்றவர்களில் மீனவ முதியோர் உதவித் தொகை பெறும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, இந்த ஆண்டு தடைக் கால நிவாரண உதவி வழங் கக்கூடாது என துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள் ளார்.இந்நிலையில், மீன்வளத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மீனவப்பகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களான அன்பழகன், அரசு கொறடா அனந்தராமன், வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், முதலமைச்சரின் நாடாளுமன்றச்செயலர் லட்சுமிநாராயணன் உள்ளிட் டோர் ஆலோசனை நடத்தினர்.அப்போது மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக் கால நிவாரணம், ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்க்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்  குறித்தும் ஆலோசிக்கப் பட்டது.

;