கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி சுற்றுலா பயணிகள் அவதிப்படுவது குறித்து ‘தீக்கதிரில்’ ஏப். 26 ஆம் தேதி படங்களுடன் பிரசுரிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி சுற்றுலா பயணிகள் அவதிப்படுவது குறித்து ‘தீக்கதிரில்’ ஏப். 26 ஆம் தேதி படங்களுடன் பிரசுரிக்கப்பட்டது.
சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள கிள்ளை பேரூராட்சிக்குட்பட்டது பிச்சாவரம். இங்கு 5 ஆயிரம் மீ பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகள் இயற்கையின் கொடையாக அமைந்துள்ளது. இந்த காட்டில் சுரபுண்ணை, தில்லை மரங்கள் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் உள்ளது. இதனால் தமிழக வனத்துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பராமரித்து வருகிறது.