திங்கள், நவம்பர் 23, 2020

tamilnadu

img

தமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை.... தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை:
தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் திருவெற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.   திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளின் 6 மாத கால அவகாசம் செப்டம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இடைத்தேர்தல் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தமிழ்நாடு , கேரளம், அசாம்,மேற்கு வங்க ஆகிய  4 மாநில தலைமைச் செயலாளர்கள் தேர்தல் ஆணை யத்திற்கு கடிதம் எழுதினர். இதையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் கேரளம்,அசாம், மேற்குவங்கம் மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும்   இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலியாக உள்ள இதர நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அந்தந்த மாநில சூழ்நிலை களைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;