தொழிலாளர் நலச்சட்டங்களை சீர்குலைக்கும் மோடி அரசை கண்டித்து ஆவேச மறியல்
44 தொழிலாளர்கள் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் புதனன்று (ஜூலை 9) நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
தென்சென்னை
தென்சென்னை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கிண்டி அஞ்சல் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடை பெற்றது. இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன், வியாபாரிகள் சங்க தலைவர் க.பீம்ராவ், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, ஏஐடியுசி தலை வர்கள் ஏழுமலை, அழகேசன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், டியுடிசி நிர்வாகி தேசிங்கு உள்ளிட்ட 1200 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 600 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடசென்னை
வடசென்னை மாவட்டத்தில் திருவொற்றியூர் டோல்கேட் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் எஸ்.கே. மகேந்திரன், ஆர்.ஜெயராமன், ஆர்.லோகநாதன், ஆர்.மணி மேகலை, (சி ஐடியு), சுரேஷ் (அசோக் லேலண்ட்), தனுஷ்கோடி (பவுண்ட்ரி), நாராயணன் (கார்ப்போரேண்டம்), அருள், தன சேகரன், எம்.எஸ்.மூர்த்தி (ஏஐடியுசி), ஏ.எஸ்.குமார் (ஏஐசிசிடியு), சடையாண்டி (ஏஐயுடியுசி) உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அம்பத்தூர்
அம்பத்தூரில் நடைபெற்ற சாலை மறியலில் சு.பால்சாமி, மா.பூபாலன், (சிஐடியு), ஏ.பி.அன்பழகன் (சாலை போக்குவரத்து), ஆர்.கோபி, எம்.ராபர்ட்ராஜ் (சிபிஎம்), ராஜ்குமார், ராஜா (தொமுச), ஆர்.துரைசாமி, பி.மாரியப்பன் (ஏஐடியுசி), முனுசாமி (ஏஐசிசிடியு), ஸ்டீபன் (ஐஎன்டியுசி), தாமோதரன் (மதிமுக) உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கொருக்குப்பேட்டை
கொருக்குப்பேட்டையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.முருகன், சிபிஐ செயலாளர் எஸ்.வேம்புலி, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.பாக்கியம், தலைவர் எம்.கோடீஸ்வரி, மாமன்ற உறுப்பினர் பா.விமலா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எல்.பி.சரவணத்தமிழன், செயலாளர் ஜி.நித்தியராஜ், மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.அகல்யா, செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆவடி
ஓசிஎப் அனைத்து தொழிற்சங்கள் மற்றும் அசோசியேஷன்களின் கூட்டுப் போராட்டக்குழு சார்பில் ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் ஊர்வலமாகச் சென்ற மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தியன் வங்கி எதிரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார், தொமுச மாநிலத் துணைத் தலைவர் பொண்ணுராம், ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவர் ஜஹாங்கீர், ஏஐசிசிடியு மாநில அமைப்பு செயலாளர் இரணியப்பன் உள்ளிட்ட 2000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். திரூவள்ளூர் திருவள்ளூர் உழவர் சந்தை அருகில் நடைபெற்ற மறியலுக்கு ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் ஜெயப்பால் தலைமை தாங்கினார். ஏஐடியுசி மாவட்ட தலைவர் கஜேந்திரன், எல்பிஎப் தலைவர் பழனி, சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இ.மோகனா, மாவட்ட துணைத் தலைவர் என்.கீதா, சிபிஎம் பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஏ.பச்சையம்மாள், தமுஎகச மாவட்ட செயலாளர் கி.பாரி உள்ளிட்ட சுமார் 150 பேர் கைதாகினர். மீஞ்சூர் மீஞ்சூரில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை நோக்கி சென்ற தொழிலாளர்களை, போலீசார் கயிறு கட்டி தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொன்னேரி திருவொற்றியூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாநில துணைத்தலைவர் கே.விஜயன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் இ.ஜெயவேல், ஜி.விநாயகமூர்த்தி, பி.கதிர்வேல், எஸ்.ஏ.கலாம், விதொச மாவட்ட நிர்வாகி எஸ்.இ.சேகர், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.மதன், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகிகள் பாலன், ஆனந்தன், பார்த்திபன், ஜீவா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சோழவரம் சோழவரம் ஒன்றிய சார்பில் செங்குன்றம் கூட்டுச் சாலையில் நடைபெற்ற மறியலுக்கு ஏஐசிசிடியு மாநில துணைத்தலைவர் எஸ்.ஜானகிராமன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பி.நடேசன், ஏ.ஜி.சந்தானம், எம்.சந்திரசேகரன், எல்லையன், விதொச மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன் உள்ளிட்டு 150 க்கும் மேற்பட்டோர் கைதானார்கள். கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற மறியலுக்கு ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஜெ.அருள் தலைமை தாங்கினார்.இதில் சிஐடியு நிர்வாகிகள் அர்ஜுனன், டி.கோபாலகிருஷ்ணன், இ.ராஜேந்திரன், ஜி.சூரியபிரகாஷ், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், விசிக மாவட்ட செயலாளர் நீலமேகம், ஐஎன்டியுசி நிர்வாகி சம்பத் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கைதாகினர். பெரியபாளையம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட பெரியபாளையம் ஐஓபி வங்கி முன்பு நடைபெற்ற மறியலுக்கு விதொச மாவட்ட பொருளாளர் என்.கங்காதரன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.பத்மா, மூத்த தோழர்கள் கே.செல்வராஜ், பி.ரவி உள்ளிட்ட நூற்றும் மேற்பட்டோர் கைதாகினர். ஆர்.கே.பேட்டை ஆர்.கே.பேட்டையில் நடைபெற்ற மறியலுக்கு அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட நிர்வாக ஏ.சிவபிரசாத் தலைமை தாங்கினார். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, கருப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஜெயந்தி, சுமதி, ஏழுமலை (தவிச), ஆகியோர் உட்பட ஏராளமானோர் கைதாகினர். திருத்தணி திருத்தணியில் நடைபெற்ற மறியலுக்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல்அகமது தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் சி.பெருமாள், சிபிஎம் வட்டச் செயலாளர் வி.அந்தோணி, சிஐடியு நிர்வாகிகள் கரிமுல்லா, ஜெயவேல், செல்வி, பிருந்தா வனம், ரீச்சர், சுமதி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் கைதாகினர். திருவள்ளூர் மாவட்டம் 7 மையங்களில் முழுவதும் 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதாகினர். இதில் 400 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.