செவ்வாய், டிசம்பர் 1, 2020

tamilnadu

img

பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதால் பதற்றம்

திண்டுக்கல் அருகே பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் சமத்துவபுரத்தில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. அந்த சிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இரவில் காவி சாயத்தை பூசியுள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் அங்கு சென்ற ஒட்டன்சத்திரம் போலீசார், இரவில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு பெரியார் சிலையில் புதிய வர்ணம் பூசியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்று காவல்துறையினர் கொடுத்த உத்தரவாதத்தின் பெயரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். 
இதையடுத்து காவல் துறையினரை முற்றுகையிட்ட திமுகவினர் 2015 ம் ஆண்டு பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக நிர்வாகி சசிக்குமாரே இப்போதும் சிலையை சேதப்படுத்தி உள்ளார் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
 

;